உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Friday, February 10, 2012

ஸ்கின் கலர் கரெக்சன் செய்வது எப்படி? - போட்டோஷாப்

ஸ்கின் கலர் கரெக்சன் செய்வது எப்படி? - போட்டோஷாப்:
படத்தில் உள்ளதைப் போல நீங்களும் செய்யலாம் கலர் கரெக்ஸன் - போட்டோஷாப்


இந்தப் பதிவை எழுத நான் எடுத்துக்கொண்ட நாட்கள் மிக அதிகம். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே பதிவிட்டுவிட்டு அதை மாற்றம் செய்யாமலேயே மறந்திருக்கிறேன். அதற்காக வருந்துகிறேன். இதோ பதிவு..! இப்போது உங்களுக்காகவே. போட்டோஷாப்பில் ஸ்கின் கலர் கரெக்ஷன் செய்வது மிகவும் எளிதுதான். சிறிதளவு போட்டோஷாப் அறிவு இருந்தாலே போதும்.

முதலில் கலர்கரெக்ஷன் செய்ய வேண்டிய போட்டோவை போட்டோஷாப்பின் மூலம் திறந்துகொள்ளுங்கள்.Select Opition சென்று Color Range என்பதை கிளிக் செய்யவும்.படத்தில் காட்டியுள்ள selection என்பதை தேர்வாகி இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ளவும்.நமக்கு வேண்டிய தோலின் நிறத்தை(Bright ஆக இருக்கும் பகுதியில் வைத்து கிளிக் செய்துகொள்ளுங்கள்.) படத்திலிருந்தே கிளிக் செய்து கொள்ளவும்.பிறகு ஐ டிராப்பர் + என்பதை தேர்ந்தெடுத்து, எங்கெல்லாம் தோலின் அடர்வான நிறம் இருக்கிறது அங்கெல்லாம் கிளிக் செய்யவும்.  ஒன்றுக்கும் மேற்பட்ட தோலின் நிறம் அடர்வாக உள்ள பகுதிகளில் வைத்து சொடுக்குவதன் மூலம் தோலின் அனைத்து பகுதிகளும் தேர்வாகி, ஒரு சீரான நிறத்தை கொடுக்கும்.முகம், கை, காது என எங்கெல்லாம் அடந்த நிறம் இருக்கிறதோ அங்கெல்லாம் கிளிக் செய்தபிறகு கலர் ரேஞ்சில் காட்டப்படும் படம் இவ்வாறு இருக்கும்.

இதை கவனமாக செய்த பிறகு Ok என்பதை தேர்வு செய்யவும். இப்போது தேவையான தோல் பகுதி மட்டும் தேர்வாகி இருக்கும்.இப்போது Image==>Adjustment==>HUe/Saturation செல்லவும். அல்லது Ctrl+U அழுத்தியும் பெறலாம்.Saturation என்பதை படத்தில் காட்டியுள்ளபடி வைத்துக்கொண்டு ஓ.கே. கொடுக்கவும்.

 

உங்களுடைய படத்திற்கு தகுந்தமாதிரி இந்த Saturation அளவைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளவும். நான் இந்த படத்திற்கு -22 என்ற மதிப்பைக் கொடுத்திருக்கிறேன்.அவ்வளவுதான். படத்தில் உள்ள ஸ்கின் கலரானது நல்லதொரு கவர்ச்சிகரமான நிறத்திற்கு மாறியிருக்கும்.படத்தைப் பாருங்கள். முன்பிருந்த படத்திற்கும், இப்போதுள்ள படத்திற்கு உள்ள வித்தியாசத்தை..!!


 
பதிவில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் கேட்கலாம். நன்றி நண்பர்களே..!!


First Alphabet
Related Posts Plugin for WordPress, Blogger...