உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Saturday, March 31, 2012

தமிழ்நாட்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் TET (Teacher Eligibility Test) தேர்வு

 TET :
      தமிழ்நாட்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் TET (Teacher Eligibility Test) என்ற தேர்வினை நடத்த திட்டமிட்டு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதற்கான விண்ணப்பத்தில் மாவட்டத்தின் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் CODE (District Wise Employment Office and Code for Teachers Eligiblity Test ) கொடுக்கவேண்டும்.

இதுவரை அது கொடுக்கப்படாததால் அனைவரும் அந்த பகுதியினை நிரப்ப தடுமாறினர். அதற்கான லிங்க் இங்கே உள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாளுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

1 முதல் 8ம் வகுப்புவரை முப்பருவ தேர்வு முறை:
                 தமிழ்நாட்டில் வரும் கல்வியாண்டு முதல் 1 முதல் 8ம் வகுப்புவரை (Trimester I Term Syllabus for I to VIII STD ) முப்பருவத் தேர்வுமுறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.  அதற்கான முதல் பருவத்திற்கான பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.  அதனைப்பெற இங்கே 

Friday, March 30, 2012

திருப்பூர் சத்துணவு மையங்களும் மாநகராட்சி வசமாகும்!

திருப்பூர் : ""மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் உள்ள சத்துணவு கூடங்களை, மாநகராட்சி வசம் ஒப்
படைக்க திட்டமிடப்பட்டுள்ளது,'' என திருப்பூர் ஒன்றிய ஆணையாளர் தண்டபாணி தெரிவித்தார்.
திருப்பூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம், தலைவர் சாமிநாதன் தலைமையில் நேற்று நடந்தது. 
ஒன்றிய ஆணையாளர் தண்டபாணி, பி.டி.ஓ., (ஊராட்சி) பூங்கோதை முன்னிலை வகித்தனர்.மங்கலம் புக்குளிபாளையத்தில் ரேஷன் கடை கட்ட, கோவை எம்.பி., நடராஜன் தொகுதி வளர்ச்சி நிதியில் 4.5 லட்சம் ரூபாய் ஒதுக்கியுள்ளார். இதற்கு கூடுதலாக ஏற்படும் செலவு 1.7 லட்சத்தை பொது நிதியில் மேற்கொள்தல்; மேற்குபதி ஊராட்சி கொன்னக்காடு ஆதிதிராவிடர் காலனி யில் 6.2 லட்சம் மதிப்பில் புதிய ரேஷன் கடை கட்டுதல்.கணக்கம்பாளையம் வாஷிங்டன் நகரில் 5.5 லட்சம் மதிப்பில் சாக்கடை கால்வாய் அமைத்தல்; தொர
வலூரில் சமுதாயக்கூடம் அமைத்தல்; ஊராட்சி ஒன்றிய வணிக வளா கத்தின் மேற்பகுதியில் சமுதாயக்
கூடம் அமைத்தல் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.தொடர்ந்து நடந்த விவாதம்:
சாமிநாதன் (தலைவர்): குடிநீர் பற்றாக்குறைக்கு தீர்வு காணும் வகையில் ஒன்றிய பகுதிகளில் 60 ஆழ் குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டுள் ளன. அவற்றை பயன்பாட்டுக்கு கொண்டு வரவும், ஊராட்சிகள் சார்பில் மின் மோட்டார் பொருத்தி செயல்படுத்தவும், ஊராட்சி தலைவர்களுடன் இணைந்து ஒன்றிய கவுன்சிலர்கள் செயல்பட வேண்டும்.

முத்துசாமி (முத்தணம்பாளையம்): ஊராட்சி தலைவர்களுடன் இணைந்து செயல்பட எங்களுக்கு விருப்பம். ஆனால், அவர்கள் யாரும் எங்களை எதற்கும் அழைப்பதில்லை; மரியாதை இல்லாமல் எப்படிச் செல்வது.
தலைவர்: பொது வாழ்க்கை, பொது சேவைக்கு வந்து விட்டோம். நம்மை அழைக்கவில்லை என்று வருந்தக்
கூடாது. நாமே சென்று மக்களுக்கான பணிகளைச் செய்யலாம். குடிநீர் சப்ளை இல்லாமல், மின் கட்டணம் மட்டும் குறையாமல் உள்ளதாக புகார்கள் வரு கின்றன. இதுகுறித்து குடிநீர் வாரியம் மற்றும் மின்வாரிய அலுவலர்களுடன் ஊராட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும். கடந்த முறை அழைக்கப்பட்ட கூட்டத்துக்கு ஊராட்சி தலைவர்கள் யாரும் வரவில்லை என்ற புகாரும் உள்ளது. ஊராட்சி தலைவர்கள் இதுபோன்ற கூட்டங்களில் தவறாமல் பங்கேற்க வேண்டும்.

சிராஜூதீன் (துணை தலைவர்): திருமண உதவி தொகை வழங்கும் பணியில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியையும் ஒன்றிய அலுவலர்கள் பார்க்க வேண்டியுள்ளது. இதனால், தேவையற்ற கால தாமதம் ஏற்படு
கிறது. மாநகராட்சிக்கு உட்பட்ட விண்ணப்பங்களை மாநகராட்சியே பார்க்க வேண்டும். குழப்பங்களை தவிர்க்க பெறப்படும் விண்ணப்பங்களுக்கு ஒப்புகை வழங்க வேண்டும். ஏராளமான மனுக்கள் நிலுவையில் உள்ளன.

தண்டபாணி (ஆணையாளர்): 
மாநகராட்சி பகுதி சார்ந்த மனுக்களை மாநகராட்சி நிர்வாகமே கவனிக்க வேண்டும் என்று கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மனுக்களுக்கு ஒப்புகை வழங்குவதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய முறையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த வாரம் நூற்றுக்கணக்கான பயனாளி
களுக்கு உதவி வழங்கப்பட உள்ளது. மாநகராட்சியில் இணைக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகள்போல், சத்துணவு மையங்களும் மாநகராட்சிக்கு ஒப்படைக்கப்படும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, விவாதம் நடந்தது.

