உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Wednesday, March 21, 2012

புகைப்படங்களில் நேர்த்தி .. படம் எடுப்பதற்கு முன் - கேமராக்களை எப்படி பிடிப்பது ? கருவாயன்

படம் எடுப்பதற்கு முன் கேமராவில் நாம் செய்ய வேண்டிய விசயங்களுக்கு முன் நாம் முதலில் சரியாக செய்யவேண்டியது கேமராவை எப்படி பிடிக்க வேண்டும் என்பது தான்..ஒரு படம் நல்ல ஷார்ப்பாக வரவேண்டுமென்றால் கண்டிப்பாக கேமரா ஆடாமல் இருப்பது அவசியம்..

அனைத்து இடங்களுக்கும் நாம் tripod எடுத்து செல்ல முடியாது,அனைவரிடத்திலும் tripod இருக்கும் என்று சொல்ல முடியாது..

எனவே முடிந்த வரை நம் கைகளினால் எப்படியெல்லாம் ஆடாமல் படம் எடுக்க முடியுமோ அதை நாம் சரியாக செய்ய வேண்டும்..

கேமராக்களை பிடிப்பதற்கென்று ஒரு சில வரைமுறைகள் இருக்கின்றது.. ஏனென்றால் அப்பொழுது தான் கேமராக்கள் balance ஆக இருக்கும்.. அப்படி இல்லையென்றால் கண்டிப்பாக படம் தெளிவில்லாமல் தான் வரும்..

சுருக்கமாக சொன்னால் நமது `கைப்பாடு` தான் `ட்ரைபாட்`.

நாம் நினைப்போம் ஏன் ஒரு கையால் படம் எடுக்க முடியாது என்று.. கேமரா ஆடுவது நம்மால் பெரிதாக உணரமுடியாது.. அதே சமயம் zoom அதிகமாக அதிகமாக கண்டிப்பாக ஒரு சின்ன(micro) கை ஆட்டம் கூட படத்தை சொதப்பி விடும்..

அதை படம் எடுத்த பின் சின்ன LCD screenல் பார்த்தால் தெரியாது.. அதை நன்றாக zoom செய்து பார்க்கும் போதோ, பெரிய monitor ல் பார்க்கும் போது தான் நமது தவறு தெரியும்.


சிறிய கேமராக்களை எப்படி பிடிப்பது:

சிறிய கேமரா என்றால் கிட்டதட்ட அனைத்து கேமராக்களிலும் `view finder` இருப்பதில்லை.. இதனால் நாம் படம் எடுப்பதற்க்கு ஒரே வழி `LCD finder`தான்.. அதே சமயம் லென்ஸ் என்பதும் மிக சிறியதாக இருப்பதால் நம்மால் பேலன்ஸாக பிடிப்பதற்கு சிறிய லென்ஸ்கள் உதவாது..

கேமராவை பிடிப்பதற்கு முழு பலமும் நமது shoulder ல் தான் இருப்பதால் கண்டிப்பாக நாம் இரு கைகளையும் சரியாக பயன்படுத்த வேண்டும்.. ஒரு கையால் கண்டிப்பாக படம் எடுக்க கூடாது..

நான் ஒரு சிலரை(பலரை) பார்த்திருக்கின்றேன் , கேமராவை ரெண்டு கையில் பிடிப்பதற்கு கூட வளையாமல் ஒரு கையிலேயே படம் எடுப்பார்கள்.. இந்த மாதிரி ஸ்டைல் , பந்தா எல்லாம் ஒரு நல்ல படத்திற்கு ஒத்து வராது..

முடிந்த வரையில் கேமராவில் இருக்கும் strap ஐ கைகளுக்குள் இருக்கமாக பிடித்து கொண்டு படமெடுப்பது சிறிது நன்மை தரும்.


படங்கள் உதவி vesnakozelj.comDSLR கேமராக்களை எப்படி பிடிப்பது:


DSLR கேமராக்களை பொறுத்த வரையில் லென்ஸ் வெளியே நீண்டிருப்பதால் நமக்கு இயல்பாகவே நல்ல க்ரிப் கிடைத்து விடுகின்றது..

கேமராவும் கொஞ்சம் வெயிட்டாக இருப்பதால் சிறிய கேமராக்களை விட DSLR ல் ஆட்டம் குறைவாக தான் இருக்கும்..

இயல்பான முறையில் கேமராவை பிடித்தல்இந்த படங்கள் அனைத்திலும் ஒரு முக்கியமான விசயம் என்னவென்றால் முழங்கைக்கு ஒரு நல்ல support கண்டிப்பாக தேவை என்பது புரியும்.. ஏதோ ஒரு வகையில் முழங்கைக்கு support இருந்தால் படத்தை ஆடாமல் எடுக்கலாம்..


அடுத்த பகுதியில் கேமராவில் செட்டிங்ஸ் செய்வது எப்படி என்பதை பார்ப்போம்..

நன்றி
கருவாயன்
Related Posts Plugin for WordPress, Blogger...