உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Wednesday, March 21, 2012

இணையத்தளம் ஒன்றை குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் தடை செய்வது எப்படி?

இணையம் என்பது கணக்கற்ற பொழுதுபோக்குகளின் உறைவிடம். இணையத்தில் நுழைந்தால் நேரம் போவதே தெரியாமல் இருக்கும். பலருக்கு இணையம் ஒரு போதை போல. வேலைவெட்டி எல்லாம் மறந்து இணையத்தில் மூழ்கி கிடப்பார்கள். அதிலும் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் என்றால் சொல்லவும் வேண்டுமா?


அலுவலகங்களில் கூட பேஸ்புக் பாவிப்பவர்கள் அதிகம். இப்படி அலுவலகங்களில் பேஸ்புக்கில் மூழ்கி இருப்பதால் வேலைகள் தாமதமாகும் இல்லையா? ஆகவே இப்படியான இடங்களில் குறிப்பிட்ட நேரங்களில் நீங்கள் விரும்பும் தளங்களை தடை செய்து விடலாம். அதாவது வேலை அதிகமாக உள்ள நேரங்களில் பேஸ்புக் போன்ற தளங்களை தடை செய்துவிடலாம். அதோடு பெற்றோர்களும் இந்த முறையில் தங்கள் பிள்ளைகள் அடிக்கடி உலாவும் தளங்களை கண்காணித்து தடை செய்துவிடலாம். இது எப்படி என்று பார்ப்போம்.

FocalFilter எனப்படும் மென்பொருள் மூலம் இவ்வாறு குறிப்பிட்ட தளங்களை தடை செய்துவிட முடியும். இந்த மென்பொருளை நிறுவுவதற்கு உங்கள் கணினி Microsoft’s .NET Framework version 4 இனை கொண்டிருக்கவேண்டும். இல்லாவிடில் இங்கு தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள் Microsoft’s .NET Framework version 4

அதன் பின்னர் Focal filter மென்பொருளை தரவிறக்கி கொள்ளுங்கள் FocalFilter

தரவிறக்கியதும் Open செய்யுங்கள்

Open செய்து தோன்றும் விண்டோவில் Edit My Site List என்பதை கிளிக் செய்யுங்கள். கிளிக் செய்ததும் புதிய விண்டோ Open ஆகும்.


அதில் தடை செய்யவேண்டிய இணையதளங்களை சேர்த்துக்கொள்ளுங்கள். சேர்த்த பின்னர் Save என்பதை கொடுங்கள். 
அடுத்து வரும் விண்டோவில் Block for என்பதில் தடை செய்யவேண்டிய நேரத்தை தெரிவுசெய்யலாம். 5 நிமிடம் தொடக்கம் 12 மணிநேரம் வரை தடை செய்யலாம். நேரத்தை தெரிவு செய்துவிட்டு Block My Site List என்பதை தெரிவு செய்தால் நீங்கள் கொடுத்த தளங்கள் தடை செய்யப்பட்டுவிடும்.


குறிப்பிட்ட நேரம் முடிவடைந்ததும் உங்களுக்கு ஓர் எச்சைக்கை தகவல் காண்பிக்கப்படும். மீண்டும் தடை செய்ய விரும்பினால் அதில் Block again என்பதை கொடுத்து தடை செய்துவிடலாம்.

தடை செய்த நேரத்திற்கு முன்னரே குறிப்பிட்ட தளங்களை Unblock செய்ய விரும்பினால் உங்கள் கணினியை Restart பண்ணுங்கள். கணினி Restart ஆகியதும் Popup விண்டோ ஒன்று தோன்றும். அதில் Ok என்பதை தெரிவு செய்துவிட்டால் Unblock ஆகிவிடும்.
Related Posts Plugin for WordPress, Blogger...