திருப்பூர் : இன்றைய நிகழ்ச்சி

குண்டம் மற்றும் தேர்த்திருவிழா: கொண்டத்துக்காளியம்மன் கோவில், பெருமாநல்லூர். தேர் முகூர்த்தக்கால் நடுதல் - மாலை 5.30 மணி; பட்டத்தரசியம்மன் அழைப்பு - இரவு 10.00 மணி.
குபேர மகா யாகம்: ஸ்ரீசவுடாம்பிகை அம்மன் திருமண மண்டபம், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீரிஷி யோகாலயா ஞானகவுரி வித்யா யோகபீடம்.
விக்னேஷ்வர பூஜை, நவசக்தி அழைத்தல் - அதிகாலை 3.00 மணி; கலச பூஜை - 4.00 மணி; பூர்ணாஹூதி - 5.15 மணி; ஹயக்ரீவ மூலமந்திரம் - பிற்பகல் 3.45 மணி; தன்வந்த்ரி மூல மந்திரம் - இரவு 9.00 மணி.
திருத்தொண்டர் புராண தொடர் சொற்பொழிவு: ஏ.டி.டி., பையிங் அலுவலகம், புது பஸ் ஸ்டாண்ட் எதிரில், திருப்பூர். சொற்பொழிவாளர் - தியாகராஜன். மாலை 5.00 முதல் இரவு 7.00 மணி வரை.
பொங்கல் விழா: சித்தி விநாயகர், மாகாளியம்மன் கோவில், கரட்டாங்காடு, திருப்பூர். அன்னதானம் - மதியம் 12.00 மணி.
மண்டல பூஜை: ஸ்ரீவீரமாத்தி அம்மன் கோவில், நல்லூர், திருப்பூர். காலை 6.00 மணி.
* காமாட்சி அம்மன் கோவில், திருமுருகன்பூண்டி, அவிநாசி. காலை 6.00 மணி.
* மயிலம்மன் கோவில், லட்சுமி நகர், திருப்பூர். காலை 6.30 மணி.
* கன்னிமூல கணபதி, கரியகாளியம்மன், மகா காளேஸ்வரர் கோவில், ஆலத்தூர். மாலை 6.00 மணி.
* ஓம்சக்தி கோவில், பெருந்தொழுவு, திருப்பூர். காலை 5.30 மணி.
பொது
விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்: ஆர்.டி.ஓ., அலுவலகம், குமரன் ரோடு, திருப்பூர். காலை 11.00 மணி.
பட்ஜெட் கூட்டம்: நகராட்சி அரங்கு, பல்லடம். காலை 11.00 மணி.
கம்பி மற்றும் கம்பியில்லா வலை பின்னல் குறித்த கருத்தரங்கு: ஏஞ்சல் பொறியியல் கல்லூரி, தாராபுரம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: கம்ப்யூட்டர் சயின்ஸ் துறை. காலை 10.00 மணி; "நைஸ் மேஜிக்' மாநாடு நிறைவு விழா - பிற்பகல் 3.00 மணி.
இலவச மருத்துவ காப்பீடு திட்டம் குறித்து ஆலோசனை முகாம்: ரேவதி மெடிக்கல் சென்டர், குமார்நகர், திருப்பூர். காலை 10.00 மணி முதல்.

திருப்பூர், அரசு அலுவலர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்


திருப்பூர்

 திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுத் துறை அலுவலர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் சனிக்கிழமை (மார்ச்-31) நடைபெற உள்ளது. இதில், பங்கேற்க திருப்பூர் மாவட்ட அரசுத் துறை அலுவலர்கள், அமைச்சுப் பணியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆட்சியர் எம்.மதிவாணன் விடுத்துள்ள செய்தி:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (திருப்பூர் பிரிவு) சார்பில் மாவட்ட அளவில் அரசு பணியாளர்களுக்கான தடகள விளையாட்டுப் போட்டிகள் சனிக்கிழமை (மார்ச் 31) நடத்தப்பட உள்ளது. திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் காலை 8 மணிக்கு நடைபெற உள்ள இப்போட்டிகள் ஆண்கள், பெண்களுக்கு தனித் தனியாக நடத்தப்பட உள்ளன.அதன்படி, 30 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கு 100மீ, 3000மீ ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகளும், 40 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கு 100மீ, 1500மீ ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் போட்டிகளும், 50 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கு 50மீ, 3000மீ ஓட்டம், நடை பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் போட்டிகளும், 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 200மீ நடை பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் போட்டிகளும் நடத்தப்பட உள்ளது.அதேபோல, 30 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு 100மீ, 800மீ ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகளும், 40 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு 100மீ, 3000மீ நடை பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் போட்டிகளும், 50 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு 50மீ, 1500மீ நடை பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் போட்டிகளும், 50 வயதுக்கு மேற்பட்ட 200மீ நடை பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் போட்டிகளும் நடத்தப்பட உள்ளது.
இதில் அனைத்து அரசுத் துறை அலுவலர்கள், அமைச்சுப் பணியாளர்கள் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலரை 0421 -2244899 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அலுவலகத்தையோ தொடர்பு கொள்ளலாம்.

(வைரை சதிஷ்) பதிவை திருடினாலும் இனி கவலை இல்லை?

நாம் பதிவு எழுதி அதை PUBLISH செய்து திரட்டிகளில் இனைப்பதற்கு முன் நாம் எழுதிய பதிவை சில திருட்டுபயலுவ களவாடிடுட்டு போயிரானுவ.களவாண்டதோட மட்டுமல்லாம தான் தான் எழுதின மாதிரியே ஒரு பந்தா வேற. இனி அந்த கவலை வேண்டாம்.ஓர் இலவச கண்காணிப்பு சேவை வந்துவிட்டது.

