உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Tuesday, January 31, 2012

போலீஸ்சார் எஸ்எம்எஸ் அனுப்பினால் வாகனத்தின் முழு விவரம் பெறலாம்!

குறுந்தகவல் (எஸ்எம்எஸ்) மூலமாக ஒருசில விநாடிகளில் எந்தவொரு வாகனத்தின் முழு விவரங்களையும் பெற்றிடும் புதிய தொழில்நுட்பத்தை திருப்பூர் மாவட்ட காவல்துறை அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் வாகனத் திருட்டு, விபத்து, விதிமுறை மீறல் போன்றவற்றைக் குறைக்க முடியும் என்று போலீஸôர் தெரிவிக்கின்றனர்.
÷திருப்பூர் மாவட்டத்தில் வாகனத் திருட்டு, வாகன ஓட்டுனர்களின் விதிமீறல் போன்றவை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இக் குற்றச்செயல்களைத் தடுக்க மாவட்ட காவல்துறை சார்பில் வாகனக் கண்காணிப்பு முறை (விடிஎஸ்) என்ற புதிய மென்பொருள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
÷இதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் வாகனத் தணிக்கையில் ஈடுபடும் போலீஸôர், சந்தேகத்துக்குரிய வாகனத்தின் எண்ணை தங்களது அலைபேசி மூலம் இம்மென்பொருளுக்கு குறுந்தகவலாக அனுப்பினால், ஒருசில விநாடிகளில் அவ் வாகனத்தின் உரிமையாளர், அவ்வாகனம் மீதான வழக்குகள் குறித்த அனைத்து விவரங்களையும் பெற முடியும்.

÷இதன்மூலம், அது திருட்டு வாகனமாக இருந்தால் உடனடியாக அவ்விவரங்களை போலீஸôர் தெரிந்துகொண்டு அவ்வாகனத்தை மீட்க முடியும்.
÷இதற்காக முதற்கட்டமாக, தமிழகம், பாண்டிச்சேரி மாநிலங்களில் 2005ம் ஆண்டுக்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட 1.41 கோடி வாகனங்களின் எண்கள் இம்மென்பொருளில் பதிவேற்றப்பட்டுள்ளன. விரைவில், கர்நாடகம், ஆந்திரம், கேரளம், பாண்டிச்சேரியின் பிற பகுதி வாகனங்களின் எண்களும் இம்மென்பொருளில் பதிவேற்றப்பட்டுவிடும் என்று, திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
÷அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியது:
÷அதிகரித்து வரும் வாகனத் திருட்டு, வாகனத்தைப் பயன்படுத்தி நடக்கும் திருட்டு, விபத்து போன்றவற்றைத் தடுக்கவும், வாகனத் தணிக்கையில் போலீஸôரின் பணிகளை எளிமைப்படுத்தவும் இந்த புதிய தொழில்நுட்பம் திருப்பூர் மாவட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ÷ஏற்கனவே, மதுரை, தேனி மாவட்டங்களில் நடைமுறையில் உள்ளபோதும், திருப்பூர் மாவட்டத்திற்கேற்ற கூடுதலான தேவைகளும் மென்பொருளில் சேர்க்கப்பட்டுள்ளன.
÷மேலும், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், செல்ஃபோன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுதல், தலைக்கவசம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல், ஓட்டுனர் உரிமம் மற்றும் காப்பீடு இல்லாமல் வாகனம் ஓட்டுதல், அதிவேகத்துடன் வாகனம் ஓட்டுதல் என 20 வகையான சாலை விதிமுறை மீறல்களை உடனடியாக போலீஸôர் எஸ்எம்எஸ் வாயிலாகவே அவ்வாகன எண்ணில் பதிவு செய்ய முடியும். இதன்மூலம், விதிமுறைகளை பெருமளவில் குறைக்க முடியும்.
÷குறுந்தகவல் மூலம் வாகனத்தின் விவரங்களைப் பெற்றிட, மாவட்டத்திலுள்ள அனைத்து போலீஸôரின் அலைபேசி எண்களும் இந்த மென்பொருளில் சேர்க்கப்பட்டுள்ளன. அந்த அலைபேசி எண்களிலிருந்து அனுப்பும் குறுந்தகவல்களுக்கு மட்டுமே விவரங்கள் கிடைக்கும். பிற அலைபேசி எண்களிலிருந்து அனுப்பும் எஸ்எம்எஸ்களுக்கு விவரங்கள் கிடைக்காது என்றார்.
÷அக்மீ சாஃப்ட்வேர் டெக்னாலஜி என்ற நிறுவனம் சார்பில் இப்புதிய மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்புதிய மென்பொருள் மூலம் வாகனத்தின் விவரங்களை அறியும் முறையை மற்ற மாவட்டங்களிலும் அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Related Posts Plugin for WordPress, Blogger...