உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Saturday, February 04, 2012

அதிகரிக்கும் மின்தடை

திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டு வரும் அறிவிக்கப்படாத மின்தடையால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். மின் தட்டுப்பாட்டால், மின்தடை ஏற்படுவதாக, மின்வாரிய அதிகாரி தெரிவித்தார். காலை 6.00 முதல் மாலை 6.00 மணி வரை, சுழற்சி முறையில் தினமும் நான்கு மணி நேரம் மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது. மதியம் 12.00க்குள் இரண்டு மணி நேரம்; மாலை 6.00க்குள் இரண்டு மணி நேரம் என தினமும் நான்கு மணி நேரம் அறிவிக்கப்பட்ட மின்தடை, திருப்பூர் மாவட் டத்தில் அனைத்து பகுதிகளிலும் தொடர்கிறது. இது தவிர, மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மாதத்தில் ஒரு நாள் காலை 8.00 முதல் மாலை 6.00 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது. அவ்வப்போது, பகல் மற்றும் இரவு நேரங்களில் தலா 45 நிமிடம் வீதம் ஒன்றரை மணி நேரம் மின்தடை செய்யப்படுகிறது.கடந்த சில நாட்களாக, திருப்பூர், அவிநாசி, பல்லடம், காங்கயம் உள்ளிட்ட பகுதிகளில், மின்தடை நேரம் அதிகரித்துள்ளது. தினமும் ஆறு மணி நேரம் முதல் ஏழு மணி நேரம் வரை மின்தடை செய்யப்படுவதால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். தொடர்ச்சியாக, நான்கு முதல் ஐந்து மணி நேரம் மின் வினியோகம் நிறுத்தப்படுவதால், அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள முடியாமல் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.இரவிலும் ஒரு மணி நேரத்துக்கு மேலாக மின்தடை தொடர்கிறது. தொழிற்சாலைகளிலும், தொழில் நிறுவனங்களிலும் மின்தடையால் பலத்த பாதிப்பு ஏற்படுகிறது; கடைகளில் வர்த்தகம் பாதிக்கிறது. மின்சாரம் சார்ந்த அன்றாட தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலையில், பெண்கள் சிரமப்படுகின்றனர்.திருப்பூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் நிர்மலதாவிடம் கேட்டபோது, ""கடந்த சில நாட்களாக மக்களிடம் மின் பயன்பாடு அதிகரித்துள்ளதால், பற்றாக்குறை ஏற்படுகிறது; மின் தட்டுப்பாட்டால், அறிவிக்கப்படாத மின்தடையை தவிர்க்க முடியவில்லை. காற்றாலை மூலமும் மின்சாரம் கிடைப்பதில்லை; குளிர்காலமாக இருந்ததால், சில மாதங்களாக மின்விசிறிகள் மற்றும் ஏ.சி., போன்றவை பயன்பாடு வெகுவாக குறைந்திருந்தது. தற்போது பகலில் அவற்றின் பயன்பாடு அதிகரித்துள்ளதால், மின் பற்றாக்குறையால் மின்தடை செய்யப்படுகிறது. மின்வினியோகத்தில் எவ்வித குளறுபடியும் ஏற்படவில்லை,'' என்றார்.
Related Posts Plugin for WordPress, Blogger...