உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Wednesday, March 28, 2012

விரைவாகத் தமிழில் தட்டச்சிட.


நேற்று இணையத்தில் உலவலாம் என்று கடைக்குச் சென்றேன். அங்கு அந்தக் கடைக்காரர் தமிழில் ஒரு கோப்பு உருவாக்க கணினியோடு போராடிக் கொண்டிருந்தார். ஐந்து நிமிடத்தில் தயாரிக்கவேண்டிய தமிழ்க்கோப்பை முப்பது நிமிடத்தில் தயாரித்தார். அழகி என்னும் தமிழ்த்தட்டச்சு மென்பொருளைப் பயன்படுத்தி மேல்உள்ள எழுத்து அட்டவணைகளில் சுட்டியைக் கொண்டு ஒவ்வொரு எழுத்தாகச் சுட்டி அவர் அந்தக்கோப்பைத் தயாரித்தார். 

அவர் நிலைகண்டு வருந்திய நான் பொங்குதமிழின் மென்பொருளைப் பதிவிறக்கிக் கொடுத்தேன். இணைய இணைப்பின்றியும் பயன்படுத்தத்தக்க அந்தக்கோப்பைப் பயன்படுத்தி தமிங்கில முறையில் எளிதில் அவரால் தட்டச்சிடமுடிந்ததை சில நொடிகளிலேயே பார்த்தேன். அவருக்கு ஒன்றைச் சொல்லிக்கொடுத்த நிறைவோடு வந்தேன்.

தொழில்முறையிலிருப்பவர்களுக்கே தமிழ்த்தட்டச்சு குறித்த விழிப்புணர்வு குறைவாகத்தானே இருக்கிறது..

கணினியில் தமிழ் தட்டச்சு செய்வோர்..


◊ அலுவலகக் கடிதம் உருவாக்குவோர்.
◊ தொழில் முறையில் தமிழ்க்கோப்புகளை தயாரிப்போர்.
◊ ஆய்வேடு, அழைப்பிதழ், சான்றிதழ் அச்சடிப்போர்.
◊ நாளிதழ், மாத, வார இதழ்களில் தமிழ் உள்ளீடு செய்வோர்.


இணையத்தில் தமிழ்த்தட்டச்சு செய்வோர்.


◊ வலைப்பதிவு எழுதுவோர்.
◊ கருத்துரை மட்டும் இடுவோர்.
◊ மின்னஞ்சல் அனுப்புவோர்.
◊ அரட்டையடிப்போர் (சேட்டிங்)
◊ இணையதளத்தில் எழுதுவோர்.
◊ பல்லூடகத்தில்(ட்வைட்டர், பேஸ்புக்,ஆர்குட்) தமி்ழ் எழுதுவோர்.


என தமிழ்த் தட்டச்சு செய்வோர் பலவகையினராக இருக்கின்றனர். கணினியிலும் இணையத்திலும் தமிழ்த் தட்டச்சிடுவோருக்கு ஒருங்குறி (யுனிகோடு) குறித்த அடிப்படை அறிவு இருத்தல் நலமாகும். 


◊ பலரும் சந்திக்கும் ஒரு சிக்கல் (யுனிகோடு) தமிழ் இணையபக்கங்கள் கட்டம் கட்டமாகத் தெரிகின்றன என்பது தான். விண்டோஸ் இயங்குதளங்கள் வைத்திருப்போர் இந்தச் சிக்களை லதா எழுத்துருவை (எனது வலைப்பதிவில் வலதுபுறம் லதா எழுத்துருவைப் பதிவிறக்கிக்கொள்ளலாம்)சேமிப்பதால் தீர்த்துக்கொள்ளலாம்.


◊ தமிழில் விரைவாகத் தட்டச்சிட.


◊ ஏதாவதொரு எழுத்துருவில் தட்டச்சிடத் தெரிந்துகொள்ளவேண்டும்.( பாமினி என்னும் எழுத்துரு இணைய இணைப்பிலும், இணைப்பில்லா நிலையிலும் பயன்படுத்த எளிதாகவுள்ளது.)
 என்.எச்.எம்அழகி ஆகிய தமிழ் யுனிகோடு எழுது மென்பொருள்கள் பரவலான வழக்கில் உள்ளன. இவற்றை நம் கணினியில் நிறுவிக்கொண்டால், தமிழ்99,தமிங்கில முறை, பாமினி, பழைய தட்டச்சு முறை என பல தட்டச்சு முறைகள் கிடைக்கும். இவற்றில் ஏதாவது ஒரு முறையைப் பின்பற்றினால் தமிழ்தட்டச்சு எளிதாகும்.
◊ புலம்பெயர்ந்து வாழ்வோரும் ஆங்கில வழக்கைப் பின்பற்றுவோருக்கும் தமிங்கில முறை எளிதாக இருக்கும்.

இணைய இணைப்பில்லா எழுது மென்பொருள்.

பொங்குதமிழ் வழங்கும் எழுது மென்பொருள் இணைய இணைப்பிலும் இணைய இணைப்பில்லா சூழலிலும் பயன்படுத்த எளிதாகவுள்ளது. இதனை (சேவ் அஸ்) நம் கணினியில் சேமித்துக்கொண்டால் இணைய இணைப்பில்லா நிலையிலும் யுனிகோடு எழுத்துக்களை உருவாக்கிக்கொள்ளமுடியும்.

தட்டச்சு நுட்பங்கள்..

