உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Wednesday, February 01, 2012

நிரந்தரம் ஆகிறதா தற்காலிக மின்வெட்டு?

அடுத்த இரண்டாண்டுகளில் 4 ஆயிரத்து 704 மெகாவாட் அளவிற்கு கூடுதல் மின்சாரம் உற்பத்தி செய்ய, புதிய திட்டங்கள் செயல்படுத் தப்படும் என்று தமிழக ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ளது. இத்தகைய அறிவிப்புகள் வெளியிடப்படுவது தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இந்தத்திட்டங்கள் துவங்கப்படுமா என்பது கேள்விக்குறியே.

அரசு கூறியுள்ளபடி, 4 ஆயிரத்து 704 மெகா வாட் மின்சாரம் புதிய திட்டங்கள் மூலம் உரு வாக்கப்பட்டாலும், தமிழகத்தினுடைய தற் போதைய மின்வெட்டைச் சரி செய்யப் போதுமான தாக இருக்காது என்பதுதான் உண்மை.

மின்வெட்டு இல்லாத தமிழகம் என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது அதிமுக வாக் குறுதி கொடுத்தது. முந்தைய திமுக ஆட்சியில் மின்வெட்டு காரணமாக மக்கள் கடும் அதிருப்தி கொண்டிருந்தனர். திமுக ஆட்சிக்கு எதிராக மக்கள் பெரும்திரளாக வாக்களித்ததில் மின்வெட்டுக்கு முக்கியப் பங்கு உண்டு. 


அதிமுக அரசு பொறுப்பேற்ற உடனேயே மின் வெட்டுக்குத் தீர்வுகாணப்பட்டுவிடும் என்று மக்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால் மின் வெட்டு நேரம் கொஞ்சம்கொஞ்சமாகக் குறையும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் நடப்பதோ நேர்மாறாக உள்ளது. இரண்டு மணி நேர, மூன்று மணிநேர மின்வெட்டு என்ற நிலை மாறி, 5 மணி நேரம், 6 மணி நேரம் என்ற அளவுக்கு மின் வெட்டு நீண்டுகொண்டே போகிறது. அடுத்து 12 மணி நேரம் என்ற அளவுக்கு அதிமுக அரசு சாதனை படைக்குமோ என்று மக்கள் வேத னையில் விம்முகின்றனர்.

மழை மற்றும் குளிர்காலத்தில் மின்சாரம் தடைபட்டதால், வீடுகளில் கொசுத்தொல்லை மட்டுமே பிரதானப் பிரச்சனையாக இருந்தது. கோடைக்காலம் வரவுள்ள நிலையில், இப் போதுள்ள அளவுக்கு மின்வெட்டு தொடர்ந்தால் மக்கள் புழுங்கித்தவிக்க நேரிடும். இத்தகைய புழுக்கங்கள்தான் ஆட்சிக்கு எதிரான அதிருப் தியை அதிகரிக்கச் செய்யும் என்பதை, ஆண்ட வர்களின் அனுபவத்திலிருந்து ஆள்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

மறுபுறத்தில் மின்வெட்டு காரணமாக தொழில் துறை, விவசாயத் துறை, சேவைத் துறை என அனைத்துத் துறைகளும் கடுமை யான நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. நவீன தாராளமயமாக்கல் கொள்கை காரணமாக தொழில் மற்றும் விவசாயத்துறை கடும் சிரமத் திற்கு ஆளாகியுள்ளது. இந்நிலையில் தொடரும் மின்வெட்டு, தமிழகத்தின் பன்முக வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடைக்கல்லாக உருவாகியுள்ளது.

இப்போதைய மின்வெட்டுக்கு முந்தைய திமுக அரசுதான் காரணம் என்று அதிமுக குற்றம் சாட்டுகிறது. இதில் உண்மை இல்லாமலில்லை. ஆனால் முந்தைய அரசைக் குற்றம் சாட்டுவ தோடு அதிமுக அரசின் பணி முடிந்துவிடக் கூடாது. 

மத்திய மின்தொகுப்பிலிருந்து தமிழகத்திற் குத் தேவையான மின்சாரத்தை போராடிப் பெற வேண்டும். அவசரத்தேவையைப் பூர்த்தி செய்ய பிற மாநிலங்களோடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். மாற்று வழிகளில் மின்சாரம் தயாரிப் பது குறித்தும், நீண்டகால தொலை நோக்கு மின் திட்டங்கள் குறித்தும், அவசர அடிப்படை யில் அரசு யோசிக்க வேண்டும். தனியாரை நம்புவதை கைவிட்டு, மின்துறையில் அரசு முத லீட்டை அதிகரிக்க வேண்டும்.

ஆளுநர் உரையைப் பார்க்கும்போது, மின் வெட்டால் தமிழகம் சந்திக்கும் இன்னலை ஆட்சி யாளர்கள் உணரவில்லை என்றே தோன்றுகிறது.
Related Posts Plugin for WordPress, Blogger...