உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Saturday, March 24, 2012

Facebookக்காக பிரத்யோகமாக தயாரிக்க பட்ட பிரவுசர்- RockMelt

Rockmelt

 கூகுளிற்கு இணையாக வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு இணைய தளம் பேஸ்புக் தளமாகும். இது கூகுளிற்கு அனைத்து வகையிலும் போட்டியிடும் வகையில் தற்போது தான் மெயில் வசதியை துவக்கியது. தற்போது அதற்காக ஒரு பிரவுசரும் வெளி வந்து உள்ளது. இந்த பிரவுசர் மிகவும் வேகமாக செயல் படுகிறது. இந்த பிரவுசர் இருந்தால் நாம் பேஸ்புக் தளதிர்க்கே செல்ல வேண்டியதில்லை. அனைத்து பேஸ்புக் தகவல்களும் இங்கேயே உள்ளன.
  • எத்தனை பேர் ஆன்லைனில் உள்ளனர். 
  • எத்தனை கருத்துரைகள் நமக்கு வந்துள்ளது. 
  • ஆன்லைனில் உள்ளவர்களின் படங்கள் மற்றும் 
  • டிவிட்டர் தளத்தில் அப்டேட் ஆகியவைகளை இந்த பிரவுசரில்  இருந்தே பார்த்து கொள்ளலாம். 
  • நமக்கு தேவையானதை வெகு சீக்கிரமே தேடி கொடுக்கிறது. தகவல்களை கூகுளில் இருந்தே திரட்டி நமக்கு தருகிறது. 
  • சமூக தளங்களில் பகிர்வதற்கு சுலபமானது.
இந்த பிரவுசரை எல்லா பிரவுசர்கள் டவுன்லோட் செய்வது போல் டவுன்லோட் செய்ய முடியாது. இந்த RockMelt  லிங்கில் சென்று டவுன்லோட் கோரிக்கையை அவர்களுக்கு அனுப்ப வேண்டும். பிறகு உங்கள் மெயிலுக்கு (பேஸ்புக்கில் கொடுத்துள்ள ஈமெயில்) டவுன்லோட் அனுப்புவார்கள் அதில் சென்று தான் நீங்கள் டவுன்லோட் செய்யமுடியும்.


கோரிக்கையை அனுப்பியதும் கீழே இருப்பதை போல உங்களுக்கு மெயில் அனுப்புவார்கள். (மெயில் வரும் வரை காத்திருக்கவும் நான் கோரிக்கையை அனுப்பி இரண்டு நாள் கழித்தே எனக்கு மெயில் வந்தது.)  அதில் உள்ள லிங்கில் க்ளிக் செய்து உங்கள் பிரவுசரை டவுன்லோட் செய்து உபயோகித்து மகிழுங்கள்.
இன்னும் பல தகவல்களை அறிய கீழே உள்ள வீடியோவை க்ளிக் செய்து பாருங்கள்.


நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவருக்கும் பயனடைய உதவும்.  
Related Posts Plugin for WordPress, Blogger...