உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Thursday, February 09, 2012

திருப்பூர் அரசு கேபிள் "டிவி'யில் அனுமதியற்ற சேனல்கள் ஒளிபரப்பு

திருப்பூர் : திருப்பூரில் அரசு கேபிளில், அனுமதியற்ற மற்றும் துண்டிக்கப்பட்ட சேனல்களின் ஒளிபரப்பு துவங்கியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் அரசு கேபிள் "டிவி', கடந்த ஆண்டு செப்டம்பரில் இயங்கத் துவங்கியது. அப்போது, ஆளும்கட்சியினரின் ஆதரவோடு சில உள்ளூர் சேனல்கள், ஒளிபரப்பை துவக்கின. கடந்த நவம்பரில் உள்ளூர் சேனல் ஒளிபரப்பு உரிமைக்கு டெண்டர் நடந்தது. இதில், ஏற்கனவே சேனல் இயக்கி வந்தவர்கள் உட்பட 27 பேர் பங்கேற்றனர். குறைந்தபட்ச தொகையாக 1.1 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், மூலனூரைச் சேர்ந்த தி.மு.க., ஆதரவு பிரமுகர் ஒருவர், அதிகபட்சமாக 6.1 லட்சம் ரூபாய்க்கு ஏலம் கோரினார். இதையடுத்து அதே தொகைக்கு சம்மதம் தெரிவித்து மேலும் மூன்று பேர் முன்வந்தனர். இந்த நான்கு பேரிலும் ஒருவர் மட்டும் உள்ளூர் சேனல் ஒளிபரப்பில் ஈடுபட்டு வந்தார்.
டெண்டர் முடிவை இறுதி செய்து, சேனல் நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. அதிகபட்சம் ஏலம் கோரிய தி.மு.க., பிரமுகர் தவிர்த்த, மற்ற மூன்று நிறுவனங்கள் டெண்டர் தொகையான 6.1 லட்சம் ரூபாய் என்பதை, இரண்டு மாத கட்டணத்தை செலுத்தி, ஒளிபரப்பை துவங்க உத்தரவிடப்பட்டது.
தேர்வு செய்யப்பட்ட நிறுவனங்களில், தற்போது இயங்கி வரும் ஸ்மார்ட் "டிவி' நிறுவனம் அத்தொகையை செலுத்தி விட்டது. மற்றொரு நிறுவனமான பாலிமர் சேனல் மற்றும் ஏ.எம்.என்., ஆகியவை இதற்கான தொகைக்கு "டிடி' எடுத்துள்ளன. ஆனால், அந்நிறுவனங்கள் தங்கள் ஸ்டுடியோவில் இருந்து அரசு கேபிள் கட்டுப்பாட்டு அறை வரையிலான கேபிள் பதிக்கும் பணியை இன்னும் முடிக்காத நிலையில், தங்கள் ஒளிபரப்பை துவங்க தாமதம் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், அரசு கேபிள் துவங்கியது முதல் ஒளிபரப்பாகி வந்த உள்ளூர் சேனல்களை நிறுத்த, அரசு கேபிள் கார்ப்பரேஷன் உத்தரவிட்டது. இதையடுத்து, ஸ்மார்ட் "டிவி' தவிர, டெண்டரில் தேர்வாகாத, முறையான அனுமதியில்லாத சேனல்களான எஸ்.எஸ்., "டிவி'; யு "டிவி', ஜாய் "டிவி'; டிடிசி "டிவி' ஆகியவற்றின் ஒளிபரப்பு துண்டிக்கப்பட்டது. இந்நடவடிக்கையை கேபிள் "டிவி' தனி தாசில்தார் பாலசுப்ரமணியன் மேற்கொண்டார்.
இந்த சேனல் நடத்திய பிரமுகர்கள், தலா 2.2 லட்சம் ரூபாய்க்கான (குறைந்தபட்ச ஏல தொகையின் இரு மாத கட்டணம்) "டிடி' கொடுத்து, தங்கள் ஒளிபரப்பை மீண்டும் துவக்க வேண்டும் என்று தாசில்தாரிடம் வலியுறுத்தினர். ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த அவர், அரசு கேபிள் நிறுவன மேலாண்மை இயக்குனரிடமிருந்து உத்தரவு வந்தால் மட்டுமே எதுவும் செய்ய முடியும் என தெரிவித்துள்ளார். இந்நிலையில், அவர் நேற்று முதல் 10 நாட்கள், தனது சொந்த காரணங்களுக்காக விடுப்பில் செல்வதாக கூறி, சென்று விட்டார்.
இந்நிலையில், துண்டிக்கப்பட்ட உள்ளூர் சேனல்களின் ஒளிபரப்பு இரு நாட்களுக்கு முன் துவங்கியது. இதுகுறித்து கேபிள் தொழிலில் உள்ள பிரமுகர் ஒருவர் கூறுகையில், "உள்ளூர் சேனல் ஒளிபரப்புக்கு மாதம் 6.1 லட்சம் ரூபாய்க்கு டெண்டர் எடுத்த நிறுவனங்கள் இதனால் பாதிக்கப்படும் நிலை உள்ளது. தேர்வு செய்யப்பட்ட மூன்றில் ஒன்று ஏற்கனவே இயங்கி வருகிறது. அந்நிறுவனம், அரசு உத்தரவுப்படி இரு மாத கட்டணத்தை செலுத்தியுள்ளது. இன்னும் ஒளிபரப்பை துவங்காத நிறுவனங்கள், இதனால் பெரும் பாதிப்பை சந்திக்கும் நிலை உள்ளது. அதிகப்படியான தொகை செலுத்தி, அதே பகுதியில் அவர்கள் சேனல் நடத்தும்போது, குறைந்தபட்ச தொகை செலுத்திய நிறுவனங்களும் இயங்கும் நிலையில் பெரும் நஷ்டம் ஏற்படும்,' என்றார்.


