உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Wednesday, February 01, 2012

பாலிடெக்னிக்கில் (Polytechnic) படிப்பை முடிக்காதவர்களுக்கு மறு வாய்ப்பு

பாலிடெக்னிக் படிப்பை முடிக்காத மாணவர்களின் விடுபட்ட தேர்வுகளை எழுதுவதற்கான கருணை வாய்ப்பை, அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் 91 ஆயிரம் பேரின் தொடர் கல்விக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
தமிழகத்தில் 30 அரசு, 34 உதவி பெறும் பாலிடெக்னிக்குகள் மற்றும் 365 சுயநிதி பாலிடெக்னிக் உட்பட 450 க்கும் மேற்பட்ட கல்லூரிகள் உள்ளன. தேர்ச்சி பெறாதது, படிப்பை தொடர முடியாத குடும்ப சூழல், வருகை சதவீத குறைவு, தேர்வில் பங்கேற்காதிருத்தல் உள்ளிட்ட காரணங்களால், சிலதேர்வுகளை தொடர்ந்து மாணவர்கள் எழுத முடியாதநிலை உள்ளது.
இவர்களின் கல்லூரி படிப்பு காலத்திற்குப் பின், தொடர்ந்து மூன்று ஆண்டுகள்(6 செமஸ்டர்) தேர்வெழுத வாய்ப்பு வழங்கப்படும்.இத்தேர்விலும் பங்கேற்க முடியாத, தேர்ச்சியடையாத மாணவர்களுக்கு, கருணை வாய்ப்பை அரசு அறிவித்துள்ளது.
பழநி பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் தினகரன் கூறியதாவது:
மாநிலம் முழுவதும் 91 ஆயிரம் மாணவர்கள், பட்டயப் படிப்புகளில் தேர்ச்சி பெறாமல் உள்ளனர்.
இவர்கள் ஏப்ரல், அக்டோபரில் நடைபெற உள்ள தேர்வுகளில் பங்கேற்கலாம். ஒவ்வொரு பாடத்திற்கும் தேர்வுக் கட்டணமாக, 500 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது, என்றார்.
Related Posts Plugin for WordPress, Blogger...