உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Tuesday, January 31, 2012

பிளாக்கர் வலைபூக்களில் கூகுளின் அதிரடி மாற்றம் - அலெக்சா ரேங்க் காலி

கூகுள் வழங்கும் பிளாக்கர் தளத்தின் மூலம் வலைப்பூக்களை உருவாக்கி பயன்படுத்தி நம் அனுபவங்களையும், கருத்துக்களையும் வாசகர்களிடையே பகிந்து வருகிறோம். கூகுள் தனது சேவைகளில் அடிக்கடி ஏதாவது சில மாற்றங்களை செய்து வருவது இயல்பு. அந்த வகையில் பிளாக்கர் வலைபூக்களில் ஒரு அதிரடி மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இது வரை நம் பிளாக்கரின் வலைபூக்களின் URL .com முடியும் படி இருக்கும் ஆனால் இனி வலைப்பூக்களின் URL .in என முடியும் படி இருக்கும்.

உதாரணமாக 
இப்பொழுது - www.ganeshdigitalvideos.blogspot.in

இந்த மாற்றத்தை பற்றி கூகுள் எந்த அறிக்கையையும் இது வரை வெளியிட வில்லை. ஆதலால் இந்த மாற்றங்கள் இந்திய வலைபூக்களில் மட்டும் தான் ஏற்ப்பட்டு இருக்கிறதா இல்லை மற்ற நாட்டினருக்கும் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதா என எந்த தகவலும் இல்லை. 

இந்த மாற்றத்தினால் இதுவரை வலைப்பூக்கள் பெற்று இருந்த அலெக்சா மறைந்து விட்டது. பழைய படி ஒரு கோடியில் இருந்து ஆரம்பிக்கிறது. இது அனைவருக்கும் பெறும் ஏமாற்றத்தை அளித்து உள்ளது. குறிப்பாக அலேக்சாவில் முன்னணியில் இருந்த கேபிள் சங்கர், சிபி போன்றோரின் அலெக்சா ரேங்க் போய் விட்டது. ஆனால் வலைப்பூக்களுக்கு கஸ்டம் டொமைன் பயன்படுத்தி வந்த வலைப்பூக்களுக்கு எந்த மாற்றமும் ஏற்ப்படவில்லை என்பது சற்று ஆறுதல் அளிக்கும் செய்தி.

பழைய முகவரியில் இருந்து புதிய முகவரிக்கும் தானாகவே redirect ஆவதால் நம் தளத்திற்கு வரும் வாசகர்கள் குறைய வாய்ப்பில்லை என்பதால் இரண்டு மாதங்களில் அலெக்சா ரேங்க் பழைய நிலைமைக்கு வந்துவிடும். மற்றும் பாலோயர்ஸ், Email subscriber வசதிகளிலும் எந்த மாற்றமும் ஏற்ப்படவில்லை. பழைய படியே இருக்கும்.

Note: வெளிநாட்டு நண்பர்கள் வலைப்பூக்கள் எந்த URL முடிகிறது என கூறவும்.

டிஸ்கி: காலையில் மொபைலில் அழைத்து இந்த தகவலை தெரிவித்த தமிழ்வாசி பிரகாஷ் அவர்களுக்கு நன்றி.

UPDATE
இந்த மாற்றத்தினால் தமிழ்மண திரட்டியில் பதிவை இணைக்கும் வலைப்பூக்கள் மீண்டும் அப்ரூவல் வாங்க வேண்டும் இல்லையெண்றால் உங்கள் பதிவு இணையாது. இந்த லிங்கில்http://www.tamilmanam.net/user_blog_submission.php கிளிக் செய்து தமிழ்மண அப்ரூவலுக்கு பதிவு செய்யவும். 

இதில் ஒரே நாளில் பல விண்ணப்பங்கள் குவியும் என்பதால் தமிழ்மண நிர்வாகத்திற்கு பணிச்சுமையை அதிகரிக்கும். தமிழ்மண நிர்வாகம் நேரத்தை ஒதுக்கி இந்த பணியை துரிதமாக முடிக்கும் என நம்புவோம்.

-தகவலுக்கு நன்றி பலேபிரபு 
Related Posts Plugin for WordPress, Blogger...