உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Friday, January 06, 2012

திருப்பூரில், இன்டர்நெட் மையங்கள் சட்ட விரோதம்


திருப்பூரில், இன்டர்நெட்  மையங்கள் விதிமுறை மீறி செயல்படுவதால், ஆபாச படம் பார்ப்பது போன்ற செயல்கள் அரங்கேறி வருவதோடு, சட்ட விரோத செயல்களும் நடக்கின்றன. திருப்பூரில் 300க்கும் மேற்பட்ட இன்டர்நெட் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இம்மையங்களால் பல்வேறு சட்ட விரோத செயல்கள் நடப்பதால், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இன்டர்நெட் மையங்கள் வெளிப்படையாக அமைவதோடு, கம்ப்யூட்டர் இருக்கும் அறையின் தடுப்பு மூன்று அடிக்கு மேல் இருக்கக் கூடாது. இன்டர்நெட் பயன்படுத்துபவர்கள் குறித்து முழு விவரங்கள், ஆவணங்கள் பெற்ற பிறகே அனுமதிக்க வேண்டும்; எந்த வெப்-சைட் பார்க்கின்றனர்; டவுன்லோடு செய்கின்றனர் என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் "சர்வர்' மூலம் நிர்வாகி பார்த்து, தடை செய்யப்பட்டவையாக இருந்தால் தடுக்க வேண்டும், வெப்கேமரா பொருத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் உள்ளன. திருப்பூரிலுள்ள பெரும்பாலான இன்டர்நெட் மையங்களில் இவ்விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை. ஒவ்வொரு கம்ப்யூட்ட ருக்கும் அறை போல் அமைத்து, கதவுகள் வைக்கப்படுகின்றன. இதனால், இம்மையங்களை தேடிச்செல்லும் இளம் தலைமுறையினர் ஆபாச படங்களை பார்ப்பது, தவறான வெப்சைட்களை பார்வையிடுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர். மேலும், ஆணும், பெண்ணுமாக வரும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்ளே சென்று அமர்ந்து, பல விரும்பத்தகாத செயல்களை அரங்கேற்றி வருகின்றனர். உரிய கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததால், நிர்வாகிக்கும், அவர்கள் எந்த வெப்சைட் பார்க்கின்றனர் என தெரிவ தில்லை. சில இன்டர்நெட் மையங்களில், வாடிக்கையாளர்களை கவர்வதற்காக, எளிதாக ஆபாச வெப்சைட்களுக்குள் செல்வதற்காக வெப்சைட் அட்ரஸ், கம்ப்யூட்டர் திரையிலேயே வைக்கப்படுகிறது. கண்காணிப்பு இல்லாத தைரியத்தில் வரும் இளம் தலைமுறையினர், இதுபோன்ற வெப்-சைட்களை பார்த்து, தடம் மாறும் நிலை தொடர்கிறது. சில மையங்களில் "சிடி'க்கள் போட்டு வழங்கப்படுகிறது. அதேபோல், பாது காப்பு மற்றும் கண்காணிப்பு இல்லாத இம்மையங்கள் மூலம் இ-மெயில் மூலம் மிரட்டல்கள், சட்ட விரோத செயல்கள், தீவிரவாதிகள் தொடர்பு என பல சம்பவங்கள் நடந்து வருகின்றன. விதிமுறைகளுக்கு உட்பட்டு இயங்காத இதுபோன்ற இன்டர்நெட் மையங்களால், திருப்பூரில் அதிகளவு சட்ட விரோத செயல்கள் மற்றும் "சைபர் கிரைம்' குற்றங்கள் அரங்கேறி வருகின்றன. விதிமுறை மீறும் இன்டர்நெட் மையங்கள் குறித்து போலீசார் கண்டுகொள்ளாத நிலையில், புகார் அடிப்படையில் ஆய்வு செய்யும்போது, அதிர்ச்சியளிக்கும் செயல்கள் அரங்கேறி வருவது போலீசாருக்கு தெரியவருகிறது. மூன்று மாதத்துக்கு முன், பி.என்., ரோட்டிலுள்ள இன்டர்நெட் மையத்தில் எஸ்.பி., திடீர் ஆய்வு மேற்கொண்ட போது, ஆபாச வெப்சைட் முகவரிகள் கம்ப்யூட்டர் திரையிலேயே இருந்ததோடு, பலர் பார்த்துக்கொண்டி ருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து கம்ப்யூட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பழைய பஸ் ஸ்டாண்டிலுள்ள இன்டர்நெட் மையங்களில் தெற்கு போலீசார், சில நாட்களுக்கு முன் ஆய்வு செய்தபோது, நான்கு மையங்களில் ஆபாச படங்கள் பார்த்ததும், நிர்வாகிகளும் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. மொத்தம் ஆறு பேர் கைது செய்யப்பட்டு, பின்னர், விடுவிக்கப்பட்டனர். எனவே, திருப்பூ ரிலுள்ள இன்டர்நெட் மையங்கள் அனைத்தையும் முழுமையாக ஆய்வு செய்வதோடு, தொடர்ந்து கண்காணிக்கவும், விதிமுறை மீறி இயங்கும் மையங்களை மூடவும் போலீசார் முன்வர வேண்டும்.

1 comment:

  1. திரு கணேஷ் அவர்களே,

    இணைய மையங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அதேவேளையில் இளைஞர்களின் பாலுறவு அறிவு, தேவைகளை முறைப்படுத்தவும் வேண்டியுள்ளது. அது இணையத்தை மூடுவதில் மட்டும் இல்லை. ஒரு வெளிப்படையான சமுதாயத்தை உருவாக்குவதில் உள்ளது.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...