உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Monday, January 30, 2012

வலைப்பதிவர்களுக்காக...உங்கள் வலைத்தளத்தில் காப்பி எடுக்கும் போது தானகவே உங்கள் பதிவின் உரலும். மேலும் படிக்க: வலைப்பதிவர்களுக்காக...உங்கள் வலைத்தளத்தில் காப்பி எடுக்கும் போது தானகவே உங்கள் பதிவின் உரலும். ~ புரியாத கிறுக்கல்கள் http://gsr-gentle.blogspot.com/2012/01/add-read-more-url-when-text-copied-your.html#ixzz1kxyJOJtN ஜிஎஸ்ஆர்

வணக்கம் நண்பர்களே இந்த பதிவு வலைப்பதிவுகள் எழுதும் நண்பர்களுக்காக, உங்களில் சிலர் சில வலைத்தளங்களில் ஏதாவது ஒரு தகவலை காப்பி எடுத்து வேர்ட் பைலிலோ அல்லது இன்ன பிறவற்றில் பேஸ்ட் செய்யும் போது நாம் காப்பி எடுத்த தகவலோடு அந்த பதிவின் உரலும் (Read more :-http://gsr-gentle.blogspot.com) கூடவே உங்கள் கிளிப்பேர்டில் வந்து இருக்கும் நாம் இந்த பதிவின் வழியாக பார்க்க போவதும் இதைப்பற்றி தான். நான் என்ன சொல்கிறேன் என்பது சரியாக புரியாதவர்கள் என் தளத்தில் இருந்து ஏதாவது ஒரு பகுதியையோ அல்லது ஒரு எழுத்தையோ காப்பி எடுத்து பேஸ்ட் செய்து பாருங்கள் புரியும்.

இனி நீங்கள் செய்ய வேண்டியது tynt™ publisher tools தளத்திற்கு சென்று அவர்கள் கேட்கும் தகவல்களை கொடுத்து உங்களுக்கென ஒரு அக்கவுண்ட் உருவாக்கவும்.நீங்கள் அக்கவுண்ட் உருவாக்கியதும் கீழிருக்கும் படத்தில் உள்ளது போல ஒரு பக்கம் திறக்கும் அதில் உங்கள் தளத்துக்கான ஸ்கிரிப்ட் வந்திருக்கும், ஸ்கிரிப்ட் காப்பி எடுத்து உங்கள் பிளாக்கர் தளம் திறந்து Design-> Edit Html சென்று Ctrl +F அழுத்தி <head> என்பதை கண்டுபிடித்து அதற்கு மேலாக நீங்கள் காப்பி எடுத்த ஸ்கிரிப்ட்டை பேஸ்ட் செய்து விடவும் அவ்வளவு தான். முடிந்தால் ஸ்கிரிப்ட் பேஸ்ட் செய்யும் முன், ஸ்கிரிப்டின் தொடக்கத்தில் <!—XXXXXXX Start--> ஸ்கிரிப்டின் முடிவில் <!—XXXXXXX End--> இப்படியாக சேர்த்து விடுங்கள் XXXXXXX என்பதில் உங்களுக்கு புரியும் வகையிலான தலைப்பை கொடுத்து விடுங்கள் பின்னாளில் தேவையில்லையென்றால் நீக்குவதற்கு ஸ்கிரிப்ட் கண்டுபிடிக்க உதவியாய் இருக்கும்.நீங்கள் இதில் கூடுதலாக மாற்றங்கள் செய்ய விரும்பினால் Customize Attribution கிளிக்குவதன் மூலம் உங்களுக்கு தேவையான மாற்றங்களை செய்து கொள்ள முடியும்.

கூடவே ஒரு செய்தி இதை வைப்பதால் மட்டும் காப்பி எடுத்தவர்கள் உங்கள் பதிவின் உரலை இனைப்பார்கள் என்று கணவு காண வேண்டாம் அழகாக டெலிட் செய்து விடுவார்கள் அது மட்டுமல்லாமல் இது போன்ற தளங்களில் காப்பி எடுக்கும் போது கூடவே வரும் URL வராமல் செய்வதற்கான வழிகளும் இனையத்தில் இருக்கிறது.

என்ன நண்பர்களே பதிவு உங்களுக்கு உதவியானதாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பரிந்துரை செய்யுங்கள்.

குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


வாழ்க வளமுடன்

மேலும் படிக்க: வலைப்பதிவர்களுக்காக...உங்கள் வலைத்தளத்தில் காப்பி எடுக்கும் போது தானகவே உங்கள் பதிவின் உரலும். ~ புரியாத கிறுக்கல்கள் http://gsr-gentle.blogspot.com/2012/01/add-read-more-url-when-text-copied-your.html#ixzz1kxxgGhBS 
ஜிஎஸ்ஆர் 

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...