உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Wednesday, February 01, 2012

அவினாசியில் மின் கோபுரம் அமைக்கும் பணி மீண்டும் தொடங்கியது

தமிழ்நாடு மின்வாரியத் துறையின் மேட்டூரில் இருந்து கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி வரை உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்கும் பணியை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கினர்.
 
இந்த நிலையில் அவினாசியை அடுத்த சுண்டக்காம்பாளையம் அருகே உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்கும் பணியில் மின்வாரிய அலுவலர்கள் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இந்த பகுதியில் குடியிருப்புகள் மற்றும் விவசாயம் உள்ள பகுதி, இங்கு உயர் அழுத்த மின் கோபுரம் அமைப்பதால் எங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். எனவே மின் கோபுரம் அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.
 
மூன்று ஆண்டுகளுக்கு பிறகு நேற்று காலை 11 மணியளவில் சுண்டக்காம்பாளையம் அருகே அவினாசி தாசில்தார் பூங்காவனம், போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் செந்தில்வேல் ஆகியோர் முன்னிலையில் போலீஸ் பாதுகாப்புடன் உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்கும் பணி தொடங்கியது.
 
இதுகுறித்து மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் செந்தில்வேல் கூறுகையில், தமிழக அரசு ஆணையின்படி மேட்டூரிலிருந்து கருமத்தம்பட்டி வரை மொத்தம் 324 உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்கும் பணி தொடங்கியது. இதில் 315 கோபுரங்கள் அமைக்கும் பணி முடிவடைந்த நிலையில் அவினாசியிலிருந்து 15 கி.மீ. தொலையில் உள்ள கருமத்தம்பட்டி வரை 9 கோபுரங்கள் மட்டுமே மீதமுள்ள நிலையில் சுண்டக்காம்பாளையம் பொதுமக்கள் எதிர்ப்பால் கோபுரம் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது.
 
இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று, மின்கோபுரம் அமைக்கலாம் என்ற உத்தரவின்படியும், பொதுமக்களுக்கும், விவசாயத்திற்கும் எந்த பாதிப்பும் ஏற்படாதவகையில் தற்போது மின் கோபுரம் பணி நடைபெற்று வருகிறது என்றார்.
Related Posts Plugin for WordPress, Blogger...