                             இந்த நல்ல சேவையை வழங்கும் தளம்             

                                                         http://id.tynt.com


கீழே உள்ள DEMO தளத்திற்க்கு சென்று நீங்கள் ஏதாவது 2 வரிகளை Copy செய்து விட்டு எங்கு வேண்டுமானாலும் Paste செய்து பாருங்கள்.உங்களுக்கே புரியும்.

"பேஸ்புக் ஏற்படுத்திய அவலம் – உண்மைச்சம்பவம்

பல வியாதிகளை குணப்படுத்தும் தண்ணீர்

தினமும் அதிகாலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது இப்போது பிரபலமாகி வருகிறது.
ஆனால் இம் முறையை நம் முன்னோர்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக பின்பற்றி வந்துள்ளார்கள்.
அவர்கள் தண்ணீருக்குப் பதிலாக பழந்தண்ணீரை (சோற்றுப் பானைக்குள் எஞ்சிய சோற்றிக்குள் விட்டு வைத்த நீர்) குடித்துவிட்டு தோட்டத்திற்கும் , வேறு தொழில்களுக்கும் செல்வார்கள். அதனால் அவர்கள் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். ஆனால் தற்பொழுது நாகரீக உலகில் அவையெல்லாம் அநாகரிகமாக கணிக்கப்பெற்று கட்டிலில் தேநீர் அருந்தும் வழக்கம் முன்னெடுக்கப் பெற்று நாம் எல்லாம் நோயாளிகளாகி வருகின்றோம்.

நாம் நித்திரையில் இருக்கும்போது வாய்மூலம் உடலினுள் புகும் நோய் கிருமிகளை அழிப்பதற்காக வாயினுள் பல நோய் எதிப்பு சுரப்பிகள் சுரப்பதாகவும், அவை நாம் நித்திரை விட்டெழுந்ததும் வாய் கழுவாது நீர் பருக்கும் போது உடலினுள் சென்று பல நோய்களை குணப்படுத்தும் மருந்தாக மாறுகின்றன எனவும் அறிய முடிகின்றது. வாய் கழுவாது காலையில் நீர் குடிப்பவர்கள் கட்டாயம் நித்திரைக்குச் செல்லும்போது பல் துலக்கி வாயை சுத்தமாக வைத்திருத்தல் அவசியமாகின்றது.

4500க்கும் மேற்பட்ட இலவச photoshop File-களைத் தரவிறக்க

வணக்கம் நண்பர்களே.. !!

போட்டோஷாப் கற்றுக்கொள்ள அனைவரும் விரும்புவர். அதற்காக இணையத்தில் பல Photoshop Tutorial -களை நாடுவதுண்டு. பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே இத்தளங்கள் இருப்பதால் இவற்றைப் புரிந்துகொண்டு, அதைப்போன்றே செய்வது என்பது சற்று சிரமமானதாகவே இருக்கும்..
download psd file

இந்த மாதிரியான சூழ்நிலைகளில் அரைகுறையாகப் புரிந்துகொண்டு அதைச் செய்யும்போது நாம் எதிர்பார்த்த Effect கிடைக்காது.

மாதிரிக் கோப்புகளை(Model Photoshop files) காணும்போது அதில் என்னனென்ன Action இருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டு, எவ்வாறு செய்திருக்கிறார்கள் என்பதைக்கூட எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். (இது போட்டோஷாப் கற்றவர்களுக்கு எளிதாக விளங்கும்)

அதுபோலவே நாம் தரவிறக்கிய PSD கோப்புகளிலேயே சில மாற்றங்களைச் செய்து நமக்கு ஏற்றவாறு மாற்றி, அதையே நாம் பயன்படுத்திக்கொள்ளலாம்.

Thursday, March 29, 2012

உடுமலை வாரம் தோறும் நுகர்வோர் குறைதீர் கூட்டம்: மின்வாரியம் தகவல்

உடுமலை மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட கோட்ட அலுவலகங்களில் வாரம் தோறும் புதன்கிழமைகளில் நுகர்வோர் குறை தீர் கூட்டம் நடக்கிறது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உடுமலை மின் பகிர்மான வட்டத்தில், தாராபுரம், பொள்ளாச்சி, அங்கலக்குறிச்சி, உடுமலை ஆகிய கோட்டங்கள் உள்ளன. கோட்ட அலுவலகங்களில் நுகர்வோர் குறை தீர் கூட்டம் முறையாக நடத்தப்படுவதில்லை என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டு வந்தது.
இது குறித்து உடுமலை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் மனோகரன் வெளியிட்டுள்ள அறிக்கை: 
உடுமலை மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட கோட்ட அலுவலகங்களில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் நுகர்வோர் குறை தீர் கூட்டம் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடத்தப்படுகிறது.
இது குறித்த தகவல்கள் நுகர்வோர்கள் அறிந்து கொள்ளும் வகையில், சம்பந்தப்பட்ட கோட்ட அலுவலகங்களின் தகவல் பலகையில் அறிவிப்பு செய்யப்படுகிறது. இக்கூட்டங்களில் நுகர்வோர் அளிக்கும் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மாவட்ட கலெக்டரிடமிருந்து பெறப்படும் பொதுமக்கள் குறை தீர் கூட்ட மனுக்கள் மற்றும் விவசாய குறை தீர் கூட்டங்களில் பெறப்படும் மனுக்களுக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
எனவே நுகர்வோர் சம்பந்தப்பட்ட கோட்ட அலுவலகத்தில் நடக்கும் குறைதீர் கூட்டங்களை பயன்படுத்தி கொள்ளலாம்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடுமலை கோட்டத்திற்குட்பட்ட குறை தீர் கூட்டம் நேற்று கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில், சீரான மும்முனை மின்சாரம், பழுது சரிபார்ப்பதில் காலதாமதம் உட்பட பல்வேறு புகார் மனுக்களை விவசாயிகள் அளித்தனர்.
முகாமில், மேற்பார்வை பொறியாளர் மனோகரன் மற்றும் அதிகாரிகள் புகார் மனுக்களை பெற்றனர்.

