உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Wednesday, February 01, 2012

ஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸ்-58-படவில்லைகளின் காட்சி

ஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸ்-58-படவில்லைகளின் காட்சி:

எந்தெந்தபடவில்லைகள் எந்த வரிசைகிரமத்தில் படவில்லைகாட்சியாக திரையில் காண்பிக்கப் படவேண்டும் ,
இந்தபடவில்லைக்காட்சியானது தானாகவே இயங்கவேண்டுமா அல்லது நாம் விரும்பியவாறு இயங்கவேண்டுமா? ,
படவில்லைகாட்சியில்இருபடவில்லைகளுக்கு இடையேயான இடைவெளிநேரம் எவ்வளவு இருக்கவேண்டும்,
படவில்லைகாட்சியில்படவில்லைகளின் அசைவூட்டம் எவ்வாறு அமைய வேண்டும்,
படவில்லைகாட்சியின்போதுசுட்டியின் பொத்தானை சொடுக்குவதால் என்ன நிகழ வேண்டும்
என்பதுபோன்ற செயல்களை ஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸில் உள்ள ஒரு சில கருவிகளை பயன்படுத்திநம்மால் அமைத்து கொள்ளமுடியும்.இவ்வாறான பெரும்பாலான செயல்கள்படவில்லைகளின் தொகுப்பு காட்சித் (slidesorter view) திரையில் செயல்படுத்திகொள்ளமுடியும். அதற்காக மேலே கட்டளை பட்டியிலிருந்து View=> Slide Sorter=>என்றவாறு கட்டளைகளைசெயற்படுத்துக.
அல்லதுஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸின் பணியிடத்தின்(workspace) மேல் பகுதியில் உள்ள Slide Sorterஎன்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
உடன் Slide Sorter view என்றகாட்சி திரையின் பணியிடத்தில் அனைத்து படவில்லைகளும் காட்சியளிக்கும்
படவில்லை காட்சியைதிரையில் காண்பிப்பதற்கு முன் அதற்கான அடிப்படை அமைப்பை ஒவ்வொரு படவில்லைக்கும்உருவாக்கிடவேண்டும் அதற்காக முதலில் அவைகள் என்னென்னவென தெரிந்துகொள்வோம் மேலேகட்டளை பட்டியிலிருந்து Slide Show => Slide ShowSettings=>என்றவாறு கட்டளைகளைசெயற்படுத்துக. உடன் Slide Showஎன்ற (படம்-58-1)உரையாடல் பெட்டி திரையில்தோன்றிடும் அதில்

