உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Monday, March 26, 2012

திருப்பூர் :குழாய் உடைப்பு; பல லட்சம் லிட்டர் குடிநீர் வீண்

திருப்பூர் மாநகராட்சி 25வது வார்டில் பாதாள சாக்கடை பணியின்போது, பிரதான குழாய் மற்றும் வீட்டு இணைப்பு குழாய்கள் உடைக்கப்பட்டதால் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணானது.
திருப்பூர் மாநகராட்சி 25வது வார்டில், குடிசை பகுதி மேம்பாட்டு திட்டத்தில், மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. ராமூர்த்தி நகர் பகுதியில் உள்ள 1,500க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு, அவிநாசி ரோட்டிலுள்ள 18 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. எட்டு நாட்களுக்கு ஒரு முறை சப்பை தண்ணீரும், மாதத்துக்கு ஒருமுறை மேட்டுப்பாளையம் குடிநீரும் வினியோகிக்கப்படுகிறது.

ராமமூர்த்தி நகரின் கிழமேல் வீதி மற்றும் குமார் நகர் கிழக்கு பகுதியில் இருந்து வரும் எட்டு இன்ச் குடிநீர் குழாய் மற்றும் ஜெ.ஜெ., நகர் வழியாக வரும் ஆறு இன்ச் குடிநீர் குழாய், கிளப் ரோடு வழியாக வரும் ஆறு இன்ச் குடிநீர் குழாய் ஆகியவை பல இடங்களில் உடைக்கப்பட்டுள்ளதோடு, 60க்கும் மேற்பட்ட தனியார் வீட்டு இணைப்பு குடிநீர் குழாய்களும் உடைக்கப்பட்டுள்ளன.
இப்பணி மேற்கொண்டவர்களின் கவனக்குறைவு காரணமாக உடைந்ததோடு, இதுகுறித்தும் வெளியிலும் சொல்லவில்லை.

நேற்று, இப்பகுதிக்கு மேட்டுப்பாளையம் குடிநீர் திறந்த விடப்பட்டபோது உடைப்பு ஏற்பட்டிருந்தது வெளியே தெரிந்தது.
குடிநீர் குழாய்களில் பல இடங்களில் ஏற்பட்ட உடைப்பு வழியாக குடிநீர் பீறிட்டது. அக்குடிநீரால், 10க்கும் மேற் பட்ட பாதாள சாக்கடை "மேனுவல்'கள் நிரம்பின. பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பல அடி ஆழ குழிகளும் குடிநீரால் நிரம்பின. கவுன்சிலர் தரப்பில் மாநகராட்சிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மாநகராட்சி தண்ணீர் திறப்பாளரை தவிர வேறு யாரும் வரவில்லை. பல மணி நேர போராட்டத்துக்குபின், அப்பகுதி பொதுமக்களே பிரதான குடிநீர் குழாய்களை அடைத்தனர்.

கவுன்சிலர் உமா மகேஸ்வரி கூறுகையில், ""கடந்த வாரம் பாதாள சாக்கடை பணியின்போது, ஒரு பிரதான குழாய் உடைக்கப்பட்டது. இந்த வாரம் இரண்டு பிரதான குழாய் உடைக்கப்பட்டுள்ளது. குழாய் உடைத்தது குறித்து முன்னதாகவே தெரிவித்திருந்தால், சரி செய்திருக்கலாம். அவர்கள் தவறை மறைத்ததால், தற்போது குடிநீர் வீணாகி, பொதுமக்களுக்கும் கோடை காலத்தில் குடிநீர் பிரச் னையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் யாரும் வரவில்லை,'' என்றார்.
Related Posts Plugin for WordPress, Blogger...