அடுத்தடுத்த நிறுத்தங்களில் அரசு பஸ்களில் திடீர் ஆய்வு

:திருப்பூரில் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து நிறுத்தங்களிலும் அரசு பஸ்கள் நிற்கிறதா; சரியான நேரத்துக்கு இயக்கப்படுகிறதா என அரசு போக்கு வரத்து கழக அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.
திருப்பூரில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில், 252 டவுன் பஸ்கள், 302 மப்சல் பஸ்கள் இயக்கப்படுகின்றன. அவை தவிர, பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திருப்பூருக்கு பஸ்கள் இயக்கப் படுகின்றன. அரசு பஸ்களின் வருவாயை அதிகரிக்க வேண்டிய நிலையில், தனியார் பஸ்களில் இருக்கும் கூட்டம் அரசு பஸ்களில் இருப்பதில்லை. பயணிகளிடம் கனிவாக நடந்து கொள்ளாமல் இருப்பது; பஸ்களை உரிய நிறுத்தங்களில் நிறுத்தாமல் இருப்பது; சில அரசு பஸ் ஊழியர்கள் தனியார் பஸ்களுக்கு சாதகமாக சரியான நேரத்துக்கு இயக்காதது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்து வந்தன.
இந்நிலையில், அரசு பஸ்கள் சரியான நேரத்துக்கு இயக்கப்படுகிறதா; அனைத்து நிறுத்தங்களிலும் நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல் கின்றனவா என ஆய்வு செய்ய போக்குவரத்து கழக உயரதிகாரிகள் உத்தரவிட்டனர். போக்குவரத்து கழக கிளை மேலாளர்கள், அலுவலர்கள், செக்கிங் இன்ஸ்பெக்டர்கள் கொண்ட தனி குழு அமைக்கப்பட்டது. திருப்பூர் வரும் அனைத்து வழித்தடங்களிலும், அனைத்து நிறுத்தங்கள் என 24 இடங்களில் இக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். ஒரு குழுவுக்கு மூன்று பேர் என மொத்தம் 72 பேர் இப்பணியில் ஈடுபட்டனர்.
ஒவ்வொரு நிறுத்தத்துக்கும் பஸ்கள் வரும் நேரம்; போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் ரோட்டோரங்களில் பஸ்கள் நிறுத்தப்படுகிறதா; பயணிகளை பொறுமையாக ஏற்றி, இறக்கி விடுகி றதா; அடுத்தடுத்து வரும் பஸ்கள் குறிப்பிட்ட நேர இடைவெளியில் வருகிறதா என ஆய்வு செய்தனர்.
கண்டக்டரும், டிரைவரும் பயணிகளிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. நேற்று காலை 7.30 முதல் 11.30 மணி வரை, பிற்பகல் 3.00 முதல் 8.00 மணி வரை, ஆய்வு நடந்தது.
போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், "அரசு பஸ்களில் வரும் பயணிகளுக்கு சரியான சேவை சென்றடைய வேண்டும் என்பதற்காக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மாதத்துக்கு ஒருமுறை ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளோம்,' என்றனர்.

திருப்பூர் பெரிய கடை வீதி ஒரு வழிப்பாதையா மாற்றப்படுகிறது

திருப்பூர் :"வரும் ஏப்., 1 முதல், திருப்பூர் பெரிய கடை வீதி ஒரு வழிப்பாதையா மாற்றப்படுகிறது,' என, தெற்கு போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.
திருப்பூரில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண, போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பெரிய கடை வீதி, வணிக நிறுவனங்கள், அரிசி கடைகள், கோவில், பள்ளிவாசல், பள்ளிகள் அதிகளவு உள்ள பகுதியாக உள்ளதால், போக்குவரத்து நெரிசல் மிகுந்த ரோடாக உள்ளது. இதனால், வாகனங்கள் செல்ல சிரமம் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில், பெரிய கடை வீதி மற்றும் சுற்றியுள்ள நான்கு வீதிகளிலும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பெரிய கடை வீதி ஒரு வழிப்பாதையாக மாற்றப்படுகிறது. இந்நடைமுறை ஏப்.,1 முதல் அமலுக்கு வருகிறது.
அதன் அடிப்படையில், காங்கயம் ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள் பெருமாள் கோவில் வீதி வழியாக குமரன் ரோட்டுக்கு செல்ல தடை விதிக்கப்படுகிறது. காங்கயம் ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள் நேராக சென்று, தாராபுரம் ரோடு வழியாக வர வேண்டும்.
வளம் ஆற்றுப்பாலத்தில் இருந்து நேராக காங்கயம் ரோடு செல்லக்கூடாது; குமரன் ரோட்டில் இருந்து அரிசி கடை வீதி வழிய õக காங்கயம் ரோடு செல்லக்கூடாது. ஈஸ்வரன் கோவில் வீதியில் இருந்து கே.எஸ்.சி., பள்ளி வழியாக தாராபுரம் ரோடு செல்லக்கூடாது. இதன் அடிப்படையில், அரிசி கடை வீதி, பெரியகடை வீதி, டூம்லைட் மைதானம் வீதி, கே.எஸ்.சி., பள்ளி வீதி ஆகியவை ஒரு வழிப்பாதையாக மாற்றியமைக்கப்படுகிறது.
போக்குவரத்து போலீசார் கூறுகையில், "ஒரு வழிப்பாதை திட்டம் ஏப்., 1 முதல் அமல்படுத்தப்படும். இதுகுறித்து அனைத்து ரோடுகளிலும் அறிவிப்பு பலகைகள் வைக்கப்படும். மீறினால் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக் கப்படும்,' என்றனர்.

