உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Wednesday, March 21, 2012

உங்கள் பிரச்சனை என்ன உதயகுமார்,

உங்கள் பிரச்சனை என்ன உதயகுமார், அணு உலை ஆபத்தானது அதனால் அதை மூடவேண்டும் அதானே, ஏன் விஞ்ஞானிகளும் மனிதர்கள் தானே, அணு உலை ஆபத்தானதாக இருந்தால் அவர்கள் தங்கள் குடும்பத்தோடு அணு உலை அருகிலேயே தங்குவார்களா ? அல்லது அங்கேயே கிடைக்கும் தண்ணிரைதான் அருந்துவார்களா ? ஏன் இத்தனை வருடம் கல்பாக்கம் அணுமின் நிலையம் நன்றாக தானே இருக்கிறது, சுனாமி மற்றும் பூகம்பத்தையும் தாங்கி இயங்கவில்லையா. சென்னை மற்றும் கல்பாக்க மக்கள் என்ன கேன்ஸர் வந்து மடிந்தாவிட்டார்கள். உங்களுக்கு அணு உலை பற்றிய பாதுகாப்பு பயம்தான் பிரச்சனை என்றால் விஞ்ஞானிகள் உங்களுக்கு தேவையான விளக்கங்கள் கொடுத்துள்ளார்கள் இதற்க்கு மேலும் தமிழக மக்களால் தேர்ந்து எடுக்கபட்ட அரசு அமைத்த குழுவும் அணு உலை பாதுகாப்பானது என்று அறிக்கை கொடுத்துள்ளது. இவை எதையும் நாங்கள் நம்ப மாட்டோம் என்று சொன்னால் உங்கள் நோக்கம் அணு உலை பிரச்சனை அல்ல வேறு ஏதோ ஒரு உள்நோக்கம் என்றுதான் பார்க்கவேண்டி உள்ளது. இந்திய தேசத்தை நீங்கள் அவமானபடுத்துவது போல் நடந்துகொள்வது சரியா ? தமிழக மக்களால் தேர்ந்து எடுக்கபட்ட அரசின் முடிவை நீங்கள் முள்ளிவாய்க்காலோடு ஒப்படிவது சரியா? ஜனநாயக முறையில் போராட உங்களுக்கு உரிமை உள்ளது ஆனால் ஜனநாயக முறையில் தேர்ந்து எடுக்கபட்ட அரசை பற்றி இப்படிபட்ட குற்றசாடை சொல்லுவது உங்களுக்கு நாட்டு பற்று சுத்தமாக இல்லை என்றே நினைக்க தோன்றுகிறது. நிச்சயம் நீங்கள் தேசத்தின் எதிரிகளோடு இனைந்து தேசத்தின் வளர்ச்சியை தடுக்கபார்க்கும் ஒரு கூட்டம் என்று தான் நினைக்க தோன்றுகிறது.
நன்றி Sankara Subra Manian 
Related Posts Plugin for WordPress, Blogger...