உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Friday, March 30, 2012

திருப்பூர் சத்துணவு மையங்களும் மாநகராட்சி வசமாகும்!

திருப்பூர் : ""மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் உள்ள சத்துணவு கூடங்களை, மாநகராட்சி வசம் ஒப்
படைக்க திட்டமிடப்பட்டுள்ளது,'' என திருப்பூர் ஒன்றிய ஆணையாளர் தண்டபாணி தெரிவித்தார்.
திருப்பூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம், தலைவர் சாமிநாதன் தலைமையில் நேற்று நடந்தது. 
ஒன்றிய ஆணையாளர் தண்டபாணி, பி.டி.ஓ., (ஊராட்சி) பூங்கோதை முன்னிலை வகித்தனர்.மங்கலம் புக்குளிபாளையத்தில் ரேஷன் கடை கட்ட, கோவை எம்.பி., நடராஜன் தொகுதி வளர்ச்சி நிதியில் 4.5 லட்சம் ரூபாய் ஒதுக்கியுள்ளார். இதற்கு கூடுதலாக ஏற்படும் செலவு 1.7 லட்சத்தை பொது நிதியில் மேற்கொள்தல்; மேற்குபதி ஊராட்சி கொன்னக்காடு ஆதிதிராவிடர் காலனி யில் 6.2 லட்சம் மதிப்பில் புதிய ரேஷன் கடை கட்டுதல்.கணக்கம்பாளையம் வாஷிங்டன் நகரில் 5.5 லட்சம் மதிப்பில் சாக்கடை கால்வாய் அமைத்தல்; தொர
வலூரில் சமுதாயக்கூடம் அமைத்தல்; ஊராட்சி ஒன்றிய வணிக வளா கத்தின் மேற்பகுதியில் சமுதாயக்
கூடம் அமைத்தல் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.தொடர்ந்து நடந்த விவாதம்:
சாமிநாதன் (தலைவர்): குடிநீர் பற்றாக்குறைக்கு தீர்வு காணும் வகையில் ஒன்றிய பகுதிகளில் 60 ஆழ் குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டுள் ளன. அவற்றை பயன்பாட்டுக்கு கொண்டு வரவும், ஊராட்சிகள் சார்பில் மின் மோட்டார் பொருத்தி செயல்படுத்தவும், ஊராட்சி தலைவர்களுடன் இணைந்து ஒன்றிய கவுன்சிலர்கள் செயல்பட வேண்டும்.

முத்துசாமி (முத்தணம்பாளையம்): ஊராட்சி தலைவர்களுடன் இணைந்து செயல்பட எங்களுக்கு விருப்பம். ஆனால், அவர்கள் யாரும் எங்களை எதற்கும் அழைப்பதில்லை; மரியாதை இல்லாமல் எப்படிச் செல்வது.
தலைவர்: பொது வாழ்க்கை, பொது சேவைக்கு வந்து விட்டோம். நம்மை அழைக்கவில்லை என்று வருந்தக்
கூடாது. நாமே சென்று மக்களுக்கான பணிகளைச் செய்யலாம். குடிநீர் சப்ளை இல்லாமல், மின் கட்டணம் மட்டும் குறையாமல் உள்ளதாக புகார்கள் வரு கின்றன. இதுகுறித்து குடிநீர் வாரியம் மற்றும் மின்வாரிய அலுவலர்களுடன் ஊராட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும். கடந்த முறை அழைக்கப்பட்ட கூட்டத்துக்கு ஊராட்சி தலைவர்கள் யாரும் வரவில்லை என்ற புகாரும் உள்ளது. ஊராட்சி தலைவர்கள் இதுபோன்ற கூட்டங்களில் தவறாமல் பங்கேற்க வேண்டும்.

சிராஜூதீன் (துணை தலைவர்): திருமண உதவி தொகை வழங்கும் பணியில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியையும் ஒன்றிய அலுவலர்கள் பார்க்க வேண்டியுள்ளது. இதனால், தேவையற்ற கால தாமதம் ஏற்படு
கிறது. மாநகராட்சிக்கு உட்பட்ட விண்ணப்பங்களை மாநகராட்சியே பார்க்க வேண்டும். குழப்பங்களை தவிர்க்க பெறப்படும் விண்ணப்பங்களுக்கு ஒப்புகை வழங்க வேண்டும். ஏராளமான மனுக்கள் நிலுவையில் உள்ளன.

தண்டபாணி (ஆணையாளர்): 
மாநகராட்சி பகுதி சார்ந்த மனுக்களை மாநகராட்சி நிர்வாகமே கவனிக்க வேண்டும் என்று கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மனுக்களுக்கு ஒப்புகை வழங்குவதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய முறையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த வாரம் நூற்றுக்கணக்கான பயனாளி
களுக்கு உதவி வழங்கப்பட உள்ளது. மாநகராட்சியில் இணைக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகள்போல், சத்துணவு மையங்களும் மாநகராட்சிக்கு ஒப்படைக்கப்படும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, விவாதம் நடந்தது.

Related Posts Plugin for WordPress, Blogger...