உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Wednesday, March 21, 2012

திருப்பூருக்கு தனிப்பட்ட மின்வினியோக மையம் (ஃபீடர்) தேவை

திருப்பூர், மார்ச் 20: பின்னலாடை தொழிலுக்கு சீரான மின்சாரம் கிடைக்க திருப்பூருக்கு தனிப்பட்ட மின்வினியோக மையம் (ஃபீடர்) தேவை என்று தமிழக அரசுக்கு திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
 ÷இதுகுறித்து அச் சங்கத் தலைவர் ஏ.சக்திவேல் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பது:
 ÷கடுமையான மின்பற்றாக்குறை பிரச்னையை தீர்க்கும் வகையில் கூடங்குளம் அணு மின்நிலையத்தை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது வரவேற்கக் கூடிய நடவடிக்கை. மிகவும் எதிர்பார்க்கப்பட்டிருந்த இந்த முக்கியத் திட்டத்தின் மூலம் மின்சார பற்றாக்குறை பிரச்னைக்கு விரைவில் தீர்வு ஏற்படுவதுடன், அதன்மூலம் தொழிற்சாலைகள், வீடுகள் நிவாரணம் பெறவும் வழிவகை ஏற்படும்.
 ÷இச் சூழ்நிலையில், சர்வதேச சந்தையில் பின்னலாடை ஏற்றுமதியாளர்களுக்கு நிலவும் போட்டியை சமாளிக்கவும், சர்வதேச சந்தையில் நிலைத்திருக்கவும், கடந்த காலங்களில் நிலவிய நெருக்கடிகளிலிருந்து புத்துயிர் பெறவும் திருப்பூர் பின்னலாடை தொழிலுக்கு சீரான மின்சாரம் கிடைக்க திருப்பூருக்கு தனிப்பட்ட மின்வினியோக மையம் (ஃபீடர்) ஏற்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 சைமா வரவேற்பு: கூடங்குளம் அணு மின்நிலையத்தை விரைவில் திறக்கவும், அதை எதிர்ப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் முடிவெடுத்துள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு, தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
 ÷இதுகுறித்து அச் சங்கத் தலைவர் ஏ.சி.ஈஸ்வரன் அறிக்கையில், தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து வரும் மின்பற்றாக்குறை பிரச்னையால் பல மணிநேர மின்தடை நடைமுறையில் உள்ளது. இதனால், வணிகர்கள், தொழிலகங்கள், தொழிலாளர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் பெரும் அவதிக்குள்ளாகினர். இந் நிலையில், தமிழக அரசின் தற்போதைய அறிவிப்பு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 ÷கூடங்குளம் அணு மின்நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை தமிழகத்துக்கு முன்னுரிமை அளித்து வழங்க வேண்டும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Posts Plugin for WordPress, Blogger...