Word Web - மிக அருமையான இலவச அகராதி(Dictionary) | Karpom

Word Web - மிக அருமையான இலவச அகராதி(Dictionary) | Karpom


பசுமை விடியல்: தாமிரபரணியிலிருந்து ஆலைகளுக்கு அளவுக்கதிகமான தண்ணீர் - பாதுகாப்பு இயக்கம் குற்றச்சாட்டு

Wednesday, March 28, 2012

விரைவாகத் தமிழில் தட்டச்சிட.


நேற்று இணையத்தில் உலவலாம் என்று கடைக்குச் சென்றேன். அங்கு அந்தக் கடைக்காரர் தமிழில் ஒரு கோப்பு உருவாக்க கணினியோடு போராடிக் கொண்டிருந்தார். ஐந்து நிமிடத்தில் தயாரிக்கவேண்டிய தமிழ்க்கோப்பை முப்பது நிமிடத்தில் தயாரித்தார். அழகி என்னும் தமிழ்த்தட்டச்சு மென்பொருளைப் பயன்படுத்தி மேல்உள்ள எழுத்து அட்டவணைகளில் சுட்டியைக் கொண்டு ஒவ்வொரு எழுத்தாகச் சுட்டி அவர் அந்தக்கோப்பைத் தயாரித்தார். 

அவர் நிலைகண்டு வருந்திய நான் பொங்குதமிழின் மென்பொருளைப் பதிவிறக்கிக் கொடுத்தேன். இணைய இணைப்பின்றியும் பயன்படுத்தத்தக்க அந்தக்கோப்பைப் பயன்படுத்தி தமிங்கில முறையில் எளிதில் அவரால் தட்டச்சிடமுடிந்ததை சில நொடிகளிலேயே பார்த்தேன். அவருக்கு ஒன்றைச் சொல்லிக்கொடுத்த நிறைவோடு வந்தேன்.

தொழில்முறையிலிருப்பவர்களுக்கே தமிழ்த்தட்டச்சு குறித்த விழிப்புணர்வு குறைவாகத்தானே இருக்கிறது..

பதிவுலகத் திருடர்கள் வாழ்க (http://gunathamizh.blogspot.inஇருந்து திருடியது)


பணத்தைத் திருடலாம்!
தங்கத்தைத் திருடலாம்!
அறிவை..?

காவல் நிலையங்கள் 
நீதி மன்றங்கள்
இத்தனை இருந்தும் 
ஏன் குறையவில்லை குற்றங்கள்?

பதிவுலகத் திருட்டைத் தடுக்க
எத்தனை எத்தனை 
வழிமுறைகள் 

வலதுசுட்டியைச் செயலிழக்கவும்
இடது சுட்டியைச் செயலிழக்கவும்
காப்புரிமை சட்டங்களும்
ஆயிரம் ஆயிரம் 
பாதுகாப்புகள் இருந்தாலும் 
தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன
பதிவுலகத் திருட்டுகள்..

புதிய பிஎஸ்என்எல் பென்டா டிபேட் டேப்லட்: ஒரு சிறப்பு கண்ணோட்டம்!

புதிய பிஎஸ்என்எல் பென்டா டிபேட் டேப்லட்: ஒரு சிறப்பு கண்ணோட்டம்!:
சமீபத்தில் 3 விலை குறைந்த டேப்லட்களை வெளியிட்ட பிஎஸ்என்எல் நிறுவனம் புதிதாக பென்டா டிபேட் டபிள்யூஎஸ்802-சி என்ற டேப்லட்டை உருவாக்கி உள்ளது. இந்த டேப்லட் நிச்சயம் பணத்திற்கு தகுந்த தொழில் நுட்பத்தினை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கும்.
தெள்ள தெளிவான வெள்ளை நிறத்தில் வடிவமைக்கப்பட்டு இருக்கும் இந்த டேப்லட், உயர்ந்த ரக தொழில் நுட்பங்களை கொண்டுள்ளது என்பதை தோற்றத்திலேயே வெளிப்படுத்தும் விதமாக இருக்கும். 8 இஞ்ச் திரையில் கலக்கும் இந்த டபிள்யூஎஸ்802சி டிபேட் 800 X 600 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் தரும். இந்த அகலமான திரையினால் 2 அல்லது 3 பேர் கூட சவுகரியமாக படங்களை பார்க்க முடியும்.

ஜிமெயிலில் முகவரியை நீக்குவது எப்படி?

ஜிமெயிலில் முகவரியை நீக்குவது எப்படி?:
மின்னஞ்சல் பயன்படுத்துவோர் அனைவரையும் வசியப்படுத்தி வைத்திருப்பது ஜிமெயில். அடிக்கடி தரப்படும் புதிய வசதிகள், அதிக அளவிலான ஸ்டோரேஜ், அனுப்பும் பைல் களின் அதிகப்படியான கொள்ளளவு என அனைத்து பிரிவுகளிலும் வாடிக்கையாளர் களின் விருப்பங்களின் அடிப்படையில் புதிய வசதிகளை வடிவமைத்துத் தருவது இதன் சிறப்பு.


ஒருமுறை மட்டுமே கூடப் பயன்படுத்தும் மின்னஞ்சல் முகவரிகளை ஜிமெயில் தன் நினைவகத்தில் வைத்துக் கொண்டு, அடுத்த முறை அந்த முகவரியின் முதல் சில எழுத்துக்களை டைப் செய்தவுடனேயே, முழு முகவரியினைக் காட்டும்.

