உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Wednesday, February 08, 2012

சென்னை நகர பேருந்து வழித் தடத்தை காட்டும் மொபைல் மென்பொருள்!


எந்த ஒரு தொழில் நுட்பமும் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெறுவது என்பது அதன் பயன்பாடுகளை பொருத்து தான் இருக்கிறது. அத்தகைய பயன்பாட்டுடன் இங்கே ஒரு புதிய தொழில் நுட்பம். சென்னை எம்டிசி இன்ஃபோ என்ற புதிய மொபைல் அப்ளிக்கேஷனை உருவாக்கி
இருக்கிறார் டி.ஸ்கந்தா என்பவர்.
இந்த புதிய அப்ளிக்கேஷனில், சென்னை மாநகர போக்குவரத்து கழக பஸ் செல்லும் வழி தடங்கள் விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது. பெங்களூர் வாசியான டி.ஸ்கந்தா என்பவர் சென்னை வந்திருந்த போது சரியான பஸ் ரூட் பற்றிய விவரங்கள் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டதால் இந்த எம்டிசி பஸ் ரூட் மொபைல் அப்ளிக்கேஷனை உருவாக்கி இருக்கிறார்.
இந்த அப்ளிக்கேஷனில் சென்னை மாநகர பஸ்கள் செல்லும் வழியில் இருந்து அதன் டிக்கெட் விலை முதல்கொண்டு தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. ஏனெனில், ஸ்கந்தா சென்னை வந்தபோது மொழியும் தெரியாமல், சரியான பஸ் விவரமும் தெரியாமல் மிக அவதிப்பட்டதால் இப்படி ஒரு மொபைல் அப்ளிக்கேஷனை உருவாக்கி இருக்கிறார்.   இந்த சென்னை எம்டிசி இன்ஃபோ அப்ளிக்கேஷனில் பயணம் செய்ய எடுத்து கொள்ளும் நேரம் கூட கொடுக்கப்பட்டுள்ளது.
ஸ்கந்தாவின் இந்த உபயோகமான படைப்பை ஆன்ட்ராய்டு மார்க்கெட்டில் இருந்து எளிதாக ஃப்ரீ டவுன்லோட் செய்து கொள்ள முடியும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆன்ட்ராய்டு புதிய மொபைல் அப்ளிக்கேஷன்களை உருவாக்கியது.
உதாரணத்திற்கு சென்னை ட்ரெய்ன்டிராய்டு மற்றும் சென்னை ட்ரெய்ன் டைம் டேபிள் மூலம் ரயில் புறப்படும் நேரத்தில் இருந்து மற்ற அனைத்து விவரங்களையும் எளிதாக பெறலாம். இது போல் பஸ் பற்றிய தகவல்களை எளிதாக பெற பெங்களூரை சேர்ந்த டி.ஸ்கந்தா என்பவர் இந்த எம்டிசி இன்ஃபோ என்ற புதிய மொபைல் அப்ளிக்கேஷனை உருவாக்கி இருக்கிறார்.


சென்னை மாநகர பஸ்களின் வழித் தடங்களை சொல்லும் இந்த மொபைல் அப்ளிக்கேஷனை, சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தனது இணையதளத்தில் பதிவு செய்தால் மக்களும் பார்த்து தெரிந்து கொள்ள  இன்னும் பயனுள்ளதாக அமையும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்
Related Posts Plugin for WordPress, Blogger...