படம்-58-1
Rangeஎன்றபகுதியில் உள்ள பின்வரும் வாய்ப்புகள் எந்தெந்த படவில்லைகள் எந்தவரிசையில்படவில்லைகாட்சியில் இருக்கவேண்டுமென தொகுத்திட உதவுகின்றது
1.All slidesஎன்றவாய்ப்பு மறைக்கபட்ட படவில்லையைத் தவிரமிகுதி அனைத்தையும் வரிசையாக அடுக்கிதொகுத்து வைத்திட பயன்படுகின்றது
2.From என்றவாய்ப்பு நாம் தெரிவுசெய்திடும் படவில்லையிலிருந்து மிகுதியை வரிசையாக அடுக்கி தொகுத்து வைத்திடபயன்படுகின்றது
3.Custom Slide Showஎன்றவாய்ப்பு நாம் விரும்பிய வகையில் படவில்லைகள் அனைத்தையும் வரிசையாக அடுக்கி தொகுத்து வைத்திடபயன்படுகின்றது
Typeஎன்றபகுதியில் உள்ள பின்வரும் வாய்ப்புகள் படவில்லைகாட்சியின்போது படவில்லைகள் எவ்வாறுகாட்சியளிக்கவேண்டும் என அமைத்திட உதவுகின்றது
1.Defaultஎன்றவாய்ப்பு படவில்லைகாட்சி முழுத்திரையிலும் தெரியுமாறும் ஓப்பன் ஆஃபிஸின் கட்டுபாடு இல்லாமலேயே கடைசிபடவில்லைவரை படவில்லை காட்சியை காண்பித்துகாட்சி முடிந்த பின்னரே வேளியேறுமாறும் அமைத்திட பயன்படுகின்றது
2.Windowஎன்றவாய்ப்பு படவில்லைகாட்சியானது ஓப்பன் ஆஃபிஸின் கட்டு பாட்டுடன் கடைசி படவில்லைவரை படவில்லைகாட்சியை காண்பித்து காட்சி முடிந்தபின்னரே வேளியேறுமாறும் அமைத்திட பயன்படுகின்றது.
3.Autoஎன்றவாய்ப்பு படவில்லை காட்சி முடிந்தவுடன்கடைசி படவில்லையில் சிறிதுநேரம் காத்திருந்து மீண்டும் முதல் படவில்லையிலிருந்துகடைசி படவில்லைவரை படவில்லை காட்சியை காண்பிக்குமாறு அமைத்திட பயன்படு கின்றது
Optionsஎன்றபகுதியில் பின்வரும் வாய்ப்புகள் உள்ளன
1.Change slidesmanuallyபடவில்லை காட்சியில் படவில்லைகளுக்கு இடையில் காலஇடைவெளியானது தானாகவே அமைக்கபட்டிருந்தாலும் அதனால்படவில்லையில் மாறுதலும் தானாகவே ஏற்படுவதைதவிர்ப்பதற்கு இந்த வாய்ப்பு உதவுகின்றது
2.Mouse pointervisible என்ற வாய்ப்பு படவில்லைகாட்சியின்போது காட்சியின் விவரங்களை சுட்டி காண்பிப்பதற்காக மற்றசாதனங்கள் இல்லாதபோது சுட்டியை திரையில் பிரதிபலிக்கசெய்கின்றது
2.Mouse pointer aspenஎன்றவாய்ப்பு படவில்லைகாட்சியின்போது அந்தகாட்சியின் விவரங்களை சுட்டி காண்பிப்பதற்காக மற்ற சாதனங்கள் இல்லாதபோது சுட்டியைதிரையில் பேனா போன்ற உருவத்துடன்பிரதிபலிக்கசெய்கின்றது
3.Navigator visibleஎன்றவாய்ப்பு படவில்லைகாட்சியின்போதுவழிகாட்டியை திரையில் பிரதிபலிக்கசெய்கின்றது
4.Animations allowedஎன்றவாய்ப்பு படவில்லையின் அனைத்து சட்டகத்திலும் அசைவூட்டத்தை செயல்படுத்துகின்றது இதனைதெரிவுசெய்யவில்லையெனில் முதல்படவில்லையில் மட்டும் அசைவூட்டத்தை அனுமதிக்கும்
5.Change slides byclicking on backgroundஎன்ற வாய்ப்பு படவில்லை காட்சியின்போதே அடுத்த படவில்லையின்பின்புலத்தை மாறுதல் செய்ய பயன்படுகின்றது
6.Presentation alwayson top என்ற வாய்ப்பு மற்ற பயன்பாடுகளின் சாளரம் திரையில் மேல்பகுதியில்தோன்றுவதை தவிர்ப்பதற்காக பயன்படுகின்றது
Multipledisplays என்ற பகுதியின் வாய்ப்புகள் ஒன்றுக்கு மேற்பட்ட திரையில் ஓரே சமயத்தில் படக்காட்சியை காண்பிக்குமாறுஅமைத்திட பயன்படுகின்றது
படவில்லையைபடவில்லைக்காட்சியின்போது மறைத்திட
ஒருசிலபடவில்லைகளை குறிப்பிட்ட படவில்லைக்காட்சியில் காண்பிக்க வேண்டாம் எனவிரும்பிடும்போது முதலில் படவில்லைகளின்பலகத்தில்(slide pane )அல்லது படவில்லைகளின் தொகுப்புத்திரையில் தேவையான படவில்லையை தெரிவுசெய்து கொள்க பின்னர் கருவிபட்டியிலுள்ள HideSlideஎன்ற குறும்படத்தை தெரிவுசெய்து சொடுக்குக
அல்லது சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குகபின்னர் விரியும் சூழ்நிலை பட்டியில் Hide Slideஎன்றவாய்ப்பை தெரிவுசெய்து சொடுக்குக
அல்லது மேலேகட்டளை பட்டியிலிருந்து Slide Show => Hide Slide=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக.
உடன்குறிப்பிட்ட படவில்லையானது படவில்லைகாட்சியிலிருந்து மாறைக்கபட்டுவிடும்
மறைக்கபட்ட படவில்லையை மீண்டும் படவில்லைக்காட்சியில்காண்பித்திட
மேலேகூறியவாறு மறைக்கபட்ட படவில்லையை மீண்டும் படவில்லைக் காட்சியில் காண்பிக்க விரும்பிடும்போது முதலில் படவில்லைகளின் பலகத்தில் அல்லது படவில்லைகளின் தொகுப்புத்திரையில் தேவையான படவில்லையை தெரிவு செய்து கொள்க பின்னர் கருவிபட்டியிலுள்ள ShowSlideஎன்றகுறும்படத்தை தெரிவுசெய்து சொடுக்குக
அல்லதுசுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் சூழ்நிலைபட்டியில் Show Slideஎன்ற வாய்ப்பை தெரிவுசெய்து சொடுக்குக
அல்லது மேலேகட்டளை பட்டியிலிருந்து Slide Show => Show Slide=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக. உடன்குறிப்பிட்ட படவில்லையானது படவில்லைகாட்சியில் சேர்க்கபட்டுவிடும்
வாடிக்கையாளர் விரும்பியவாறு படவில்லைகாட்சியை அமைத்திட
நாம்விரும்பியவாறுபடவில்லைகாட்சி திரையில் தோன்றுவதற்காக மேலே கட்டளை பட்டியிலிருந்து Slide Show => Custom Slide Show=> என்றவாறுகட்டளை களை செயற்படுத்துக. உடன் தோன்றிடும் Custom SlideShow என்ற (படம்-58-2) உரையாடல்பெட்டியில் newஎன்றபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

