உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Sunday, January 22, 2012

சாப்ட்வேர் இல்லாமல் ஸ்கிரீன்ஷாட் எடுப்பது எப்படி? [screenshots]

எந்த ஒரு மென்பொருள் [சாப்ட்வேர் ] தரவிறக்கமும் செய்யாமல் எளிதாக நம்  தட்டச்சுப் பகையைப்  பயன்படுத்தி  ஸ்கிரீன்ஷாட்  எடுக்கலாம்.
நம்   மானிட்டரில் தெரியும் வலைப் பக்கத்தைக் காட்டவோ அல்லது செயல்முறை விளக்கத்தைச் சொல்லவோ சின்னச் சின்ன ஸ்கிரீன்ஷாட்டுகளைப் பயன்படுத்துவோம்.
இதற்கு சிறிய அளவிலான நிறைய மென்பொருட்கள் இணையத்தில் உள்ளன.அவற்றைத் தரவிறக்கம் செய்து நம் கணிணியில் சேமித்து வைத்துப் பயன் படுத்துவோம்.

 அதற்கு வேலையே இல்லாமல் ஒரு எளிய முறையில் நம் கீபோர்டு [தட்டச்சு/ விசைப்பலகை] கீ பயன்படுத்தியே ஸ்கிரீன் ஷாட் எடுக்க முடியும்.
நம் கீ போர்டில் மெயின் பகுதிக்குக் கீழாக F12 கீ க்கு கீழாக ஒரு கீ Printscrc/sysRq
என இருக்கும் பாருங்கள். அதுதான் கணிணித் திரையில் தெரியும் பக்கத்தை ஸ்கிரீன்ஷாட் எடுக்கப் பயன்படுகிறது.

இந்த ஸ்கிரீன் ஷாட் படத்தைப் பாருங்கள்.நாம் விரும்பும் மானிட்டர் திரைப் பக்கத்தை  திறந்து வைத்து விட்டு Printscrc/sysRq கீ யை ஒருமுறை அழுத்துங்கள்.
பின்னர்  நம் கணிணியின்    Start->all Programs------>Accessories------>Paint. புரோக்ராம் ஓபன் செய்து கொள்ளவும்.அல்லது பெயிண்ட் புரோகிராமை டெஸ்க்டாப்பில் ஷார்ட்கட் டாக வைத்திருந்தாலும் ஓபன் செய்து கொள்ளுங்கள்.
பெயிண்ட்டில்  Edit பட்டனைக் கிளிக் செய்து paste option கிளிக் செய்ய ஸ்கிரீன் ஷாட் படம்  திரையில் தோன்றும்.அதன் அளவை மாற்ற விரும்பினால்   Images கிளிக் செய்து attributesஓபன் செய்தால் கிடைக்கும் பகுதியில் மாற்றம் [crop]செய்து கொள்ளலாம்.
பின்னர் அதை சேவ் செய்யும் போது ஃபைல் வகையில் .jpeg  பார்மட்டில் சேமித்துக் கொள்ளலாம்.
 பெயிண்ட்டில் உள்ள file option ஓப்பன் செய்து கிடைக்கும் வசதிகளைப் பயன்படுத்தி இந்த ஸ்கிரீன்ஷாட்டை பிரிண்ட் எடுக்கவோ அல்லது
நேரிடையாக மின்னஞ்சல் இணைப்பாக  அனுப்பவோ செய்யலாம்.[இதற்கு அவுட்லுக் மெயில் எனேபில் ஆகியிருக்கனும்.]
கணிணியில் சேமித்துக் கொண்டு எளிதாக நம் வலைப் பக்கத்திற்கும் ஏற்றலாம்.

Thaks to கண்மணி/kanmani
http://bloggertipsintamil.blogspot.com/2010/02/screenshots.html

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...