◊ தமிழ், ஆங்கிலம் இருமொழிகளில் தட்டச்சு செய்ய விரும்புவோர், ஆங்கில எழுத்துக்களுக்கான விசை எங்கு இருக்கிறது என்பதையும் அதற்கான தமிழ் எழுத்து என்ன என்பதையும் அறிந்துகொள்ள வேண்டும்.
◊ விசைப்பலகையில் உள்ள விசைகளில் FJ ஆகிய எழுத்துக்களின் கீழ் சிறு கோடு இருப்பதை அறியலாம். இவ்விரு விசைகளிலும் இருகைகளின்ஆட்காட்சி விரலை வைத்துக்கொள்ள வேண்டும்.

◊ (எனக்குத் ஆங்கிலத் தட்டச்சு தெரியாது. ஆனால் தமிழில் விரைவாகத் தட்டச்சு செய்வேன். FJ ஆகிய எழுத்துக்களின் கீழ் உள்ள சிறு கோடைத் தவிர விசைப்பலகையின் எழுத்துக்கள் என்ன? அவை எங்கு உள்ளன என்பது கூட எனக்குத் தெரியாது.) இந்த சிறு கோடுகளின் வலது, இடது, மேல், கீழ் உள்ள எழுத்துக்களை ஒருநாளைக்கு எட்டு விசைகள் என ஒரு மணி நேரம் தட்டச்சிட்டுப் பழகினால் ஒரே வாரத்தில் விரைவாகத் தட்டச்சிடலாம். 


◊ தட்டச்சிடப் பழகும் போதும் fJ ஆகிய விசைகளின் கீழுள்ள கோடுகளைப் பற்றுக்கோடாகக் கொண்டு கணினித்திரையை மட்டுமே பார்க்கவேண்டும். விசைப் பலகையைப் பார்ப்பதைத் தவிர்க்கவும். இவ்வாறு கணினித் திரையை மட்டும் பார்த்து அடிப்பதால் விசைப்பலகையைப் பார்க்கும் நேரம் குறையும்.

◊ விசைப் பலகையைப் பார்க்காமல் எல்லா விசைக்களுக்குமான தமிழ் எழுத்துக்கள் என்ன என்பதை அறிந்து கொள்வது முதல் படிநிலை.
◊ விசைப்பலகையைப் பார்க்காமல் சிறு சிறு சொற்களை அடிப்பது இரண்டாவது நிலை.(பிழை ஏற்பட்டாலும் fJ விசையின் கோட்டைப் பற்றி மேல், கீழ்,வலது, இடது என திருத்திக்கொள்ளலாம்.)
◊ பெரிய தொடர்களைத் தட்டச்சிட்டுப் பழகுவது தட்டச்சு வேகத்தை அதிகப்படுத்தும்.

◊ விரைவாகத் தட்டச்சிடுவதை விட பிழையின்றித் தட்டச்சிட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.


◊ ( வெளியூர்க்காரர்
 - இந்த ஊருக்குச் செல்ல எவ்வளவு நேரம் ஆகும்? 

உள்ளூர்க்காரர்
 - வேகமாப் போன நேரமாகும்
மெதுவாப் போன வேகமாப் போகலாம் என்று..

வெளியூர்க்கார்
 - புரியவில்லையே. புரியுமாறு சொல்லுங்களேன்?

உள்ளூர்காரர்
 - எங்க ஊருக்குச் செல்லும் வழி கரடுமுரடானது. அதில் வேகமாப் போன விழுந்துருவீங்க. மெதுவாப்போன வேகமாப் போகலாம். அதான் அப்படிச் சொன்னேன் என்றாராம்)

மெதுவாகத் தட்டச்சிட்டாலும் பிழையின்றித் தட்டச்சிடுவது தமிழ்த்தட்டச்சினை விரைவாகப் பழகும் அடிப்படை நுட்பமாகும்.


◊ அடுத்து சில அடிப்படை கணினி நுட்பங்களை அறிந்து கொள்வது.

(Ctrl+A - எல்லாம் தேர்ந்தெடு.
Ctrl+s - சேமித்திடு.
Ctrl+x - வெட்டுக.
Ctrl+z - பழைய நிலைக்குத் திரும்பு.
Ctrl+E - வாக்கியத்தை நடுவில் கொண்டு வர.
Ctrl+l- வாக்கியத்தை இடதுபுறம் தள்ள.
Ctrl+R - வாக்கியத்தை வலதுபுறம் தள்ள
Ctrl+B எழுத்தைப் பெரிதாக்க.)


ஆகிய நுட்பங்கள் கணினியிலும், இணையத்திலும் தமிழை உள்ளீடு செய்யும் வழிமுறைகளாகும்.

“பசியோடு இருக்கும் ஒருவனுக்கு மீனை உணவாகத் தருவதைவிட
மீன் பிடிப்பது எப்படி என்று சொல்லித்தருவது சிறந்ததாகும்“
என்பது சீனப் பழமொழி..

ஒருவருக்குத் தமிழில் கோப்பு உருவாக்கிக் கொடுப்பதை விட அந்தக் கோப்பை அவரே உருவாக்கும் வழிமுறையைச் சொல்லிக்கொடுப்பது சிறந்தது.

நானறிந்ததைப் பகிர்ந்து கொண்டேன்..
தாங்களுக்குத் தெரிந்த நுட்பங்களையும் பகிர்ந்து கொள்ளலாமே..
Related Posts Plugin for WordPress, Blogger...