உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Wednesday, March 21, 2012

நீங்கள் பார்வையிடும் இணையத்தளம் பாதுகாப்பானதா என அறிய

நீங்கள் பார்வையிடும்/ பார்வையிடப்போகும் இணையத்தளம் பாதுகாப்பானதா என்பதை உறுதிப்படுத்திவிட்டுத்தான் பார்வையிடுகின்றீர்களா? அந்த தளங்களின் பாதுகாப்பை எப்படி உறுதிப்படுத்திக்கொள்கிறீர்கள்? தனிப்பட்ட நபர்களின் பரிந்துரையின் பேரில் ஒரு தளத்தை நம்பி பார்வையிடுவது பாதுகாப்பானது அல்ல. ஏன் என்றால் இணைய வலைப்பின்னலில் கோடிக்கணக்கான இணையத்தளங்கள் உள்ளன. இவற்றில் பாதுகாப்பான  தளங்களை பிரித்தறிவது கடினம்.


பாதுகாப்பான தளங்களை மாத்திரம் கண்டறிந்து பார்வையிட வேண்டியதன் அவசியம், இணையத்தில் ஏராளமான Spam இணையத்தளங்கள் பரந்து காணப்படுகின்றன. இப்படியான தளங்களுக்குள் நீங்கள் நுழைகின்றபோது உங்களுக்கு தெரியாமலேயே வைரஸ், ஸ்பாம் போன்றன உங்கள் கணினிகளுக்குள் நுழைந்துகொள்கின்றன. அதைவிட உங்கள் தனிப்பட்ட தகவல்களை திருடும் தளங்களும் காணப்படுகின்றன. நல்ல Antivirus மென்பொருளை நிறுவுவதன் மூலம் ஓரளவு பாதுகாப்பு பெறமுடியும்.

சரி! இப்படியான தளங்களை எப்படி அடையாளம் காண்பது. இதற்கு சில Online Tool கள் இருக்கின்றன. அவற்றின் மூல இணையத்தளங்களை Scan செய்து அவற்றின் பாதுகாப்பு தரத்தை அறிந்துகொள்ளலாம்.

Norton Safe Web

Norton Safe Web என்ற இந்த தளம் இணையத்தளங்களின் பாதுகாப்பை அறிவதற்கு சிறப்பான Online Tool ஆக செயற்படுகிறது.

இந்த தளத்துக்கு சென்று Scan பண்ணவேண்டிய தளத்தின் முகவரியை கொடுத்து Enter பண்ணியதும் ஒரு சில நிமிடங்களில் அந்த தளம் பறிய அறிக்கையை தரும்.

இந்த தளம் செல்ல Norton Safe Web

Web of Trust (WOT)

இந்த தளமும் ஒரு பிரபலமான தளமாகும். இணையத்தலங்களின் பாதுக்காப்பை சிறப்பான முறையில் தேடி தருகிறது.
இந்த தளத்தில் இணைய உலாவிகளுக்கான Extension உம் இருக்கிறது. அதை நிறுவிக்கொள்வதன் மூலம் தளங்களை இலகுவாக Scan பண்ணிக்கொள்ளலாம்.

இந்த தளம் செல்ல Web of Trust (WOT)

McAfee Site Advisor

McAfee Site Advisor இன்னுமொரு சிறப்பான Online Tool. 
McAfee Antivirus மென்பொருள் நிறுவனத்தாரின் தளமே இது. இந்த தளத்திற்கு சென்று அதன் SideBar இல் உள்ள “View a Site Report” என்பதில் Scan செய்யவேண்டிய தளத்தின் முகவரியை கொடுத்து Scan பண்ணலாம்.

இந்த தளம் செல்ல McAfee Site Advisor

Online Site Scan

தளங்களின் பாதுகாப்பை அறிந்துகொள்வதற்கான மற்றுமொரு தளம். ஒரு இணையத்தளத்தில் viruses, malware, spyware, Trojans இருக்கின்றனவா என்று Scan பண்ணி சொல்கிறது. 

Scan பண்ணவேண்டிய தளத்தின் முகவரியை கொடுத்து தேடினால் சில நிமிடங்களில் முடிவுகளை தரும்.

இந்த தளம் செல்ல Online Site Scan
Related Posts Plugin for WordPress, Blogger...