படம்-58-2
பின்னர் விரியும் define CustomSlide Show என்ற (படம்-58-3)உரையாடல்பெட்டியில் படவில்லைக்காட்சிக்கான பெயரை name என்ற பகுதியில்தட்டச்சுசெய்துகொண்டு Existing slides என்பதன்கீழுள்ள பட்டியலில் தேவையானவற்றை தெரிவுசெய்து >> என்றபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் நாம் தெரிவுசெய்து படவில்லைகள் selectedslides என்ற பகுதியில் சென்று சேர்ந்துவிடும் selected slides என்றபகுதியில் தேவையற்ற படவில்லைஏதேனுமிருந்தால் அதனை தெரிவுசெய்து கொண்டு << என்ற பொத்தானைதெரிவுசெய்து சொடுக்குக உடன் தேவையற்றது பழைய நிலைக்கே சென்றுவிடும் அனைத்தும்சரியாக இருக்கின்றது எனில் okஎன்ற பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக.
படம்-58-3
பின்னர் Custom Slide Show என்ற (படம்-58-2)உரையாடல் பெட்டியில் edit,delete,copy ஆகிய பொத்தான்களைபயன்படுத்தி படவில்லை கோப்பில் தேவையானமாறுதல் செய்துகொள்க பிறகு இதே உரையாடல்பெட்டியின் கீழ்பகுதியிலுள்ள Use Custom Slide Showஎன்றதேர்வுசெய் பெட்டியை தெரிவுசெய்து கொண்டு பட்டியலிலுள்ள படவில்லையில் படவில்லைக்காட்சிக்கான தொடக்க படவில்லையை மட்டும்தெரிவு செய்து கொண்டு startஎன்ற பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக உடன் நாம்விரும்பிய படவில்லையிலிருந்து படவில்லைக்காட்சியானது திரையில்காண்பிக்க தொடங்கும் இந்தபடவில்லைக்காட்சி முடிவடைந்த பின்னர் Closeஎன்ற பொத்தானைதெரிவுசெய்து சொடுக்கி நாம் செய்த மாறுதல்களை சேமித்து கொள்க


First Alphabet
Related Posts Plugin for WordPress, Blogger...