உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Wednesday, February 01, 2012

சிவன்மலை கோயில் தைப்பூச தேர்த்திருவிழா


ருத்துகள்
திருப்பூர், : காங்கயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவிலில் தைப்பூச தேர் திருவிழா வருகிற 7-ம் தேதி நடக்கிறது.
திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே உள்ள சிவன்மலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. மலைமீது அமைந்துள்ள இந்த கோவிலில் தைப்பூச தேர் திருவிழா ஆண்டு தோறும் நடைபெறும். இந்த ஆண்டுக்கான தேர் திருவிழா நேற்று (29ம் தேதி) மலை அடிவாரத்தில் உள்ள வீரகாளியம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. 

இன்று (30ம் தேதி) இரவு 7 மணிக்கு வீரகாளியம்மன் திருவீதி உலா, 31-ம் தேதி இரவு 7 மணிக்கு வீரகாளியம்மன் திருத்தேர் விழா, கிராம சாந்தி, பிப்ரவரி 1-ம் தேதி காலை 6 மணிக்கு வீரகாளியம்மன் கோவிலுக்கு எழுந்தருளுகிறார். மதியம் 1 மணிக்கு விநாயகர் வழிபாடு, கொடியேற்றம் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து பல்வேறு சமூகத்தாரின் மண்டகப்படி நிகழ்ச்சிகள் தினசரி நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி 7-ம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்குகிறது. தேர் 3 நாட்கள் மலையை சுற்றி வலம் வரும்.
அமைச்சர்கள் செங்கோட்டையன், ராமலிங்கம், ஆனந்தன், எம்.பி., கணேசமூர்த்தி, எம்.எல்.ஏ., நடராஜ், மாவட்ட கலெக்டர் மதிவாணன், மாவட்ட எஸ்.பி. பாலகிருஷ்ணன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் முன்னிலையில் தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து, வருகிற 8 மற்றும் 9-ம் தேதிகளிலும் தேர் மலையை சுற்றி வந்து இரவில் நிலையை அடைகிறது. தேரோட்டத்தையொட்டி இன்னிசை கச்சேரி, வாண வேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. பல்வேறு அமைப்புகள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
Related Posts Plugin for WordPress, Blogger...