உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Sunday, February 05, 2012

வேளாண் அவலம்: 100 நாள் ஊழல் திட்டம்!


'மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டம்' என்ற பெயரில் நாடு முழுக்க அமலில் இருக்கும் 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டம், இன்றைக்கு இந்தியா முழுமையும் விவசாய வேலைகளுக்கு வேட்டு வைத்துக் கொண்டிருக்கிறது.

கிட்டத்தட்ட வேலையே செய்யாமல், தினசரி குறிப்பிட்ட தொகை சம்பளமாக வருவதால், பலரும் இந்த 100 நாள் வேலைக்குத்தான் போகிறார்கள். விவசாய வேலைகளுக்கு வருவதே இல்லை. குளம், வாய்க்கால் என்று எல்லாவற்றையும் புனரமைக்கிறோம் என்கிற பெயரில், அங்கே முளைத்துக்கிடக்கும் புற்களை லேசாக சுரண்டி விட்டு, வேலை நடந்ததாக கணக்குக் காட்டப்படுவதுதான் பெரும்பாலும் நடக்கிறது.

இந்த வேலையில், அதிகாரிகள் மற்றும் ஆளுங்கட்சி அரசியல்வாதிகள் கூட்டுப்போட்டுக் கொண்டு, குறிப்பிட்டத் தொகையை சம்பளமாக கொடுத்துவிட்டு மீதித் தொகையை பங்கு போட்டுக் கொள்வது, எல்லா மாநிலங்களிலும் நடக்கிறது. இதற்கு காங்கிரஸ், பிஜேபி, கம்யூனிஸ்ட், தி.மு.க., அ.தி.மு.க., மாயாவதி கட்சி என்று எந்த கட்சி ஆளும் மாநிலமும் விதிவிலக்கில்லை.

ஆனால், தற்போது தேர்தல் நேரம் என்பதால், "100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தில் ஊழல் செய்வது, ஏழைகளுக்கு எதிராக நடத்தப்படும் குற்றம்" என்று உத்தர பிரதேச மாநில பிரசாரத்தில் மாயாவதிக்கு எதிராக முழங்கிக் கொண்டிருக்கின்றனர் சோனியா காந்தியும், அவருடைய சீமந்தபுத்திரன் ராகுல் காந்தியும்!

ஒட்டுமொத்த திட்டமே ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருக்கிறது என்று கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக விவசாயிகள் குற்றம்சாட்டிக் கொண்டிருக்கின்றனர். இந்தத் திட்டத்தை, அப்படியே விவசாய வேலைகளுக்காக திருப்பிவிட்டு, கூடுதல் சம்பளம் கிடைக்கும் வகையில் வழி செய்யலாம் என்கிற திட்டம் முன் வைக்கப்பட்டது. இதன் மூலம் கூலித் தொழிலாளர்களுக்கு நியாயமான வகையில் பணம் கிடைக்கும் என்பதுதான் நோக்கமே! ஆனால், இதையும் இந்த அரசியல்வாதிகள் கண்டுகொள்ளவே இல்லை.

ஓட்டு ஒன்றை மட்டுமே குறிக்கோளாக வைத்து, மக்களை சோம்பேறியாக்கிக் கொண்டிருப்பதைத் தவிர, இந்தத் திட்டம் பெரிதாக எதையும் சாதித்துவிடவில்லை என்பதே உண்மை!

இன்னும் சில ஆண்டுகளுக்குப் பிறகு, உணவுப் பொருட்களுக்காக வெளிநாடுகளிடம் நாம் கையேந்தும் நிலை வரும்போதுதான் இந்த உண்மை எல்லோருக்கும் புரியவரும்!
Related Posts Plugin for WordPress, Blogger...