உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Wednesday, February 01, 2012

நட‌ந்து முடி‌ந்த ஜ‌ல்‌லி‌க்க‌ட்டு போ‌ட்டி‌யி‌ல் உ‌யி‌ரிழ‌‌ப்பு எதுவு‌ம் ஏ‌ற்பட‌வி‌ல்லை ?


நட‌ந்து முடி‌ந்த ஜ‌ல்‌லி‌க்க‌ட்டு போ‌ட்டி‌யி‌ல் உ‌யி‌ரிழ‌‌ப்பு எதுவு‌ம் ஏ‌ற்பட‌வி‌ல்லை எ‌ன்று த‌மிழக அரசு மதுரை உய‌‌ர் ‌நீ‌திம‌ன்ற ‌கிளை‌யி‌ல் அ‌றி‌க்கை தா‌க்க‌ல் செ‌ய்து‌ள்ளது.


ஜல்லிக்கட்டு காளைகளை வனவிலங்குகளுடன் சேர்த்து மத்திய அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக் கோரி சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த அம்பலத்தரசு என்பவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு அளித்திருந்தார்.

இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, தற்போது ஜல்லிக்கட்டு நடைபெற இருக்கும் சூழ்நிலையில், இந்த வழக்குகளை தள்ளி வைக்கலாம். அதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

மதுரை, திருச்சி, சிவகங்கை மாவட்டங்களில் நடைபெறும் 8 ஜல்லிக்கட்டுகளுக்கு அனுமதி அளித்து, அந்த ஜல்லிக்கட்டு எவ்வாறு நடைபெற்றது, உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற நிபந்தனையின் பேரில் முறையாக நடைபெற்றதா என்பதை அறிக்கையாக இன்று தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று நீதிபதிகள் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தனர்.

மூன்று மாவட்டத்திலும் ஜல்லிக்கட்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து மாநில அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் தரப்பில் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தற்போது நடைபெற்று முடிந்த ஜல்லிக்கட்டுகளில் எந்தவித உயிரிழப்புகளும் ஏற்படவில்லை.

அதேபோல கடந்த ஆண்டை ஒப்பிடும்போது காயம் அடைந்தோரின் எண்ணிக்கையும் குறைந்துள்ளன என்று அரசு தரப்பில் வாதம் எடுத்து வைக்கப்பட்டது. ஜல்லிக்கட்டுகள் தொடர்பான படங்கள், செய்திகள் நீதிபதிகள் முன் வைக்கப்பட்டன.

விலங்குகள் நல வாரியங்கள் சார்பாக, அவர்களும் சில புகைப்படங்களை அளித்தனர். தொடர்ந்து அவர்கள் தரப்பில் வாதாடும்போது, ஜல்லிக்கட்டுகளில் சேதங்கள் குறைவாக இருந்தபோதிலும், காளைகள் துன்புறுத்தப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் பதில் அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு சார்பில் அவகாசம் கோரியதால், வழக்கு பிப்ரவரி 23ஆம் தேதிக்கு த‌ள்‌ளிவைக்கப்பட்டுள்ளது.
Related Posts Plugin for WordPress, Blogger...