உங்கள் மொபைல் போன் திருடு போய்விட்டதா?

உங்கள் மொபைல் போன் திருடு போய்விட்டதா? அல்லது கவனக் குறைவாகத் தொலைத்துவிட்டீர்களா? இதனைத் திரும்பப் பெற ஒரு வழி உள்ளது. இதற்கு உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண்ணை முன்பே தெரிந்து குறித்து வைத்திருக்க வேண்டும்.

எனவே உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண்ணை இதுவரை குறிக்காமல் இருந்தால், கீழ்க்காணும் செயல்பாட்டினை மேற்கொண்டு தெரிந்து, பத்திரமான ஓர் இடத்தில் பதிந்து வைக்கவும். மொபைல் போனில் *#06# என டைப் செய்து டயல் செய்திடவும்.

இப்போது 15 இலக்க எண் உங்களுக்கு கிடைக்கும். இதுதான் உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண். இதனை ஆங்கிலத்தில் (IMEI International Mobile Equipment Identity) என அழைப்பார்கள்.

கூகுல் பிலஸ் தேடியந்திரம்.

தகவல்கள் தேவை என்றால் கூகுலில் தேடிக்கொள்ளலாம்.ஆனால் அந்த தகவலின் செல்வாக்கை அறிந்து கொள்ள வேண்டும் என்றால் என்ன செய்வது?அதாவது குறிப்பிட்ட செய்தி இணையத்தில் எந்த அளவுக்கு பிரபலமாக உள்ளது என்பதை அறிய வேண்டும் என்றால் என்ன செய்வது?
இதற்காக என்றே புதிய தேடியந்திர சேவை ஒன்று உதயமாகியுள்ளது.
கவனிக்க, புதிய தேடியந்திரம் அல்ல;புதிய தேடியந்திர சேவை!அதாவது தேடியந்திரமான கூகுலின் தேடல் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள சேவை.
கூகுல் சார்ந்த சின்ன சின்ன தேடல் மேம்பாடுகளை வழங்கும் புத்திசாலி தேடியந்திரங்கள் பல இருக்கின்றன.அந்த வகையில் இப்போது சிடிஆரெல்ஜி தேடியந்திர சேவை அறிமுகமாகியுள்ளது.
எந்த தலைப்பையும் இதில் தேடிப்பார்க்கலாம்.குறிப்பிட்ட அந்த தலைப்பிற்கான கூகுல் முடிவுகளை இந்த தளம் பட்டியலிடுவதோடு ஒவ்வொரு முடிவில் உள்ள இணைப்பும் எத்த்னை முறை சமூக வலைப்பின்னல் தளங்களில் பகிரப்பட்டுள்ளது என்ற தகவலும் இடம் பெறுகிறது.

பசுமை விடியல்: மண்ணைக் காக்க உயிரிழந்த சதிஷ்குமாரின் குடும்பத்திற்கு சிறு உதவி

பசுமை விடியல்: மண்ணைக் காக்க உயிரிழந்த சதிஷ்குமாரின் குடும்பத்திற்கு சிறு உதவி


ப்ளாக்கர் : புதுமையான RELATED POST WIDGET


Relatedpostwidget


பிளாக்கர் தளத்தில் பலரும் பல தொடர்புடைய இடுகைகள் பக்க உறுப்பை பார்திருப்பீர்கள் . ஒரு பதிவை படிக்கும் போது அந்த பதிவு தொடர்பான இடுகைகளை காண்பிப்பது தான் தொடர்புடைய இடுகைகள் பக்க உறுப்பு (Related Post Widget ) ... படத்துடன் கூடிய தொடர்புடைய இடுகைகள் ... படம் இல்லாமல் உள்ள Related Post widget போன்ற வற்றை பார்த்திருப்போம்  ...


இன்று நாம் பார்க்க போகும் Related Post widget கொஞ்சம் வித்தியாசமான முறையில் உருவாக்கப் பட்டது ... 

நீங்கள் ஒவ்வொரு முறை பதிவிடும் போதும் Labels என்ற பகுதியில் பதிவுகளுக்கேற்ற குறிச்சொற்களை பயன்படுத்துங்கள். அப்படி குறிச்சொற்களை பயன்படுத்தியிருந்தால் தான் இது பயனளிக்கும்.

அந்த விட்ஜெட் -ஐ  கொண்டு வர நாம் செய்ய வேண்டியது : 

என்பதை தேடி அதற்கு முன்னால் 

கீழே வரும் கோடிங்கை PASTE செய்யவும்  ...

பேஸ் புக் பக்கத்தில் கூகுள் பிளஸ் அப்டேட் களை பார்க்க

google%252520plus%252520stream%252520into%252520facebook%252520page%25255B11%25255D


 பேஸ் புக் தளம் கூகுள் பிளஸ் வந்ததில் இருந்து புது வசதிகளை தந்து கொண்டே இருக்கிறது .  கூகுள் பிளஸ் தளத்தை நாம் பேஸ் புக் பக்கத்திலே பார்க்கலாம் .


கூகுள் பிளஸின் உடனடி அப்டேட்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம் .  இதற்க்கு கூகுள் பிளசுக்குள் பேஸ் புக் பார்க்கலாம் .இது கூகுள் குரோம் நீட்சியினால் தான் முடியும் .ஆனால் பேஸ் புக் தளம் வழங்கும் இந்த வசதி எந்த நீட்சியும் தேவை இல்லை . பேஸ் வழங்கும் ஒரு அப்ளிகேஷன் கொண்டு இது சாத்தியம் ஆகும் .

1.முதலில் இந்த பேஸ் புக் பக்கத்துக்கு  Google Plus Tab for Pages செல்லுங்கள் .

image52

2.இந்த பக்கத்துக்கு சென்று go to app என்பதை கிளிக் செய்யவும்
.
Go to App

3.இந்த இடத்தில் உங்கள் கூகுள் பிளஸ் ஐ -டியை கொடுத்து விடுங்கள் .

