உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Sunday, January 29, 2012

இலங்கை உற்பத்திகளுக்கு தமிழ்நாட்டில் வந்தது தடை.


இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களை இந்தியாவின் தமிழ் நாட்டிலுள்ள கடைகளின் முன்பாக உள்ள அலுமாரிகளில் காட்சிக்கு வைக்க வேண்டாம் எனவும் அவ்வாறு வைக்கப்பட்டுள்ளவற்றை உடன் அகற்றுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.


தமிழ்நாடு அரச நகர கூட்டுறவுச் சங்கங்களின் மூத்த அலுவலர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். "இலங்கைப் பொருள் களைப் புறக்கணிப்போம்" என்ற அமைப்பு மேற்கொண்ட தீவிர பிரசாரங்களை அடுத்து சக்தி சரவணன் என்ற மூத்த அதிகாரி இந்த உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார். தமிழக அரசு ஏற்கனவே இலங்கைக்கு எதிராக தமிழக சட்ட சபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் இப்போது இலங்கை உற்பத்திப் பொருள்களுக்கு தடைவிதிக்க வேண்டும் என அரச கூட்டுறவுச் சங்கங்களே கோரிக்கை விடுத்துள்ளதை அடுத்து தமிழகத்தில் உள்ள அரச நகர கூட்டுறவுச் சங்கங்களின் கடைகளின் முன்னால் உள்ள அலுமாரிகளிலிருந்து அந்தப்  பொருள்கள் அகற்றப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

இலங்கையில் உற்பத்தியாகும் பிஸ்கட், சொக்கலேட், மருந்துப் பொருள்கள் ஆகியவற்றுக்கே இந்தத் தடை விதிக்கப்பட் டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...