உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Saturday, February 11, 2012

திருப்பூர் எஸ்பி அலுவலகம் முன் பனியன் வியாபாரி தீக்குளிப்பு


திருப்பூர் : விசாரணையின்போது தன்னை போலீசார் டார்ச்சர் செய்ததாக கூறி, திருப்பூர் எஸ்.பி. அலுவலகம் முன்பு பனியன் வியாபாரி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். இது குறித்து அவர், நீதிபதியிடம் ரகசிய வாக்குமூலத்தையும் பதிவு செய்தார். திருப்பூரையடுத்த 15 வேலம்பாளையம், அமர்ஜோதி கார்டனைச் சேர்ந்தவர் காளிதாஸ் (45). செகன்ட்ஸ் பனியன் வியாபாரி. இவரது மனைவி மருதம்மாள் (37). இவர்களது மகள் பிரியங்கா (10). அன்னூரில் 5ம் வகுப்பு படித்து வருகிறார். சர்வதேச செஸ் வீராங்கனை. சில ஆண்டுகளுக்கு முன்னர் பனியன் வியாபாரம் செய்து வந்த காளிதாஸ் கோவை, புலியகுளத்தைச் சேர்ந்த ரவி என்ற நூல் வியாபாரியுடன் கொடுக்கல் வாங்கல் நடந்து வந்துள்ளது. வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக காளிதாசும், அவரது நண்பர் ஸ்ரீதர் (42) என்பவரும், தற்போது செகண்ட்ஸ் பனியன் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்நிலையில், நூல் வியாபாரத்தில் தன்னிடம் ரூ.55 லட்சம் மோசடி செய்ததாக காளிதாஸ், அவரது மனைவி மருதம்மாள், ஸ்ரீதர் ஆகியோர் மீது ரவி திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் காளிதாஸ், ஸ்ரீதர் ஆகியோரை திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அழைத்து விசாரித்தனர். நேற்று முன்தினம் மதியம் 12 மணி முதல் இரவு 9 மணி வரை விசாரித்துள்ளனர். வீடு திரும்பிய காளிதாஸ், ஸ்ரீதர் ஆகியோர் போலீசார் தங்களை விசாரணையின்போது துன்புறுத்தியதாக கூறியுள்ளனர். இது குறித்து மனைவியிடம் புலம்பிய காளிதாஸ், இரவு தூங்காமல் இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை போலீசார் டார்ச் சர் குறித்து எஸ்.பி.யிடம் முறையிட செல்வதாக கூறிவிட்டு காளிதாஸ் சென்றுள்ளார். காலை 10 மணியளவில் எஸ்.பி. அலு வலகம் வந்த காளிதாஸ் திடீரென தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். திருப்பூர் நடுவர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன், மருத்துவமனை வந்து காளிதாஸின் வாக்குமூலத்தை பதிவு செய்தார். தன்னை போலீசார் நடத்திய விதம் குறித்து விளக்கிய காளிதாஸ், அதனாலே தான் தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரிவித்துள்ளார்.

பங்குதாரர் ஸ்ரீதர் விளக்கம்: போலீஸ் விசாரணையின் போது உடனிருந்த காளிதாஸின் பங்குதாரர் ஸ்ரீதர் கூறியதாவது: ‘‘கோவை, புலியகுளத்தைச் சேர்ந்த ரவி என்ற நூல் வியாபாரி கொடுத்த புகார் தொடர்பான விசாரணைக்கு போலீசார் அழைத்தன் பேரில் மத்திய குற்றப்பிரிவு மையத்துக்கு சென்றோம். ரவியுடன் வர்த்தக பரிவர்த்தனையின் போது 2 பூர்த்தி செய்யப்படாத செக்குகளை கொடுத்திருந்தோம். அதில் ரூ.29 லட்சம், ரூ.26 லட்சம் என ரூ.55 லட்சத்தை பூர்த்தி செய்து அந்த தொகையை கொடுக்க வேண்டும் என கேட்டனர். ஆனால், நாங்கள் அவ்வளவு தொகை கொடுக்க வேண்டியது இல்லை என விளக்கமாக தெரிவித்தோம்.

எங்களுக்கு டீ கூட தரவில்லை. திடீரென மயங்கி விழுந்தேன். அதன் பின்னரே தண்ணீர் கொடுத்தனர். இரவு 9 மணிக்கு விடுவித்தனர். மீண்டும் விசாரணைக்கு வர வேண்டும் என்றனர். ஆனால், அதற்குள் இந்த சம்பவம் நடந்து விட்டது. பொய் புகாரில் இப்படி செய்கிறார்களே என மனவருத்தத்துடன் நேற்று இரவு முழுவதும் பேசிக் கொண் டிருந்தார். என்றார்.

மனைவி கண்ணீர் பேட்டி: தீக்குளித்த காளிதாஸின் மனைவி மருதம்மாள் கூறுகையில், ‘‘கடந்த சில ஆண்டுகளாக மிகவும் கஷ்டப்பட்டு தொழில் நடத்தி ஓரளவு ஒரு நிலையை எட்டியுள்ளோம். இந்த சூழலில் என் கணவர் மீது பொய் புகாரில் போலீசார் மிகவும் டார்ச்சர் செய்துள்ளனர். இது தொடர்பாக புலம்பிக் கொண்டே இருந்தார். இரவு முழுவதும் தூங்கவில்லை. காலையில் எழுந்தவர், பிரியங்காவிடம் (மகள்) கனிவுடன் நடந்துகொள் என்றார். பின்னர் எஸ்.பி.யை சந்தித்து புகார் குறித்து பேசி வருவதாக கூறி சென்றவர் இப்படி செய்வார் என நான் எதிர்பார்க்கவில்லை. எனது கணவர் இப்படி நடந்து கொள்ள போலீசாரின் செயல்பாடுதான் காரணம். இந்த சம்பவத்துக்கு நியாயம் வேண்டும், என்று ஆவேசமாக கூறினார்.
Related Posts Plugin for WordPress, Blogger...