பிளாக்கரில் வானிலை விட்ஜெட் எப்படி இணைப்பது

dfgblogfeather

வானிலையின அறிக்கை நாம் தினமும் தொலைக்காட்சி செய்திகளின் முடிவில் கேட்போம் . இதை ஏன் உங்கள் தளங்களில் நிறுவி வானிலை அறிந்து கொண்டால் எப்படி இருக்கும் . வானிலை என்றால் டெல்லி , மும்பை ,சென்னை ஆகிய நகரங்களுக்கு மட்டும் மல்ல மதுரை ,திருச்சி , தூத்துக்குடி , ராஜபாளையம் ,திருநெல்வேலி, போன்ற நம்ம ஊர்களின் வானிலையை காட்டும் ஒரு அற்புதமான விட்ஜெட்  . இந்த பக்க உறுப்பை வழங்குபவர்கள் தினமலர் . 

GOOGLE CHROME-குரோமில் ஏற்படும் Shockwave plug-in crashes பிழையை சரி செய்வது எப்படி?

GOOGLE CHROME-குரோமில் ஏற்படும் Shockwave plug-in crashes பிழையை சரி செய்வது எப்படி?:
ஏராளமான இணைய பிரவுசர்கள் இருந்தாலும் கூகுள் நிறுவனம் வழங்கும் க்ரோம் பிரவுசர் தற்பொழுது பெரும்பாலானவர்களால் உபயோகப் படுத்தப்படுகிறது. இதன் வேகம், எளிமை, வசதிகள் போன்ற வற்றால் மிக வேகமாக வளர்ந்து வரும் பிரவுசராகும். அதிகம் பயன்படுத்துபவர்கள் வரிசையில் உலகளவில் இரண்டாவது இடத்தையும் இந்தியாவில் முதல் இடத்திலும் உள்ள சிறப்பு மிக்க பிரவுசர் குரோம் பிரவுசராகும். சிறப்பம்சங்கள் இருந்தாலும் உலவியை பயன்படுத்தும் பொழுது சில பிழைகளை சந்தித்து இருப்போம். அதில் Shockwave Plug-in crashed என்ற பிழையும் அடிக்கடி உருவாகும். இந்த பிழையை எப்படி சரி செய்வது என பார்ப்போம்.


பிழையை சரிசெய்வது எப்படி:

Tuesday, March 27, 2012

திருப்புர் செட்டிபாளையத்தில் வீடு விற்பனைக்கு

திருப்புர் செட்டிபாளையத்தில் வீடு விற்பனைக்குதிருப்புர் செட்டிபாளையத்தில் வீடு


விற்பனைக்கு நான்கு R.C.C வீடுகள்,


 நான்கு மின் இணைப்பு, நல்லதண்ணீர் 


போர் water போன்ற வசதிகளுடன் 


உடனடி விற்பனைக்கு உள்ளது 


தொடர்பு கொள்ளவும்


9715520867

பிளாக்கர் : பதிவுகளை ஸ்க்ரோல் பாரில் ( SCROLL BAR ) காட்ட (BLOG POST)

பதிவுகளை ஸ்க்ரோல் பாரில் (SCROLL BAR)காட்ட


பதிவு எழுதும்  நண்பர்கள் அனைவரும் சில நேரங்களில் சில பதிவுகளை  பெரிதாக எழுதுவார்கள் .இதனால் பதிவு நீண்டு கொண்டே செல்லும் ... இதனால் பதிவை பார்த்து சிலர் பெரிய பதிவாய் இருப்பதால் படிக்காமல் (பயந்து) சென்று விடுவார்கள் ...  பதிவு முழுவதையும் நாம் ஒரு பெட்டியில் ஸ்க்ரோல் பாரில் காண்பித்தோம் என்றால்
படிப்பவருக்கு மிக எளிதாகிவிடும் ... மேலும் படித்து கொண்டிருக்கும் போது மற்ற வலதுப்பக்கத்திலோ அல்லது இடது பக்கத்திலோ உள்ள விட்ஜெட்-கள் கண்ணில் தெரியும் ... பதிவிட்டு அதிலும் இணைந்து கொள்வார்கள் ... அல்லது அதில் உள்ள பதிவுகளை படிப்பார்கள் ...

முன்னே  ஒரு பதிவில் சொன்னது போல கீழே உள்ள நிரல் வரிகளை கண்டறிந்து  


.post { அல்லது post {


அதற்கு கீழே சேர்க்க வேண்டும் 

overflow: auto;
width:auto;
height:auto; 
 
சேர்த்த பின் இப்படி இருக்க வேண்டும்  
 
.post {
 overflow: auto;
width:auto;
height:auto; 
}

SAVE TEMPLATE கொடுத்து வெளியே வந்து பார்க்கவும் ..

இந்த  மாற்றங்களை செய்ய முடியாதவர்கள் : 

DESIGN - ADD WIDGET - SELECT HTML & JAVA SCRIPT

அங்கே PASTE செய்ய வேண்டிய கோடிங் கீழே :

<style type"text/css"> .post{ overflow: auto; width:auto; height:auto;}</style>

குறிப்பிட்ட பதிவுகளில் மட்டும் பயன்படுத்த :

<div style="overflow:auto; width:auto; height:auto;">
TEXT HERE (இங்கே)
</div>

TEXT HERE (இங்கே) என்னும் இடத்தில் தேவையானதை எழுதி

HTML என்னும் பட்டனை அழுத்தி அங்கு PASTE செய்ய வேண்டும் ..

