உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Friday, February 17, 2012

பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு "ஹால் டிக்கெட்' வினியோகம்

பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு "ஹால் டிக்கெட்' வழங்கும் பணி, திருப்பூரில் நேற்று துவங்கியது.பிளஸ் 2 பொதுத்தேர்வு வரும் மார்ச் 8ல் துவங்குகிறது. திருப்பூர் மாவட்டத்தில் நடப்பு கல்வி ஆண்டில் பிளஸ் 2 தேர்வு எழுத தனித்தேர்வர்கள் 1,182 பேர் விண்ணப்பித்துள்ளனர்.உடுமலை எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளி, பெரியாயிபாளையம், இடுவாய் அரசு மேல்நிலைப்பள்ளிகள், தாராபுரம் சி.எஸ்.ஐ., பள்ளி ஆகிய நான்கு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தனித்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான "ஹால் டிக்கெட்' வழங்கும் பணி, பழனியம்மாள் மாநகராட்சிபெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று துவங்கியது.

முதன்மை கல்வி அலுவலர் ஆனந்தி கூறியதாவது:திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்களுக்கான "ஹால் டிக்கெட்' வரும் 18 வரை வழங்கப்படும். தனித்தேர்வர்கள் குறிப்பிட்ட தேதிக்குள் காலை 9.30 முதல் மாலை 5.30 மணி வரை பெற்றுக்கொள்ளலாம்."ஹால் டிக்கெட்' பெறுவோர் அதில் உள்ள பெயர், பிறந்த தேதி, பதிவு எண், தேர்வு மையம் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். தவறு இருப்பின், கூடுதல் செயலாளர் (மேல்நிலை), அரசுத்தேர்வுகள் இயக்ககம், சென்னை-6 என்ற முகவரியில் நேரடியாகவோ, தபால் மூலமோ தெரிவிக்க வேண்டும். "ஹால் டிக்கெட்' கிடைக்காதவர்கள், குறிப்பிட்ட நாளுக்குள் தேர்வு எழுத விண்ணப்பித்ததற்கான சான்றுகளை மேற்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.செய்முறைத்தேர்வில் 40 மதிப்பெண்ணுக்கு குறைவாக பெற்று, தேர்ச்சி அடையாதவர்கள் கண்டிப்பாக செய்முறைத்தேர்வை மீண்டும் எழுத வேண்டும்; எழுத்து தேர்வுக்கும் வர வேண்டும். மொழிப்பாடங்கள், சிறப்பு மொழி பாடங்களில் கேட்டல், பேசுதல் திறன் தேர்வு நடைபெறும் தேதிகளை, அந்தந்த தேர்வுமைய முதன்மை கண்காணிப்பாளரை அணுகி, வரும் 20க்குள் தெரிந்து கொள்ள வேண்டும். தேர்வு மையத்துக்கு செல்லும்போது, மேல்நிலை தேர்வு எழுத விண்ணப்பித்தபோது எடுத்த வண்ண புகைப்பட நகல் ஒன்றை கண்டிப்பாக கொண்டுசெல்ல வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
Related Posts Plugin for WordPress, Blogger...