உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Saturday, January 21, 2012

தொழில் பாதுகாப்பு குழு ஏற்படுத்த எதிர்பார்ப்பு : மக்கள் பிரதிநிதிகள் முயற்சிப்பார்களா?

திருப்பூர் : பனியன் தொழில் பிரச்னைகளுக்கு தீர்வு காணவும், தொழிலையும், தொழிலாளர்களையும் பாது காக்கும் வகையில், மாவட்ட அளவிலான முத்தரப்பு தொழில் பாதுகாப்பு குழு ஏற்படுத்த வேண்டும். அதற்கு, மாவட்ட நிர்வாகமும், மக்கள் பிரதிநிதிகளும் முயற்சிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொழில் துறையினர் மத்தியில் எழுந்துள்ளது. திருப்பூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்களின் உயிர்த்துடிப்பாக இருப்பது பனியன் தொழில். தொழிலை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல, பல்வேறு சார்பு தொழிற்பிரிவினரும், தொழிலாளர்களும் ஊன்றுகோலாக உள்ளனர். கடந்த 30 ஆண்டுகால வரலாற்றில், பனியன் தொழில் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் வேகமாக பயணித்தது. குறிப்பாக, ஏற்று மதி வர்த்தகம் தலைதூக்கிய பிறகு, சார்பு தொழில் பிரிவுகளும் சேர்ந்து வளர்ந்தன; திருப்பூரின் பொருளாதாரம் மேம்பட்டது. நீண்ட நாளைய உழைப்பை தொடர்ந்து, ஆண்டுக்கு 12 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி வர்த்தகமும், 6,000 கோடி ரூபாய் அளவுக்கு உள்நாட்டு வர்த்தகமும் நடந்து வருகிறது. கடந்த 2007ம் ஆண்டு இறுதியில் இருந்து, பனி யன் தொழில் பல்வேறு தொந்தரவுகளை நேருக்கு நேர் சந்தித்து வருகிறது. வரலாறு காணாத பிரச்னைகளால், பனியன் தொழில் மந்தமாகும் சூழல் ஏற்பட்டது. குறிப்பாக, நீடித்து வரும் சாயப்பிரச்னையால், பனியன் தொழில் மற்றும் தொழிலாளர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாக மாறியுள்ளது. சாயத்தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டிருந்த வெளிமாவட்ட தொழிலாளர்கள், அவரவர் ஊர்களுக்கு திரும்பிச் சென்றுள்ளனர்.
பருத்தி, பருத்தி நூல் வர்த்தகம் தொடர்பான கொள்கை, ஏற்றுமதிக்கான சலுகை, வெளிநாட்டு இறக்குமதிகளுக்கு சலுகை வழங்கி, உள்நாட்டு ஏற்றுமதியாளர்களுக்கும், உள்நாட்டு வர்த்தகர்களுக்கும் நெருக்கடி ஏற்படுத்துவது என ஜவுளித்தொழில் வளர்ச்சிக்கு எதிராகவே மத்திய அரசு கொள்கைகள் அமைந்துள்ளன. மத்திய அரசின் 10.3 சதவீத கலால் வரி விதிப்பு, "டிராபேக்' சலுகை குறைப்பு என கடந்த சில ஆண்டுகளாக ஜவுளி தொழிலுக்கு தொடர் சோதனைகள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக, திருப்பூர் பனியன் உற்பத்தியாளர்களுக்கு, நூல் கொள்முதல், சாயத்தொழில், சலுகைகள் குறைப்பு என, பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. ஒவ்வொரு தொழில் அமைப்புகளும் நேரடியாக அரசுக்கு கோரிக்கை விடுத்தும் தீர்வு கிடைக்கவில்லை. எனவே, பனியன் தொழிலை பாதுகாக்கும் வகையில், அனைத்து தொழிற்பிரிவினர், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் அடங்கிய முத்தரப்பு தொழில் பாதுகாப்பு குழு ஏற்படுத்த வேண்டும்.கலெக்டர் தலைமையில் குழு அமைத்து, குறிப்பிட்ட இடைவெளியில் கூடிப்பேசும்போது, தொழில் நிலவரங்கள் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். அப்போது எடுக்கப்படும்நடவடிக்கை மூலமாக பிரச்னைகள் களைய வாய்ப்புள்ளது. மத்திய அரசு தலையிட வேண்டிய பிரச்னையாக இருந்தால், நடவடிக்கை எடுக்கக்கோரி, தமிழக அரசு உடனடியாக வலியுறுத்த முடியும்.
பல லட்சம் தொழிலாளர்கள் பயனடையும் இத்தொழில் மீது, அரசின் கண்காணிப்பு தொடர்ந்து இருக்க வேண்டும். தற்கொலை தடுப்பு குழுபோல், திடீரென காலாவதியாகி விடவும் கூடாது. எனவே, கலெக்டர் தலைமையில், முத்தரப்பு தொழில் பாதுகாப்பு குழு அமைக்க, அமைச்சர், எம்.பி., - எம்.எல்.ஏ., மேயர், கவுன்சிலர் என மக்கள் பிரதிநிதிகள் ஒன்றுபட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழில் துறையினர் எதிர்பார்க்கின்றனர்

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...