உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Sunday, February 05, 2012

எக்‌ஷெல்லில் குறிப்பிட்ட செல்களுக்கு மட்டும் பூட்டு.

வணக்கம் நண்பர்களே எக்‌ஷெல் பற்றி நம்மில் அநேகருக்கு தெரியும் கிட்டதட்ட இதுவும் ஒரு கடல் போலத்தான் எக்‌ஷெல்லில் எத்தனையோ விதமான காரியங்களை செய்யமுடியும் அந்தளவுக்கு அதன் திறன் இருக்கும், சொல்லப்போனால் எக்‌ஷெல்லுக்கென்றே ஒரு தளம் ஆரம்பித்து எழுதலாம் ஆனாலும் நான் இந்த பதிவின் வாயிலாக ஒரு எக்‌ஷெல்லில் குறிப்பிட்ட செல்களை மட்டும் எப்படி எடிட் செய்யவிடாமல் செய்வது என்பதை பற்றி பார்க்கலாம்.

நான் உபயோகிப்பது மைக்ரோசாப்ட்டின் ஆபிஸ் தொகுப்பு2010 (Microsoft Office 2010) ஆனால் இதே வழிமுறைதான் மற்ற தொகுப்புகளிலும் இருக்கும் சரி இப்போது புதிதாய் ஒரு எக்‌ஷெல் திறந்து கொள்ளுங்கள் (Start ->Run->type excel then enter) இனி பட்த்தில் காண்பித்திருப்பது போல மேலே இடது பக்கம் மூலையில் சிறிய கட்டம் போல இருக்கும் இடத்தில் இடது கிளிக் செய்வதன் மூலமாகவோ அல்லது Ctrl+A என்பதை அழுத்துவது மூலமாகவோ Format Cells என்பதை தெரிவு செய்யவும். இப்போது தங்களுக்கு படத்தில் இருப்பது போல ஒரு பாப் அப் விண்டோ திறந்திருக்கும் அதில் Protection என்கிற டேப் திறந்து அதில் இருக்கும் Locked என்பதன் அருகில் இருக்கும் டிக் குறியை (Tick Mark) எடுத்துவிட்டு ஓக்கே கொடுக்கவும். இனி எக்‌ஷெல் பைலில் தாங்கள் எந்த பகுதியை அல்லது எந்த செல்களை பூட்ட விரும்புகிறீர்களோ அந்த பகுதியை செலக்ட் செய்யவும் உதாரணமாக இரு வேறு பகுதிகளில் இரண்டு விதமான செல்களை பூட்ட நினைத்தால் முதலில் ஒரு பகுதியை செலக்ட் செய்த பின்னர் அடுத்த பகுதிக்கு செல்ல Ctrl கீயை அழுத்திக்கொண்டு அடுத்த பகுதியையும் செலக்ட் செய்யமுடியும். இப்படி செலக்ட் செய்த பின்னர் செலக்ட் செய்த பகுதியில் மவுஸ் பாயிண்டர் கொண்டு வந்து அந்த இடத்தில் மவுஸால் இடது கிளிக் செய்வதன் மூலம் மீண்டும் Format Cells தெரிவு செய்வதன் மூலம் திறக்கும் பாப் அப் விண்டோவில் Protection என்கிற டேப் திறந்து அதில் இருக்கும் Locked என்பதன் அருகில் ஒரு டிக் மார்க்(Tick Mark) குறியை ஏற்படுத்த்தி ஓக்கே கொடுக்கவும். இனி நாம் இதற்கான பாஸ்வேர்ட் கொடுத்து சேமித்து விட்டால் மற்றவர்கள் இந்த பைலில் நீங்கள் பூட்டியிருக்கும் செல்லில் எந்தவிதமான மாற்றஙக்ளையும் செய்யமுடியாது ஆனால் உங்கள் பைலை திறக்க முடியும். இறுதிகட்டமாக நீங்கள் செய்யவேண்டியது உங்கள் எக்‌ஷெல் டூல் வரிசையில் Review என்பதாக இருக்கும் டூல் கிளிக்குவதன் மூலம் அதிலிருக்கும் Protect Sheet என்பதை கிளிக்கி திறக்கும் பாப் அப் விண்டோவில் Select Unlocked Cells என்பதன் அருகில் ஒரு டிக் மார்க் (Tick Mark) கொடுத்து மேலே பாஸ்வேர்டுக்கான இடத்தில் பாஸ்வேர்ட் கொடுத்து ஓக்கே கொடுத்தால் மீண்டும் பாஸ்வேர்ட் கன்பர்மேசன் கேட்கும் அதையும் கொடுத்தால் அவ்வளவுதான்.என்ன நண்பர்களே இப்போது நீங்கள் உங்கள் எக்‌ஷெல் பைலை சோதித்து பாருங்கள் நீங்கள் பூட்டியிருக்கும் செல்களில் எந்த மாற்றத்தையும் செய்யமுடியாது. சரி மொத்தமாவே பைலை யாரும் திறக்க முடியாத படி செய்யனுமா? வேர்டுக்கும் எக்ஸெலுக்கும் பூட்டு போடு பாருங்க உங்களுக்கு உதவியாய் இருக்கும். பதிவு உபயோகமா இருக்கா? நண்பர்களுக்கும் பரிந்துரை செய்யுங்கள்.

மேலும் படிக்க: எக்‌ஷெல்லில் குறிப்பிட்ட செல்களுக்கு மட்டும் பூட்டு. ~ புரியாத கிறுக்கல்கள் http://gsr-gentle.blogspot.com/2012/02/how-to-particular-excel-cell-lock.html#ixzz1lWuW1OoQ 
ஜிஎஸ்ஆர் 
நன்றி ஞானசேகர்
Related Posts Plugin for WordPress, Blogger...