உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Wednesday, February 01, 2012

கூகுள் குரோம் பயன்படுத்துவோர்க்கு ஒர் வசதி.

கூகுளின் பிரவுசரான குரோமை பயன்படுத்துபவரா நீங்கள்? தினமும் நீங்கள் உங்களுக்கு வந்த மெயில்களை பார்க்கிறீர்கள், சமுதாய வலைத்தளங்களுக்குச் செல்லுகிறீர்கள், நாளிதழ் படிக்க ஒரு தளத்திற்குச் செல்லுகிறீர்கள், பதிவிட மற்றும் பதிவுகளை படிக்க ஒரு தளத்திற்குச் செல்லுகிறீர்கள். அதாவது தினமும் ஒரு குறிப்பிட்ட பத்து பதினைந்து தளங்களை உபயோகப்படுத்துகிறீர்கள். பெரும்பாலும் கணினியை திறந்ததும் இந்த தளங்களை பயன்படுத்துகிறீர்கள்.


தினமும் ஒவ்வொரு தளத்திற்காகவும் அதன் முகவரியை பிரவுசர்களில் அடிப்பது உங்களை சலிப்படையச்செய்யலாம்.  இதற்காக கூகுள் குரோம் பிரவுசரில் ஒரு வசதி உள்ளது. நீங்கள் ஒவ்வொரு முறையும் குரோமை திறக்கும் போது சில குறிப்பிட்ட தளங்கள் திறக்கவேண்டும் என நிர்ணயித்துக்கொள்ளலாம். அதாவது நீங்கள் முகப்பு பக்கம் என ஏதாவது ஒரு பக்கத்தை மட்டும் வைத்துக்கொள்ளாமல், நீங்கள் தினமும் பயன்படுத்தும் பல தளங்களை வைத்துக்கொள்ளலாம்.  இதனால் நேரம் மிச்சமாகும்.


இந்த வசதியை பயன்படுத்த குரோமில்
  • Settings
  • Options
  • Basics
என்ற இடத்துக்குச் செல்லுங்கள். அதில் open the following pages என்பதை தேர்வு செய்து விட்டு, add என்பதை அழுத்துங்கள். ஒரு புதிய திரை தோன்றும்.

அதில் உங்களுக்கு தேவையான வலைத்தளத்தின் முகவரியை கொடுத்துவிட்டு add என்பதை அழுத்துங்கள். அழுத்தியவுடன், வலைப்பக்க முகவரி open the following pagesஎன்பதன் கீழ் தோன்றும்.

மேலும் பல வலைப்பக்கங்களை open the following pages என்பதன் அருகில் இருக்கும்add என்பதை அழுத்தி சேர்த்துக்கொள்ளலாம். தேவையில்லாத பக்கங்களை removeஅழுத்தி நீக்கி கொள்ளலாம்.  அவ்வளவுதான்! இனி நீங்கள் ஒவ்வொரு முறை கூகுள் குரோமை திறக்கும் போது open the following changes என்பதன் கீழ் இருக்கும் அனைத்து பக்கங்களும் தானகவே திறக்கும், நீங்கள் முகவரியை அடிக்கத் தேவையில்லை. இந்த வசதி முன்னரே பல பேருக்குத் தெரிந்திருக்கலாம், தெரியாதவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்.
Related Posts Plugin for WordPress, Blogger...