உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Saturday, February 04, 2012

பென்டிரைவின் ஆயுட்காலத்தை அதிகரிப்பதற்கு

நாம் பயன்படுத்தும் USB பென்டிரைவ்களின் தகவல்களை பாதுகாக்கவும், பென்டிரைவ்களின் ஆயுளை அதிகரிக்கவும் ஒரு மென்பொருள் உதவி புரிகிறது. நல்ல நிறுவனத்தின் பென்டிரைவ் தான் பயன்படுத்துகிறேன், ஆனால் சில நேரங்களில்
இந்த பென்டிரைவில் சேமிக்கப்படும் தகவல்கள் எடுக்க முடியாதபடி பிழை செய்தி வருகிறது என்று சொல்லும் அனைவருக்கும் உதவும் வகையில் இந்த மென்பொருள் அமைந்துள்ளது.
இத்தளத்திற்கு சென்று Setup(install wizard) என்பதை சொடுக்கி மென்பொருளை இலவசமாக தரவிறக்கலாம். Portable ஆக வேண்டும் என்றால் Portable என்பதை சொடுக்கி மென்பொருளை தரவிறக்கவும். தரவிறக்கிய மென்பொருளை இயக்கியதும் நம் டாஸ்க்பாரில் USB Alert ஐகான் வரும்.
நம் கணணியில் பென்டிரைவ் செருகியதும் நமக்கு Alert Message வரும். அடுத்து பென்டிரைவில் தகவல்களை சேமித்து முடித்தபின் இந்த USB alert ஐகானை சொடுக்கி Eject என்ற பொத்தானை அழுத்தி பென்டிரைவை வெளியே எடுக்கலாம். இப்படி எடுப்பதால் பென்டிரைவின் ஆயுட்காலமும் தகவலும் பாதுகாப்பாக சேமிக்கப்பட்டிருக்கும்.

Related Posts Plugin for WordPress, Blogger...