உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Tuesday, January 17, 2012

செல்போன் மோசடியில் இருந்து தப்பிக்க ?
அந்த நகரை சேர்ந்த அரசு அதிகாரியின் மகன் ஒரு சாப்ட்வேர் பொறியாளர். மொபைல் போனில் எஸ்.எம்.எஸ்., அனுப்பி, ஒரு பெண்ணிடம் நட்பு வயப்பட்டார்.
கொடைக்கானலில் சந்திக்க விரும்புவதாக அப்பெண்ணிடமிருந்து வந்த எஸ்.எம்.எஸ்.,ஐ நம்பி சென்றார். அவரை அழைத்தது பணம் பறிப்புக் கும்பல் என அங்கு சென்ற போதுதான் தெரிந்தது. பின் அக்கும்பலால் அவர் கொலை செய்யப்பட்டார்.

மதுரை வாலிபர் செந்தில்: கிருஷ்ணன் மொபைல் போனில் உங்களுக்கு ஏழரை லட்சம் பவுன்ட் (இந்திய மதிப்பு ரூ.5.50 கோடி) பரிசு தொகை விழுந்திருப்பதாக எஸ்.எம்.எஸ்., தகவல் வந்தது. பரிசுதொகை வழங்க ரூ.ஐந்தரை லட்சம் பண பரிவர்த்தனை செலவுக்கு கொடுக்கும்படியும் தெரிவிக்கப்பட்டது. அவரும் அத்தொகையை இரு தவணைகளாக அனுப்பி வைத்தார். ஆனால் பரிசு தொகை கிடைக்கவில்லை. பின்னர் ஏமாற்றப்பட்டது தெரிந்து புகார் செய்தார். மொபைல் போன், இன்டர்நெட், கிரெடிட், ஏ.டி.எம்., கார்டுகள் மூலம் விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்ப நவீன மோசடிகள் ஒவ்வொரு நாளும் அரங்கேறி வருகின்றன. அறுபது சதவீத இளைஞர்கள் மொபைல் போன்களில், ஆபாச படங்களை டவுன் லோடு செய்கின்றனர் என ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

இதுகுறித்து ஐகோர்ட் வக்கீல் ஆர்.காந்தி கூறியதாவது: மொபைல் போன், இன்டர்நெட்டை முன்னெச்சரிக்கையுடன் கையாள்வதன் மூலம் மோசடிகளில் சிக்காமல் தவிர்க்க முடியும். மொபைல் போன்களை மற்றவர்கள் எடுக்க அனுமதி கூடாது. ஆபாச எஸ்.எம். எஸ்., களுக்கு பதில் அனுப்ப கூடாது. தெரியாத நபர் எஸ்.எம்.எஸ்., அனுப்பினால் பதிலளிக்க கூடாது. "புளுடூத்' உபயோகப்படுத்திய பின், அணைத்து விட வேண்டும். மொபைல் போன்களை தெரிந்த நபர்கள் அல்லது சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் மட்டுமே சர்வீஸ் செய்ய கொடுக்க வேண்டும். "ஐ.எம்.இ.,' நம்பர் வைத்து கொள்ள வேண்டும். "கீ பேடு லாக்' செய்ய வேண்டும். வரும் எஸ்.எம்.எஸ்.,களை உடனுக்குடன் நீக்கி விட வேண்டும்.

இன்டர்நெட்டில் தனிப்பட்ட தகவல்களை தெரிவிக்க கூடாது. படங்களை மெயில் செய்ய கூடாது. இன்டர்நெட்டை உபயோகப்படுத்தும் போது, நீங்கள் தனியாக இருப்பதாக கருத கூடாது. உங்கள் "பாஸ்வேர்டை' யாரிடமும் சொல்ல கூடாது. வீடுகளில் தனி அறைகளில் கம்ப்யூட்டர்கள் வைப்பதை தவிர்த்து எல்லோர் கண்ணில் படும்படியாக வைக்கவும், அதை குழந்தைகள் பயன்படுத்துவதை கண்காணிக்க தவறக்கூடாது. இன்டர்நெட், மொபைல் போன் மூலம் வரும் தகவல்களை நம்பி, யாரையும் சந்திக்க செல்ல கூடாது. கிரெடிட், ஏ.டி.எம்., கார்டுகளில் "பாஸ்வேர்டு' கடினமாக, எளிதில் கண்டுபிடிக்க முடியாதளவு வைத்து கொள்ள வேண்டும். முடிந்தளவு "பாஸ்வேர்டு'களில் எழுத்துக்கள், எண்கள் இருக்கும்படி பார்த்துகொள்ள வேண்டும். வைரஸ் தாக்குதலிருந்து தப்ப, "ஆன்டிவைரஸ் புரோக்கிரம்' செய்ய வேண்டும். தகவல் தொழில் நுட்ப சட்டம் 2000 இத்தகைய குற்றங்களை ஈடுபடுவோரை தண்டிக்க வழி செய்துள்ளது. சட்ட பிரிவு 65-73 வரையிலான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டு வரை சிறை தண்டனை வழங்கவும், ரூ.25 லட்சம் வரை அபராதம் விதிக்கவும் வாய்ப்புள்ளது, என்றார்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...