உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Thursday, February 09, 2012

ஊத்துக்குளியில் கதித்தமலை திருக்கோயில் தேரோட்டம்


 தைப்பூசத்தையொட்டி, ஊத்துக்குளியில் கதித்தமலை ஸ்ரீ வெற்றி வேலாயுதசாமி திருக்கோயில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது (படம்). விழாவில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
 ÷திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி- கதித்தமலையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ வெற்றி வேலாயுதசாமி கோயில் உள்ளது. ஆண்டுதோறும் தைப்பூசத்தையொட்டி இக்கோயில் சார்பில் ஊத்துக்குளியில் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம்.
 ÷இவ்வாண்டு தேர்த் திருவிழா கடந்த ஜன. 30ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, தினமும் பல்வேறு அபிஷேக பூஜைகள், மாலையில் சுவாமி திருவீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்று வந்தன.
 ÷திங்கள்கிழமை இரவு சுமார் 8 மணியளவில் முருகன், வள்ளி, தெய்வானை சுவாமிகளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. பிறகு, உற்சவர் திருவீதி உலாவும் நடந்தது. திருக்கல்யாணம், திருவீதி உலாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
 ÷தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணிக்கு முருகன், வள்ளி, தெய்வானைக்கு மகா அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதன் தொடர்ச்சியாக, சுமார் 7 மணியளவில் சுவாமிகள் தேருக்குப் புறப்பட்டனர். திருத்தேரில் எழுந்தருளிய சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
 ÷காலை 11.00 மணியளவில் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில், ஆயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்று "அரோகரா' கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். கிழக்குரத வீதியிலிருந்து, தெற்குரத வீதி காவல் நிலையம் அருகில் தேர் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. பிறகு, இரவு 10 மணிக்கு தேர் நிலைசேர்ந்தது. ÷தொடர்ந்து, புதன்கிழமை இரவு பரிவேட்டை, வியாழக்கிழமை இரவு தெப்பத்தேர் உலா, வெள்ளிக்கிழமை காலை கதித்தமலையில் முருகனுக்கு மகா அபிஷேகமும், பிறகு மலைத் தேரோட்டமும் நடக்க உள்ளது. ÷அன்றிரவு நடக்கும் மகா தரிசனத்தின்போது முருகன், வள்ளி, தெய்வானையுடன் நான்குரத வீதிகள் வழியே திருவீதி உலா வர உள்ளார். சனிக்கிழமை மஞ்சள் நீராட்டுடன் திருவிழா நிறைவடைகிறது.
Related Posts Plugin for WordPress, Blogger...