உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Tuesday, March 20, 2012

ஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸ்-60- அச்சிடுதல், ஏற்றுமதி செய்தல், மின்னஞ்சல் செய்தல்

ஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸ்-60- அச்சிடுதல், ஏற்றுமதி செய்தல், மின்னஞ்சல் செய்தல்:

முந்தையதொடர்களில் கூறப்பட்டவாறு உருவாக்கிய ஒரு ஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் கோப்பினை மேலேகருவிபட்டையிலுள்ள அச்சிடுவதற்கான குறும்படத்தை தெரிவுசெய்து சொடுக்குவதன்மூலம்அச்சிடுமாறு செய்யமுடியும் . ஆனால் இந்தஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் கோப்பினை அச்சிடும்போது பின்புலவண்ணம் போன்றவைகளையும்கணக்கில் கொண்டு அச்சிட்டால் மட்டுமே அச்சிட பட்ட ஆவணங்களிலும் நாம்எதிர்பார்த்தவாறு  தோற்றம் இருக்கும்  அதனால் மேலே கட்டளை பட்டையிலுள்ள கட்டளைகளில் Tools=>Options =>Open Office.org  => Print=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக

படம்-60-1 
உடன்  படம்-60-1-ல்   உள்ளவாறு தோன்றிடும் OpenOffice.org-Print என்ற உரையாடல் பெட்டியில் தேவையான வாய்ப்புகளைதெரிவு செய்து கொள்க. மேலும் கூடுதலாக Convertcolors to grayscaleஎன்றதேர்வுசெய் பெட்டியையும் தெரிவுசெய்துகொண்டு OK என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கிஇந்த மாறுதல்களை சேமித்துகொள்க
பிரௌவ்ச்சராகஅச்சிடுதல்
பிறகு  மேலே கட்டளை பட்டையிலுள்ள கட்டளைகளில் File=>Print=>என்றவாறு கட்டளைகளைதெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் Printஎன்ற உரையாடல் பெட்டியில்Properties என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக   அதன் பின்னர் தோன்றிடும் Properties என்ற திரையில் படுக்கைவசமாகவா கிடைவசமாகவா(portraitor landscape) என மிகச்சரியாக தெரிவுசெய்துகொள்க
 பின்னர் Printஎன்ற உரையாடல் பெட்டியில் Optionsஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
பிறகுதோன்றிடும் Optionsஎன்ற திரையின் pagesஎன்ற பகுதியில் Brochure, Right page, Leftpage ஆகியவாய்ப்புகளை தெரிவு செய்து கொண்டு OK என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
  பிடிஎஃப் கோப்பாக உருமாற்றுதல்
  ஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் கோப்புதிரையில் மேலே கருவிபட்டையிலுள்ள பிடிஎஃப்கோப்பாக உருமாற்றுவதற்கான குறும்படத்தை தெரிவுசெய்து சொடுக்குவதன் மூலம் பிடிஎஃப்கோப்பாக உருமாற்றம் செய்யமுடியும் அதற்கு பதிலாக மேலே கட்டளை பட்டையிலுள்ளகட்டளைகளில் File =>Export as PDF => என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குகஉடன் விரியும் PDF option என்ற படம்-60-2-ல்உரையாடல் பெட்டியில் உள்ள ஐந்துவகை தாவியின்பொத்தான்களின் வாய்ப்புகளில் தேவையான தாவியின் பக்கத்திற்குசென்று அதில் தேவையானவாய்ப்புகளை தெரிவுசெய்து கொண்டு இறுதியாக Exportஎன்ற பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக  
 படம்-60-2
மிகமுக்கியமாகsecurityஎன்ற தாவியின் பக்கத்தில் உள்ள set openpassword ,set permissionspassword ஆகிய பொத்தான்கள் அனுமதிபெற்றவர்கள்மட்டுமே திறந்து பயன்படுத்திடமுடியும் என்ற பாதுகாப்புசெய்வதற்காக  மிக முக்கிய பங்காற்று கின்றன  இந்தபொத்தான்களை தெரிவுசெய்து சொடுக்கியதும் தோன்றும்   set openpassword என்ற சிறு உரையாடல் பெட்டியில் தேவையான கடவு சொற்களைஇரண்டுமுறை உள்ளீடுசெய்து OK என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. மேலும் இதேsecurityஎன்ற தாவியின் பக்கத்தில் உள்ள மற்ற வாய்ப்புகளை தேவையானவாறு  தெரிவு செய்து கொண்டு OK என்றபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
ப்ளாஷ்கோப்பாக ஏற்றுமதிசெய்தல்
இம்ப்பிரஸின் முக்கியபயனேஅதன்உள்ளடக்கங்கள் அசைவூட்டம் செய்வதில்தான் உள்ளது நாம் மேலேகூறியவகையில் இம்ப்பிரஸின்கோப்பினை ஏற்றுமதிசெய்தால் மற்றஅலுவலக கோப்புபோன்று இதுவும் இருக்குமே தவிர அதில்அசைவூட்டம் ஏதும் இருக்காது.(தேவையெனில் இதனை திரையில் காண்பதற்கு அடோப் ப்ளாஷ் பிளேயரை  http://www.adobe.com/products/flashplayer/  என்ற வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து நிறுவிகொள்க
   பார்வையாளர்கள் அசைவூட்டத்துடன் இந்த இம்ப்பிரஸின் கோப்பினைகாணவும் பயன்படுத்திடவும்   மேலே கட்டளைபட்டையிலுள்ள கட்டளைகளில் File =>Export=>என்றவாறுகட்டளைகளை செயற்படுத்துக பின்னர் தோன்றிடும் திரையில் File Formatஎன்பதன்கீழ்Macromedia Flash (SWF) (.swf)என்ற வாய்ப்பினை அதன்கீழிறங்கு பட்டியலை திறப்பதன்மூலம்தெரிவு செய்து கொண்டு save என்றபொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி கோப்பினை சேமித்துகொள்க 
இணையபக்கமாகஉருமாற்றுதல்  
.பார்வையாளர்கள் இதேகோப்பினை இணையபக்கமாக பயன்படுத்திட மேலே கட்டளைபட்டையிலுள்ள கட்டளைகளில் File => Export=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் தோன்றிடும்திரையில் file type என்பதன்கீழ்HTML Documentஎன்ற வாய்ப்பினை அதன்கீழிறங்கு பட்டியலை திறப்பதன்மூலம்தெரிவுசெய்துகொண்டபின் தோன்றிடும் திரையில் தேவையான வாய்ப்புகளைதெரிவுசெய்துகொண்டு Create என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி கோப்பினைசேமித்துகொள்க
மின்னஞ்சல்செய்தல்
நாம் உருவாக்கிய ஓப்பன் ஆஃபிஸ்இம்ப்பிரஸ் கோப்பினை நண்பர்களுடன் மின்னஞ்சல் மூலம் பகிர்ந்துகொள்வதற்காக  மேலே கட்டளை பட்டையிலுள்ள கட்டளைகளில் File => Send =>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக

படம்-60-3
 உடன் படம்-60-3-ல் உள்ளவாறு விரியும் சிறுபட்டியில் முதல்வாய்ப்பு எந்தஅலுவலகபயன்பாட்டினை பயன்படுத்திகொண்டிருக்கின்றோமோ அதே கோப்பாக மின்னஞ்சல் அனுப்புவதற்கான  பொதுவான கட்டளையாகும்
  இரண்டாவதாக உள்ள  E-mail as OpenDocument Presentationஎன்ற வாய்ப்பு கட்டளையானது பெறுபவர் இம்ப்பிரஸ்கோப்பாகவே பயன்படுத்தி கொள்ள அனுமதிக்கின்றது 
 E-mailas Microsoft PowerPointஎன்றமூன்றாவது வாய்ப்பு பெறுபவர் மைக்கரோசாப்ட் அலுவலக பயன்பாட்டினைபயன்படுத்துவர்எனில் நாம் அனுப்பும் இம்ப்பிரஸ் கோப்பானது .PPTஎன்றபின்னொட்டுடன் உருவாக்கி அனுப்படும் நமக்கும் இந்த கோப்பினை கையாளுவதற்குசிரமமில்லாமல்   இருக்கும் 
 மூன்றாவதாக உள்ள E-mailas PDF,என்றவாய்ப்புிற்கான கட்டளையானது எந்தவொரு பயனாளரும் சுலபமாக திறந்து பார்ப்பதற்கானகோப்பாக உருவாக்கி அனுப்பிடுவதற்கான வாய்ப்பாகும்
 நிற்க இந்த மின்னஞ்சலிற்காக உருவாக்கபடும் *.OTP,*.PPT ஆகிய வகை கோப்புகள் கணினி நினைவக்ததில்சேமிக்காது மின்னஞ்சல் அனுப்புவதற்காக மட்டும் தற்காலிகமாக உருவாக்கி அனுப்பபடும்  என்ற செய்தியை கவனத்தில் கொள்க 
 ஓப்பன்ஆஃபிஸ் இம்ப்பிரஸில் உருவாக்கிய கோப்பினை மைக்ரோசாப்ட்பவர்பாயின்ட்டில் திறந்து கையாளுவதற்காக மேலே கட்டளைபட்டையிலுள்ள கட்டளைகளில் File => Save As=>ன்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் தோன்றிடும் Save As என்றதிரையில் File Type என்பதன்கீழ் MicrosoftPowerPoint 97/2000/XP (.ppt). என்றவாய்ப்பினை அதன்கீழிறங்கு பட்டியலை திறப்பதன்மூலம் தெரிவுசெய்துகொண்டு save என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

படம்-60-4
உடன் படம்-60-4-ல் உள்ளவாறு எச்சிரிக்கை செய்வதற்காகதோன்றிடும்   openoffice.org3.0 என்ற சிறுஉரையாடல்பெட்டியில்keep current format  என்ற பொத்தானை தெரிவு செய்துசொடுக்குவதன்மூலம்  சேமித்துகொள்க .
Related Posts Plugin for WordPress, Blogger...