Tamil Nadu Govt. Vision - 2023(

Monday, March 26, 2012

போட்டோஷாப் கற்றுக்கொள்ள பயனுள்ள யூடியூப் சேனல்கள் - 2

தேடியந்திரங்களுக்காக பிளாக்கரில் சில புதிய வசதிகள் [SEO Tricks] | வந்தேமாதரம்

தேடியந்திரங்களுக்காக பிளாக்கரில் சில புதிய வசதிகள் [SEO Tricks] | வந்தேமாதரம்

தாய் மொழியாம் தமிழ் மொழியில் கூகிள் குரோமின் (CHROME) உதவிப் பக்கம்.

தாய் மொழியாம் தமிழ் மொழியில் கூகிள் குரோமின் (CHROME) உதவிப் பக்கம்.:  

புதிதாக இணையத்தை பயன்படுத்த வருபவர்களுக்கு ஒரு இணைய உலாவி

பற்றிய அடிப்படை விடயங்களையும் அதன் பயன்பாடு பற்றியும் அறிந்திருப்பது அவசியமாகும்.இவ்வகையான தகவல்களே அவர்களின் பாதுகாப்பான மற்றும் இலகுவான இணைய அனுபவதிற்கு உதவி செய்யும்.


Read more »

உபுண்டு மென்பொருள் மையம்

உபுண்டு மென்பொருள் மையம்:

இந்த, கட்டுரையில், உபுண்டு மென்பொருள் மையம்(Ubuntu Software Center) செய்ய முடியும் விஷயங்கள் என்ன என்பதை பார்ப்போம். உபுண்டு பயன்படுத்தி  இருந்தால், உபுண்டு மென்பொருள் மையம் பற்றி தெரிந்திருக்கும். நீங்கள் பயன்பாடுகளை(Applications) சேர்க்க அல்லது நீக்க இது பயன்படுகிறது. உங்கள் உபுண்டு ல் நிறுவப்பட்ட மென்பொருள்களைப் பார்த்தல் மற்றும் மாற்றுதல், மேம்படுத்துதல், நீக்குதல் மற்றும் அனைத்தையும் பற்றி வரலாற்றில் பெற முடியும். 

உபுண்டு மென்பொருள் மையம் திறக்க: 
 Go to Applications>Ubuntu Software Center இது திறக்க சிறிது நேரம் பிடிக்கும். 
 உபு  ண்டு மென்பொருள் மையம் இவ்வாறு காட்சியளிக்கும்.

அழகான ASCII எழுத்துகளை டெர்மினலில் உருவாக்க

அழகான ASCII எழுத்துகளை டெர்மினலில் உருவாக்க:
நம்முடைய மொபைலில் ascii smsகளை பார்த்து பிறருக்கும் அனுப்பி மகிழ்ந்திருப்போம். வெறும் எழுத்துகளை வைத்துகொண்டு படங்களை உருவாக்குவது மிகவும் கடினமான காரியம்.

குனு/லினக்ஸில் சில டூல்கள் இது போல அழகான ASCII எழுத்துகளையும்,

படங்களையும் உருவாக்க நமக்கு உதவுகிறது.

 FIGLET
  இதனை உபுண்டுவில் நிறுவ  


$ sudo apt-get install figlet


என கொடுத்து நிறுவி கொள்ளவும்.

உங்கள் பெயரினை ascii யில் பார்க்க டெர்மினலில்

$ figlet 'hello'

 என கொடுத்து பாருங்கள்.
_          _ _    
| |__   ___| | | ___
| '_ \ / _ \ | |/ _ \
| | | |  __/ | | (_) |
|_| |_|\___|_|_|\___/

எப்புடி.??

 அடுத்து சில படங்களை ascii யாக மாற்றுவது என பார்போம்.

 இதற்கு பல டூல்கள் இருக்கின்றது. உதாரணத்திற்கு aview, jp2a

jp2a நிறுவ

$ sudo apt-get install jp2a

எதாவது ஒரு இமேஜை மாற்ற( இமேஜ் jpg பார்மட்டில் இருக்க வேண்டும்)  

$ jp2a sample.jpg

இப்போது asciiஇல் தெரியும்.பயர்பாக்ஸில் குக்கீகள்

பயர்பாக்ஸில் குக்கீகள்:
ஒரு பிரவுசர் புரோகிராமினைப் பயன்படுத்துபவரின் விருப்பங்களையும் தேர்வுகளையும் அறிந்து கொள்ள, பிரவுசர் கம்ப்யூட்டரில் உருவாக்கி வைத்திடும் பைல்களே குக்கீ பைல்கள்.

பாஸ்வேர்ட் அறிந்து கொள்ளுதல், விருப்பமான தளங்களைப் புரிந்து கொள்ளுதல் போன்ற பயனாளரின் விருப்பங்களை, இந்த குக்கீ பைல்கள் பதிந்து வைத்துக் கொண்டு, இணைய உலாவினை எளிதாகவும், சிக்கலின்றியும், விரைவாகவும் இயக்குகின்றன.

மெரீனாவில் சேனல் 4 பதாதை ஏந்தி சனல் 4 நிறுவனதிற்கு நன்றி முழக்கம்!


இலங்கையில் நடந்த போர்குற்றம் மற்றும் இனப்படுகொலையை வெளி உலகிற்கு கொண்டு வந்து, உலக நாடுகளை சிந்திக்க வைத்த சேனல் 4 நிறுவனத்திற்கு நன்றி தெரிவுக்கும் விதமாக தமிழர்கள் பலரும் சென்னை மெரீனா கடற்கரையில் கூடி நன்றி சேனல் 4 என்று பதாதை ஏந்தி...

சனல் 4 நிறுவனதிற்கு நன்றி முழக்கம் இட்டனர். இந்த புகைப்படங்கள் அனைத்தும் , மற்றும் இதை குறித்த காணொளி பதிவும் சேனல் 4 இலண்டன் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க உள்ளனர் இந்த குழுவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.


Related Posts Plugin for WordPress, Blogger...