உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Saturday, March 24, 2012

இந்தியத் திட்ட நேரம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

                  இந்தியா  ஒரு  பெரிய  நாடு.  எனவே  ஒரே  மாதிரியான    நேரம் தேவைப்படுகிறது.  இல்லையெனில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு நேரம் இருக்கும். இதனால் அதிகப்படியான குழப்பங்கள் ஏற்படும். இந்த குழப்பத்தைத் தீர்க்க அலகாபாத் வழியாகச் செல்லும் தீர்க்க கோடு (82.30 டிகிரி) இந்தியத் திட்ட நேரத்தைக் கணக்கிட எடுத்துக்கொள்ளப்படுகிறது. இதைத் தேர்ந்தெடுக்க காரணம் என்ன?


முதலில் GMT( GREENWICH MEEN TIME)  பற்றித் தெரிந்து    கொள்ளலாம்.      வலது   பக்கத்திலுள்ள போட்டோவானது  'Meridian Line' ல் எடுக்கப்பட்டது  ( Thanks : "National Maritime Museum')    இங்கிலாந்திலுள்ள    கிரீன்விச்    என்ற     இடத்தை    GMT யாகக்    கணக்கிட         1884 ல் INTERNATIONAL MERIDIAN CONFERENCE ல் தீர்மானிக்கப்பட்டது.  MERIDAIAN (LATIN WORD : MERI - MIDDLE,   DIEM - DAY)  என்பது ஒரு கற்பனைக் கோடு.  தீர்க்ககோட்டினை (LONGITUDE)  PRIME MERIDIAN ( '0' டிகிரி LONGITUDE) எனவும் அழைக்கலாம். எனவேதான் முற்பகலை AM (ANTE MERIDIAN)  எனவும் , பிற்பகலை  PM  (POST MERIDIAN)    எனவும் அழைக்கப்படுகிறது.  வடதுருவத்திலிருந்து தென்துருவம் நோக்கிச் செல்லும். '0'   டிகிரி தீர்க்க கோடு   கிரீன்விச்சிலுள்ள    'OLD ROYAL ASTRONOMICAL OBSERVATORY' வழியாகச் செல்கிறது.  எனவே இது உலகநேரமாகக் கணக்கிட எடுத்துக்கொள்ளப்படுகிறது. கிரீன்விச்சில் 'TRANSIT CIRCLE' என்ற தொலைநோக்கி அமைக்கப்பட்டுள்ளது. இதை அமைத்தவர் 'Sir George Biddell Airy" ஆவார்.
     
                   கிடைமட்டமாகச் செல்லும் கோடுகள் அட்சக்கோடுகள் எனவும், செங்குத்தாகச் செல்லும் கோடுகள் தீர்க்க கோடுகள் எனவும் அழைக்கப்படும். தீர்க்க கோடுகள்  மொத்தம்  360 உள்ளன.   ஒரு தீர்க்ககோட்டிற்கும் மற்றொரு தீர்க்ககோட்டிற்கும் இடையே  உள்ள நேர  வித்தியாசம்  4  நிமிடங்கள்.(360 * 4 =1440)   ஒரு   மணி நேரத்திற்கு  60 நிமிடங்கள் (1440/60 = 24 Hrs).
  
                   இந்தியாவில்  WESTERNMOST POINT  குஜராத்   (68  டிகிரியில் அமைந்துள்ளது),     EASTERNMOST POINT அருணாச்சலப் பிரதேசம்       ( 97 டிகிரியில் அமைந்துள்ளது). இரண்டுக்கும்    இடைப்பட்ட இடம் (68 + 97=165 / 2 =82.5) உத்திரப்பிரதேசத்திலுள்ள அலகாபாத்ஆகும். 

                இது 82.5 டிகிரி தீர்க்ககோட்டில் அமைந்துள்ளது. ஒவ்வொரு தீர்க்ககோட்டிற்குமுள்ள நேர வித்தியாசம்  4 நிமிடங்கள். எனவே 82.5 * 4 = 330/60= 5.5 மணி நேரம்  இந்தியத் திட்ட நேரமாகக் கணக்கிட எடுத்துக் கொள்ளப்படுகிறது. இந்தியாவானது கிரீன்விச் நேரத்தில் 5.5 மணி நேரம் கூடுதல் வித்தியாசமுள்ளதால்  இதனுடன்  '+' சேர்க்கப்படுகின்றது. எனவே இந்தியத்திட்ட நேரம்+5.30 ஆகும்
Related Posts Plugin for WordPress, Blogger...