உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Friday, February 17, 2012

திருப்பூர் மின்வெட்டால் வேலை நேரம் மாறியதால் பரிதவிப்பு

தொடர் மின்வெட்டு காரணமாக, தொழிலாளர்களின் பணி நேரத்தை சில பனியன் நிறுவனங்கள் மாற்றி அமைத்துள்ளன. அதனால், தொழிலாளர்
களில் பலர், "பீஸ் ரேட்' நடைமுறைக்கு மாறத் துவங்கியுள்ளனர்.இம்மாத துவக்கம் முதல் மின்வெட்டு எட்டு மணி நேரமாக அதிகரிக்கப்பட்டது. திருப்பூரில் காலை 6.00 முதல் 9.00 வரை; மதியம் 12.00 முதல் பிற்பகல் 3.00 வரை; மாலை 6.00 முதல் 7.00 மணி; இரவு 8.00 முதல் 9.00 மணி வரை என்று சில பகுதிகளிலும், காலை 9.00 முதல் 12.00 வரை; பிற்பகல் 3.00 முதல் 6.00 வரை; இரவு 8.00 முதல் 9.00; மேலும், 10.00 முதல் 11.00 வரை என இரண்டு பிரிவுகளாக எட்டு மணி நேரத்தை பிரித்து, மின்வெட்டை மின்வாரியம் அமல்படுத்தியுள்ளது.திடீரென அதிகரிக்கப்பட்ட மின்வெட்டால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, விசைத்தறி, டையிங், பிரின்டிங், காம்பாக்டிங் உள்ளிட்ட பனியன் சார்ந்த பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தொழிலாளர்கள் கிடைப்பதில் சிக்கல், மற்ற நிறுவனங்களுடன் போட்டி காரணமாக, ஏற்கனவே போதிய அளவில் ஆர்டர் பெற முடியாமல், ஆர்டர்கள் கிடைத்தாலும் ஆட்கள் பற்றாக்குறையால், சிறப்பாக முடிக்க முடியாமல் சிறு பனியன் நிறுவனங்கள் தடுமாறி வந்தன.தற்போது, மின்வெட்டு இவர்களை மேலும் சிக்கலில் ஆழ்த்தியுள்ளது. வாரத்தில் ஒரு நாள் மின்விடுமுறை விடுவது குறித்து அரசு, மின்வாரிய உயரதிகாரிகள் ஆலோ சனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், "ஷிப்டு' நேரத்தை சில பனியன் நிறுவனங்கள் மாற்றியுள்ளன.பனியன் தொழிலாளர்கள் கூறியதாவது:காலை 9.00 முதல் 12.00 மணி வரை மின்வெட்டு ஏற்படுவதால், அத்தகைய நேரத்தில் ஜெனரேட்டர் பயன்படுத்த சிறு பனியன் நிறுவனங்கள் விரும்புவதில்லை. மதியம் 12.00க்கு பின், பணியை துவக்குகின்றன. அதன் பின்பே, டெய்லர், செக்கிங், பேக்கிங், கைமடி உள்ளிட்ட தொழிலாளர்களை வரச்சொல்கின்றனர். பிற்பகல் 3.00 மணி முதல் 6.00 மணி வரை ஓய்வு கொடுக்கின்றனர். 

திரும்பவும் 6.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை வேலை கொடுக்கின்றனர். ஓய்வில்லாமல் தொடர்ச்சியாக பணியாற்ற வேண்டும். எட்டு மணி நேர வேலையை கணக்கிட, சில நிறுவனங்கள் இந்நடைமுறையை கடந்த 10 நாட்களாக பின்பற்றி வருகின்றன. உள்ளூரில் இருப்பவர்கள் பலர், மின்வெட்டு நேரத்தில் வீட்டுக்குச் சென்று விடுகின்றனர். ஆனால், வெளியூரில் இருந்து வருபவர்கள், கம்பெனிகளிலேயே இருக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்படுகிறது.பனியன் நிறுவனங்களின் இத்தகைய "பார்முலா'வால், சீனியர் தொழிலாளர்கள் பலர் "ஷிப்டு' முறையில் இருந்து "பீஸ் ரேட்'டுக்கு மாறி வருகின்றனர். மின்வெட்டு ஏற்படாத நேரத்தில் மட்டும் வந்து வேலைகளை முடித்துக் கொடுத்து, அதற்கேற்ப சம்பளம் பெற்றுக் கொள்கின்றனர். இரவு 11.00 மணி வரை நிறுவனங்களில் முடங்கிக் கிடப்பதில்லை.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
Related Posts Plugin for WordPress, Blogger...