உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Thursday, March 29, 2012

அடுத்தடுத்த நிறுத்தங்களில் அரசு பஸ்களில் திடீர் ஆய்வு

:திருப்பூரில் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து நிறுத்தங்களிலும் அரசு பஸ்கள் நிற்கிறதா; சரியான நேரத்துக்கு இயக்கப்படுகிறதா என அரசு போக்கு வரத்து கழக அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.
திருப்பூரில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில், 252 டவுன் பஸ்கள், 302 மப்சல் பஸ்கள் இயக்கப்படுகின்றன. அவை தவிர, பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திருப்பூருக்கு பஸ்கள் இயக்கப் படுகின்றன. அரசு பஸ்களின் வருவாயை அதிகரிக்க வேண்டிய நிலையில், தனியார் பஸ்களில் இருக்கும் கூட்டம் அரசு பஸ்களில் இருப்பதில்லை. பயணிகளிடம் கனிவாக நடந்து கொள்ளாமல் இருப்பது; பஸ்களை உரிய நிறுத்தங்களில் நிறுத்தாமல் இருப்பது; சில அரசு பஸ் ஊழியர்கள் தனியார் பஸ்களுக்கு சாதகமாக சரியான நேரத்துக்கு இயக்காதது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்து வந்தன.
இந்நிலையில், அரசு பஸ்கள் சரியான நேரத்துக்கு இயக்கப்படுகிறதா; அனைத்து நிறுத்தங்களிலும் நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல் கின்றனவா என ஆய்வு செய்ய போக்குவரத்து கழக உயரதிகாரிகள் உத்தரவிட்டனர். போக்குவரத்து கழக கிளை மேலாளர்கள், அலுவலர்கள், செக்கிங் இன்ஸ்பெக்டர்கள் கொண்ட தனி குழு அமைக்கப்பட்டது. திருப்பூர் வரும் அனைத்து வழித்தடங்களிலும், அனைத்து நிறுத்தங்கள் என 24 இடங்களில் இக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். ஒரு குழுவுக்கு மூன்று பேர் என மொத்தம் 72 பேர் இப்பணியில் ஈடுபட்டனர்.
ஒவ்வொரு நிறுத்தத்துக்கும் பஸ்கள் வரும் நேரம்; போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் ரோட்டோரங்களில் பஸ்கள் நிறுத்தப்படுகிறதா; பயணிகளை பொறுமையாக ஏற்றி, இறக்கி விடுகி றதா; அடுத்தடுத்து வரும் பஸ்கள் குறிப்பிட்ட நேர இடைவெளியில் வருகிறதா என ஆய்வு செய்தனர்.
கண்டக்டரும், டிரைவரும் பயணிகளிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. நேற்று காலை 7.30 முதல் 11.30 மணி வரை, பிற்பகல் 3.00 முதல் 8.00 மணி வரை, ஆய்வு நடந்தது.
போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், "அரசு பஸ்களில் வரும் பயணிகளுக்கு சரியான சேவை சென்றடைய வேண்டும் என்பதற்காக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மாதத்துக்கு ஒருமுறை ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளோம்,' என்றனர்.
Related Posts Plugin for WordPress, Blogger...