உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Sunday, January 22, 2012

அண்ணா பல்கலை சார்பில் முதுகலை நுழைவு தேர்வு – TANCET 2012 முழு விவரங்கள்


தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம், 40-க்கும் மேற்பட்ட பொறியியல், மேலாண்மைக் கல்லூரிகளில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. மற்றும் எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் உள்ளிட்ட முதுநிலைப் படிப்புகளில் சேர டான்செட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில் ஒவ்வோர் ஆண்டும் நடத்தப்படுகிறது.
நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்களை பிப்ரவரி முதல் வாரத்தில் பதிவு செய்ய மாணவர்கள் அனுமதிக்கப்படுவர். சென்னை அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட 15 மையங்களில் நேரடிப் பதிவு, ஆன்-லைன் மூலம் மாணவர்கள் பதிவு செய்யலாம். 15 மையங்களில் தேர்வு: இந்த நுழைவுத் தேர்வு சென்னை அண்ணா பல்கலைக்கழகம், கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி (ஜி.சி.டி), சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உள்பட தமிழகம் முழுவதும் 15 மையங்களில் நடத்தப்படும்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்ப விநியோகம்:
* விண்ணப்ப விநியோகம் துவங்கும் நாள் (ஆன்லைனில் பதிவு [Spot Registration Through Internet] மற்றும் நேரடியாக விண்ணப்பிக்க):  01/02/2012
* விண்ணப்ப விநியோகம் முடியும் நாள் (ஆன்லைனில் பதிவு [Spot Registration Through Internet] மற்றும் நேரடியாக விண்ணப்பிக்க):  23/02/2012 *
* சென்னையில் மட்டும் 25/02/2012 வரை விண்ணப்பிக்கலாம்.
குறிப்பு: நேரடி பதிவு, ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்கள் தவிர
தேர்வு:
MBA படிப்புகளுக்கு – மார்ச் 31 காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை
MCA படிப்புகளுக்கு – மார்ச் 31 மதியம் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை
M.E, M.TECH., M.ARCH, M.PLAN படிப்புகளுக்கு – ஏப்ரல் 1 காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை
விண்ணப்பத்தின் விலை : ரூ. 500 (SC/ST மாணவர்களுக்கு ரூ. 250)
தேர்வு எழுத தகுதியான மாணவர்கள் :
MBA: ஏதாவது இளநிலை (Bachelor) படிப்பை முடித்திருக்க வேண்டும் அல்லது இறுதியாண்டு படித்துக்கொண்டிருக்க வேண்டும். 50% தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்(45% for Reserved Category).
MCA: ஏதாவது இளநிலை (Bachelor) படிப்பை முடித்திருக்க வேண்டும் அல்லது இறுதியாண்டு படித்துக்கொண்டிருக்க வேண்டும். 50% தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்(45% for Reserved Category). 12ஆம் வகுப்பில் கணிதம் படித்திருக்க வேண்டும்.
ME/M.Tech: ஒவ்வொரு துறைக்குமான முழு தகுதி விவரங்கள் அண்ணா பல்கலை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. (Click Here)
இந்தேர்வை பற்றிய முழு விபரங்கள் http://www.annauniv.edu/tancet2012 இந்த இணையதளத்தில் உள்ளது.
வழிகாட்டி குழு: இது தொடர்பான மேலான சந்தேகங்களுக்கு எமது கல்விகளஞ்சியத்தின் கல்வி வழிகாட்டி குழுவை தொடர்பு கொள்ளவும்,
தொடர்புக்கு: Phone +919841464521, 9940611315 | Email:  kalvikalanjiam@gmail.com
கல்வி களஞ்சியம் (www.kalvikalanjiam.com)
கல்விப்பணியில் என்றும் உங்களுடன்
Posted by kalviadmin on January 22, 2012

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...