உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Sunday, February 19, 2012

உங்கள் கணினியின் மெமரி காலியாகிறதா?


கம்ப்யூட்டர் பயன்பாட்டில் அதன் மெமரி எந்த அளவிற்கு காலியாகிறது என்பதைப் பொறுத்தே அதன் வேகம் அமையும். அதிகமான இடத்தைப் பிடிக்கும் புரோகிராம்களை இயக்க நிலையில் வைத்திருந்தால், அடுத்து அடுத்து நாம் இயக்க எடுக்கும் புரோகிராம்களுக்கு இடம் இல்லாமல், கம்ப்யூட்டர் திணற ஆரம்பிக்கும்.

அல்லது திடீரென கிராஷ் ஆகி நிற்கும். இந்த பிரச்னையை எதிர்கொள்ளாமல் இருக்க வேண்டுமானால், நம் கம்ப்யூட்டரின் மெமரி எந்த அளவில் பயன்பட்டு வருகிறது என்பதை அறிவது நல்லது. இதனை அறிய பல புரோகிராம்கள் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.


1. சிஸ் ட்ரே மீட்டர் (SysTray Meter):

இதனை கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திடத் தேவையில்லை. இது ஒரு சிறிய டூல். இதனை இயக்கினால், இந்த டூல் சிஸ்டம் ட்ரேயில் அமர்ந்து கொண்டு, நம் கம்ப்யூட்டர் பயன்படுத்தும் மெமரியின் அளவைக் கண்காணித்துக் கொண்டு இருக்கும்.

அத்துடன் சி.பி.யு.வின் பயன்பாட்டி னையும் பார்த்து நமக்குக் காட்டிக் கொண்டு இருக்கும். வண்ணங்களில் காட்டுவதால் மெமரி பயன்பாட்டினைத் தெளிவாக அறிய முடியும். இந்த டூல் பெற http://systraymeter.en.softonic.com/என்ற முகவரியில் உள்ள தளத்தை அணுகவும். இந்த டூல் பைல் அளவு 15 கேபி.

2. மெம் இன்போ (Mem Info):

இந்த புரோகிராமினை கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திட வேண்டும். இன்ஸ்டால் செய்த பின்னர், இது கம்ப்யூட்டரின் மெமரி பயன்பாட்டினைத் தொடர்ந்து அளந்து கொண்டிருக்கும். மிக அதிகமாக, நெருக்கடியான நிலையை மெமரி பயன்பாடு அடையப் போகிறது என்றால், உடனே எச்சரிக்கையினை வழங்கும். சிஸ்டம் ட்ரேயில் இது அமர்ந்து கொள்ளும்.


மெமரி டிபிராக் செய்திடவும் இதனைப் பயன்படுத்தலாம். முதலில் சொல்லப்பட்ட சிஸ் ட்ரே மீட்டர் போல இது செயல்பட்டாலும், சில கூடுதல் வசதிகளையும் இந்த டூல் கொண்டுள்ளது. வண்ணம் பூசி முடிவுகளைக் காட்டும். இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய தள முகவரி:http://www.carthagosoft.net/MemInfo.php3. பெர்பார்மன்ஸ் மானிட்டர் (Performance Monitor):

இந்த டூல் மெமரி பயன்பாட்டினைக் கண்டறிவதுடன், டிஸ்க் மற்றும் நெட்வொர்க் பயன்பாட்டினையும் கண்காணிக்கிறது. உங்கள் திரையின் மேலாக ராம், டிஸ்க் மற்றும் நெட்வொர்க் பயன்பாட்டிற்கான கிராப் ஒன்றைக் காட்டிக் கொண்டே இருக்கும்.

இதனைப் பெற http://www.hexagora.com/en_dw_davperf.asp என்ற முகவரிக்குச் செல்லவும். தற்போது இதன் பதிப்பு 4.0 பல வசதிகளுடன் இலவசமாகவே கிடைக்கிறது.


4. ப்ரீ ராம் எக்ஸ்பி ப்ரோ (FreeRAM XP Pro):

இது சற்று கூடுதலான திறன் கொண்ட புரோகிராம். மெமரி மானிட்டருக்கும் மேலாகப் பல வேலைகளை மேற்கொள்ளக் கூடியது. ராம் மெமரியின் வேகத்தைக் கண்காணித்து அதனைத் திறம்பட நிர்வகிக்கும் திறன் கொண்டது – இது மெமரியைத் தானாகவே விடுவிக்கும், அளவெடுக்கும், நமக்கு ரிப்போர்ட் தரும், மெமரி கம்ப்ரஸ் செய்து காட்டும்.

இதனைப் பெற http://www.yourwaresolutions.com/software.html.என்ற முகவரி செல்லவும். ஸிப் பைலாக 606 கேபி அளவில் இந்த பைல் கிடைக்கும். விஸ்டா மற்றும் விண்டோஸ் 7ல் இது செயல் படாது.
Related Posts Plugin for WordPress, Blogger...