உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Tuesday, January 17, 2012

காய்கறியிலே கதிரியக்கம் இருப்பதால் அணுமின் நிலையத்தால் கதிரியக்கம் ஏற்படும் என யாரும் பீதியடைய வேண்டாம் ?

காய்கறிகளிலும், மனிதர்களிடமும், மருத்துவத் துறையிலும் இயற்கையாகவே கதிரியக்கம் உள்ளதால் அணுமின் நிலையத்தால் கதிரியக்கம் ஏற்படும் என யாரும் பீதியடைய வேண்டாம் என அணு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 
இயற்கை மற்றும் செயற்கை கதிர்வீச்சுகள் குறித்த கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடந்தது.இதில் இந்திய அணுமின் கழக தொழில்நுட்ப பிரிவு இயக்குனர் விஞ்ஞானி பரத்வாஜ் பேசியதாவது: கதிர்வீச்சுகள் இயற்கையாகவும், செயற்கையாகவும் உள்ளன. அணுமின் நிலையத்தால் தான் கதிர்வீச்சு உள்ளதாக நினைக்க வேண்டாம். சூரியன் மற்றும் நட்சத்திரங்களில் இருந்து கதிர்வீச்சு வெளிவருகிறது. 

இந்திய அணுமின் நிலையங்கள் பாதுகாப்பானதாக உள்ளன. அணுமின் நிலைய பகுதிகளின் கதிர்வீச்சு அளவும், மற்ற பகுதிகளின் கதிர்வீச்சு அளவுக்கும், எந்த வேறுபாடுமில்லை. எனவே அணுமின் நிலையத்தால் தான் கதிர்வீச்சு என பயப்பட வேண்டாம். நாம் உண்ணும் உணவு, மருத்துவ பரிசோதனை போன்றவற்றிலும் கதிரியக்கம் உள்ளது. கதிரியக்கத்தால் புற்றுநோய் வருவதாக கூறப்படுவது தவறானது. மது, புகையிலை போன்ற பல்வேறு காரணங்களால் தான் புற்றுநோய் அதிகம் வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன. கல்பாக்கம் அணுமின் நிலைய பகுதியில் அவ்வப்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அங்கு சுற்றுச்சூழலில் எந்த மாற்றமும் இல்லை. 

கல்பாக்கம் அணுமின் நிலையத்தை சுற்றியுள்ள பகுதி மக்களின் உடல்நலனை பரிசோதிக்க தனியார் மருத்துவமனையுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. கூடங்குளம் மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. அங்கு நான்கு மாதங்களுக்குள் மின் உற்பத்தி தொடங்கப்படும் என கூறினார்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...