அரசு கேபிளில் "அரசியல்'
திருப்பூரில் ஒளிபரப்பாகி வரும் உள்ளூர் சேனல்களில் ஸ்மார்ட் "டிவி' அ.தி.மு.க., எம்.பி., சிவசாமியின் உறவினர்களால் நடத்தப்படுகிறது. உடுமலையில் இருந்து ஒளிரப்பாகும் யு "டிவி'யை, கேபிள் கார்ப்பரேஷன் தலைவர் ராதாகிருஷ்ணன் உறவினர்கள் நடத்துகின்றனர். ஜாய் "டிவி' அமைச்சர் ஆனந்தன் ஆதரவாளர்களால் நடத்தப்படுகிறது. எஸ்.எஸ்., "டிவி' அ.தி.மு.க.,வைச் சேர்ந்த உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் மூலம் நடத்தப்படுகிறது.
ஆளும்கட்சியின் முக்கிய பிரமுகர்கள் மூலம் நடத்தப்படும் உள்ளூர் சேனல்களுக்கு முறையாக எந்த கட்டுப்பாடும் விதிக்க முடியாத நிலை உள்ளது. எந்த உத்தரவு வந்தாலும், அதை முக்கிய பிரமுகர்களின் பெயரைக் கூறி, அதை மீறி நடப்பதையே சேனல் நிறுவனங்கள் செய்து வருகின்றன.
உள்ளூர் சேனல் ஒளிபரப்பை தனி தாசில்தார் துண்டித்த நிலையிலும், அதை மீண்டும் இயக்கும் வகையில் அவர்கள் செயல்பாடு அமைந்துள்ளது. இப்
பிரச்னை காரணமாகவே, தனி தாசில்தார் விடுப்பில் சென்றுள்ளதாகத் தெரிகிறது. கட்டுப்பாடற்ற நிலையில், உள்ளூர் சேனல் நிறுவனங்கள் தங்கள் இஷ்டம்போல் மீண்டும் ஒளிபரப்பைத் துவங்கியுள்ளன. அரசியல் விளையாட்டால், அரசு கேபிள் "டிவி' நிறுவனம் "ஆட்டம்' கண்டு வருகிறது.
Related Posts Plugin for WordPress, Blogger...