உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Wednesday, January 18, 2012

திருப்பூர் நொய்யல் நதிக்கரையில் பொங்கல் திருவிழா

திருப்பூர், ஜன. 16: நொய்யல் நதிக்கரையில் பொங்கல் திருவிழா கடந்த இருநாட்கள் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
வேலைக்காக திருப்பூரில் நோக்கி வந்துள்ள பல்வேறு தரப்பினரும் தங்கள் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் விதமாக, திருப்பூரில் நொய்யல் சீரமைப்புக் குழு சார்பில் பொங்கல் திருவிழா கொண்டாடப்படுகிறது. அதன் 2ம் ஆண்டு பொங்கல் விழா, வளம் சாலை- நொய்யல் நதிக்கரையில் ஞாயிற்றுக்கிழமை துவங்கியது.
முதல்நிகழ்ச்சியாக, ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு திருப்பூர் மாநகராட்சி, 31வது வார்டைச் சேர்ந்த 108 பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர். அப்பெண்கள் பொங்கல் வைப்பதற்குத் தேவையான பொருட்களை துணை மேயர் சு.குணசேகரன் வழங்கினார். இப்பொங்கல் விழாவை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் துவக்கிவைத்து சிறப்புரையாற்றினார்.
நொய்யல் சீரமைப்புக் குழு தலைவர் அகில் எஸ்.ரத்தினசாமி தலைமை தாங்கினார். வளம் டிரஸ்ட் நிர்வாகி கே.சண்முகராஜ் வரவேற்றார். மேயர் ஏ.விசாலாட்சி, மாவட்ட ஆட்சியர் எம்.மதிவாணன் உள்பட பலர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, மாலை 4 மணிக்கு மங்கள இசை, தப்பாட்ட நிகழ்ச்சி, 5 மணிக்கு விகடகவி கலைக்குழுவினரின் கிராமிய கலை நிகழ்ச்சி, இரவு 9 மணிக்கு கண் கவரும் வாண வேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவ்விழாவையொட்டி, நொய்யல் கரை- வளம் சாலையில், ராட்டினம், திண்பண்டக் கடைகள், கரும்புக்கடைகள், பொம்மைக் கடைகள் என திருவிழா ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன.ஆயிரக் கணக்கான மக்கள் இவ்விழாவில் பங்கேற்று நிகழ்ச்சிகளை கண்டு களித்தனர். விழாவின் 2ம் நாள் நிகழ்ச்சியாக, திங்கள்கிழமை மாலை 4 மணிக்கு, மங்கள இசை, தப்பாட்ட நிகழ்ச்சி, 5 மணிக்கு விகடகவி கலைக்குழுவினரின் கிராமிய நிகழ்ச்சி, 6 மணிக்கு விகாஸ் வித்யாலயா பள்ளி குழந்தைகளின் நடன நாட்டிய நிகழ்ச்சி, இரவு 9 மணிக்கு வாணவேடிக்கை ஆகியவை நடத்தப்பட்டன.
அடுத்த ஆண்டு நொய்யலில் படகு சவாரி விட்டு இவ்விழா மேலும் சிறப்பாகக் கொண்டாடப்படும் என்று நொய்யல் சீரமைப்புக் குழுவினர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...