உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Monday, February 06, 2012

திருப்பூர் :அனுமதியற்ற சேனல்கள் ஒளிபரப்பை நிறுத்த உத்தரவு

திருப்பூர் :அனுமதியின்றி, அரசு கேபிள் "டிவி'யில் இதுவரை ஒளிபரப்பாகி வந்த உள்ளூர் சேனல்களை நிறுத்த உத்தரவிட்டுள்ளது. இதனால், கடந்த ஆறு மாதங்களாக உள்ளூர் சேனல்களை ஒளிபரப்பிய சேனல் உரிமையாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
அரசு கேபிள் "டிவி' கார்ப்பரேஷன் தற்போது முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆளும்கட்சி பிரமுகர்கள் ஆதரவுடன் பல்வேறு உள்ளூர் சேனல்கள் இயக்கப்பட்டன. இவை சோதனை முறையில் ஒளிபரப்பு செய்வதாகவும், முறைப்படி டெண்டர் முடிவானதும், இத்தகைய சேனல்கள் நிறுத்தப்படும் என்றும் துவக்கத்தில் தெரிவிக்கப்பட்டது.
உள்ளூர் சேனல் ஒளிபரப்புக்கு டெண்டர் முறை கையாளப்பட்டது. இதில், மாற்றுக்கட்சியினர் அதிக தொகைக்கு உள்ளூர் சேனல் உரிமையை ஏலம் கேட்டனர்.


இதனால், ஆளும்கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர். அதன் காரணமாக, ஏல முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது. ஜன., முதல் தேதி முதல் ஏலம் எடுத்த சேனல்கள் ஒளிபரப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஒரு மாத இடைவெளிக்குபின், கடந்த பிப்., முதல் தேதியில் இருந்து சேனல்களை இயக்கவும், டெண்டர் எடுத்த தொகையின் இரு மாத தொகையை உடனடியாக "டிபாசிட்' செலுத்தவும் கார்ப்பரேஷன் உத்தரவிட்டது. இதற்கு வரும் 7ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
சோதனை முறையில் இயக்கப்பட்ட சேனல்களுக்கு, அவை இயக்கப்பட்ட கால அளவு அடிப்படையில், அந்தந்தப் பகுதியில் ஏலம் போன அதிகபட்ச தொகை அடிப்படையில் கட்டணம் செலுத்த அறிவுறுத்தப்பட்டது. மேலும், அனுமதியற்ற உள்ளூர் சேனல்கள் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளன; இந்த சேனல்களின் ஒளிபரப்பை அந்தந்த கட்டுப்பாட்டு அறையில், சம்பந்தப்பட்ட தாசில்தார்கள் துண்டித்துள்ளனர். இந்நடவடிக்கையால், உள்ளூர் சேனல் நடத்தி வந்த உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை சோதனை அடிப்படையில் ஆறு உள்ளூர் சேனல்கள் இயங்கி வந்தன. இதில் ஒரு சேனல், துவங்கிய ஒரே மாதத்தில் நிறுத்தப்பட்டது. அதன்பின், ஐந்து சேனல்கள் மட்டும் ஒளிபரப்பாகின. இதில் ஒரு சேனல் மட்டும் டெண்டர் முறையில் தேர்வாகியது. திருப்பூரில் ஒளிபரப்பாகாத மேலும் இரு சேனல்கள், டெண்டர் முறையில் ஒளிபரப்பாக தேர்வானது. இம்மூன்று சேனல்களும் வரும் 7ம் தேதிக்குள் தலா இரண்டு மாத டெண்டர் தொகையை செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுவரை சோதனை முறையில் இயங்கி வந்த ஐந்து சேனல்கள் ஒளிபரப்பு நிறுத்தம் செய்யப்பட்டதோடு, இவை செலுத்த வேண்டிய 1.23 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், சேனல் உரிமையாளர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். ஆனால், இந்த சேனல்கள் இதுவரை தொகை செலுத்தாமல் உள்ளன.
Related Posts Plugin for WordPress, Blogger...