உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Thursday, February 09, 2012

பிப்.28ல் பொது வேலைநிறுத்தம்

 மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 28ம் தேதி நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் நடத்தப்பட உள்ளது. இப்போராட்டத்தின் கோரிக்கைளை தொழிலாளர்கள் மத்தியில் கொண்டு செல்ல தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவதென சிஐடியூ மாவட்டக் குழு முடிவு செய்துள்ளது.
 சிஐடியூ மாவட்டக் குழுக் கூட்டம் திருப்பூர் மாவட்டத் தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன் தலைமையில் திருப்பூரிலுள்ள அத் தொழிற்சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. மாநில தலைவர் ஆர்.சிங்காரவேல், மாவட்ட செயலர் எம்.சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தொழிலாளர் சட்டங்களை கடுமையாக அமல்படுத்தவும், அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் முழுமையான சமூகப் பாதுகாப்பு வழங்க மத்திய அரசு ஒரு லட்சம் கோடி நிதி ஒதுக்கவும், மத்திய, மாநில பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்கவும், குறைந்தபட்ச ஊதியமாக அனைத்து தொழிலாளர்களுக்கும் ரூ.10 ஆயிரம் வழங்கவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் வேண்டும். நிரந்தர தன்மையுள்ள எந்த வேலையும் ஒப்பந்த அடிப்படையில் கூடாது, அவ்வாறுள்ள ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சட்ட உரிமைகள் அமல்படுத்திடவும், அனைத்து பிரிவு தொழிலாளர்களுக்கும் உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியம் வழங்கவும், தொழிற்சங்கங்கள் விண்ணப்பித்த 45 நாட்களுக்குள் பதிவு செய்யவும், சங்கம் அமைக்கும் உரிமை கூட்டு பேர உரிமையை மத்திய அரசு உடனடியாக அங்கீகரித்து அமலாக்கவும் வேண்டும்.
 இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள், பொதுத் துறை அமைப்புகள், வங்கி, எல்ஐசி அரசு ஊழியர் சங்கங்கள் இணைந்து பிப்ரவரி 28ல் நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் நடத்துகின்றன.இவ் வேலைநிறுத்தம் குறித்து தொழிலாளர்கள் மத்தியில் எடுத்துச் செல்ல பிரசார நடவடிக்கையில் ஈடுபடுவது, திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து பிரிவுகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களை பெருமளவில் இவ் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடச் செய்தவதெனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
Related Posts Plugin for WordPress, Blogger...