உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Thursday, February 09, 2012

திருப்பூர், மின்நுகர்வோர் கவனத்துக்கு...

திருப்பூர்,  குற்ற நடவடிக்கைகளைத் தடுக்க மின் ஊழியர்களின் அடையாள அட்டையை உறுதி செய்த பிறகு மின்நுகர்வோர் தங்கள் வீடு, கடை, தொழிற்சாலைகளில் பணி மேற்கொள்ள ஒத்துழைக்க வேண்டும் என்று மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
 இதுகுறித்து மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சோ.நிர்மலதா விடுத்துள்ள அறிக்கை:
 மின்மாற்றி மற்றும் மின்கம்பங்களில் பழுது நீக்கம் செய்வது, மின்இணைப்புகளில் மின்தடை நீக்கம் செய்யும் பணிக்காக மின்நுகர்வோரின் வீடு, கடைகள், தொழிற்சாலைகளுக்கு வரும் மின்வாரியப் பணியாளர்களின் அடையாள அட்டையை உறுதி செய்த பிறகு, அவர்களின் பணியை மேற்கொள்ள மின்நுகர்வோர் தகுந்த ஒத்துழைப்பு அளிக்க
 வேண்டும்.
 அவ்வாறு அடையாள அட்டையை உறுதி செய்யாவிட்டால், பிற நபர்களால் ஏற்படும் திருட்டு, சேதம், கட்டண வசூல் போன்ற இடர்ப்பாடுகளுக்கு தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் எவ்விதத்திலும் பொறுப்பேற்காது.
 வீடுகளுக்கு வருவோர் மீது சந்தேகம் ஏற்பட்டால், மின்வாரிய செயற்பொறியாளர்களை, அவிநாசி- 94458 51427, திருப்பூர்- 94458 51387, காங்கயம்- 94458 52010, பல்லடம்- 94458 51217 என்ற அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
Related Posts Plugin for WordPress, Blogger...