உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Wednesday, February 01, 2012

மின்பராமரிப்பு பணிக்கு ஆட்கள் பற்றாக்குறை :மின்வாரியம் திணறல்

திருப்பூர் : கடலூரில், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காக, திருப்பூரில் இருந்து 20 ஊழியர்கள் அனுப்பப்
படுகின்றனர். அதே
நேரத்தில், திருப்பூரில் 
70 சதவீத ஆட்கள் பற்றாக்குறையாக இருப்பதால், மின்பராமரிப்பு பணி பாதிக்கப்படுகிறது.
"தானே' புயலால் 
பாதிக்கப்பட்ட, கடலூர் மாவட்ட பகுதிகளில் 
மின்பராமரிப்பு மற்றும் வினியோக பணியை 
துரிதப்படுத்த, தமிழக அரசு மின்வாரியத்தை முடுக்கி விட்டுள்ளது. இதற்காக, பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான மின்வாரிய ஊழியர்கள்,
கடலூரில் முகாமிட்டுள்ளனர். திருப்பூரில் இருந்து, கடந்த 1ம் தேதி முதல்
20 பேர் வீதம் கடலூர் மாவட்டத்துக்கு 
அனுப்பப்படுகின்றனர்.
திருப்பூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் நிர்மலதா
விடம் கேட்ட போது,
கூறியதாவது:
கடலூர் மாவட்டத்தில், மின்பராமரிப்பு
மற்றும் மின்வினியோகத்தை சீரமைக்க, திருப்பூரில் இருந்து மின்வாரிய ஊழியர்கள் கடலூருக்கு அனுப்பப்படுகின்றனர். கடந்த 1ம் தேதி முதல் 
20 பேர் வீதம், இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் அங்கு அனுப்பப்பட்டுள்ளனர். ஒரு குழு ஒரு வாரம் கடலூரில் தங்கி, பணியாற்றி விட்டு, திருப்பூர் திரும்புவர். அதன்பின், மற்ற 20 
ஊழியர்கள் அங்கு 
அனுப்பப்படுகின்றனர்.
திருப்பூர் மின்பகிர்மான வட்ட பகுதிகளுக்கு 
600 ஊழியர்கள் தேவை; 180 ஊழியர்களே உள்ளனர்; 70 சதவீத பணியிடம் காலியாக உள்ளது. 
வீடுகளில் மின் பழுதை சரி செய்வது; மின்கம்பங்களில் ஏறி, பழுதுகளை
சரி செய்வது உள்ளிட்ட கீழ்மட்ட உடல்
உழைப்பு சார்ந்த பணியாற்ற ஆட்கள் பற்றாக்குறை நிலவுகிறது.
எனவே, கடலூருக்கு திருப்பூரில் இருந்து அதிக எண்ணிக்கையில் ஆட்களை அனுப்பவில்லை; இருப்பினும், மின் ஊழியர் 
பற்றாக்குறை காரணமாக, பல இடங்களில் மின்பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் பணி பாதிக்கிறது, என்றார்.
Related Posts Plugin for WordPress, Blogger...