உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Saturday, March 24, 2012

பிளாக்கரில் SEO வை மேம்படுத்த அட்டகாசமான புதிய வசதிகள்

கூகிள் தனது பிளாக்கர் சேவையில் SEO விசயங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. Search Engine Optimization(SEO) என்பது கூகிள் உள்பட தேடுபொறிகளில் நமது இணையதளத்தை முன்னுக்குக் கொண்டு வருவதற்கும் தேடல் மூலம் நமக்கு அதிக வாசகர்கள் வரவும் செய்யப்பட வேண்டிய வேலைகளாகும். இது நமது தளத்தின் முகவரியிலிருந்தே (URL) ஆரம்பிக்கிறது. பிளாக்கின் Title மற்றும் Description, பிளாக் பதிவுகளின் தலைப்பு, ஒளிப்படங்களுக்கு ALT tag, சுட்டிகளின் தலைப்பு (Link Titles) போன்ற இன்னும் பல இடங்களில் பொருத்தமானவற்றைப் பயன்படுத்துவதே நமது பிளாக்கை மேம்படுத்தும் SEO வேலைகளாகும். இதைப் பொறுத்து தான் கூகிள் உட்பட பல தேடுபொறிகள் தேடலின் போது நமது இணையதளத்தை தரவரிசைப் படுத்தி காட்டுகின்றன. இப்போது வரை இந்த மாதிரி விசயங்களை நாமே நிரல்வரிகளில் தேடி மாற்றியமைக்கும் படியே இருந்தன.


கூகிள் அறிமுகப்படுத்தியிருக்கும் இந்த வசதிகளைப் பெற புதிய பிளாக்கர் டாஷ்போர்ட் பயன்படுத்த வேண்டும். மாறாதவர்கள் Try the Updated Blogger Interface என்பதைக் கிளிக் செய்து செல்லவும். அதில் உங்களுடைய ப்ளாக் பெயரின் மேலெ கிளிக் செய்யவும். இடதுபக்க மெனுவில் Settings என்பதில் கிளிக் செய்தால் Search Preferences என்ற புதிய வசதி இருப்பதைக் காணலாம். அதைக் கிளிக் செய்தால் மூன்று பிரிவுகள் காணப்படும்.


1. Meta Tags:

நமது பிளாக் எதைப் பற்றியது என்ற சுருக்கத்தை தேடலின் போது காட்ட Description பயன்படுகிறது. இதில் Enable Search Description என்பதை டிக் செய்து கொண்டால் நீங்கள் புதிய பதிவுகள் இடும் போது அடியில் Label பகுதியில் Search Description என்று வரும். இதன் மூலம் ஒவ்வொரு பதிவுக்கும் தேடலின் போது என்ன சுருக்கம் காண்பிக்கப் பட வேண்டும் என அமைக்கலாம்.
2.Errors and Redirections

a)Page Not Found - சில நேரம் பிளாக்கரில் வேண்டாத பதிவுகளை நாம் அழித்திருப்போம். ஆனால் அது கூகிள் தேடலில் இருந்து அதன் மூலம் வாசகர்கள் வந்தால் Oops!This page not Found என்று வலை உலவியில் காட்டப்படும். இதை 404 Error என்று சொல்வார்கள். அதனால் வாசகர்கள் எரிச்சலாகி திரும்பி விடுவார்கள். இந்த வசதியின் மூலம் நீங்களே அந்த மாதிரி பக்கங்கள் வந்தால் என்ன காட்டப்பட வேண்டும் என அமைக்கலாம். இதில் நாம் Html/Css நிரல் வரிகளைக் கொண்டு அழகாக ஒரு செய்தியைக் காண்பிக்கவும், குறிப்பிட்ட பதிவு இல்லாததால் பிளாக்கின் முகப்பிற்குப் போகுமாறும் செய்யலாம்.

b)Custom Redirects - இதுவும் மேல்கண்ட சிக்கலின் இன்னொரு தீர்வாகும். சிலர் ஒரே மாதிரி இரண்டு மூன்று பதிவுகள் எழுதியிருப்பார்கள். பின்னர் குறிப்பிட்ட ஒன்றை வைத்துக் கொண்டு மற்றதை அழித்திருப்பார்கள். ஆனால் தேடலில் அழிக்கப்பட்ட முகவரி வாயிலாக வரும் வாசகர்கள் நீங்கள் அழிக்காமல் வைத்திருக்கும் பதிவை படிக்க முடியாமல் Not Found Error மூலம் போய் விடுவார்கள். அதனால் குறிப்பிட்ட முகவரியுடைய பக்கத்தை இன்னொரு பக்கத்திற்கு Redirect செய்வதற்கு இந்த வசதி பயன்படும்.

3.Crawlers and Indexing

a)Custom Robots.txt - கூகிள் தேடுபொறி தனது தேடல் தரவுத்தளத்தில் நமது வலைப்பக்கங்களை ஏற்றிக் கொள்ள Robots என்ற தொழில்நுட்பத்தை வைத்திருக்கின்றன. இந்த செயலுக்கு Crawling and Indexing என்ற பெயர். நமது வலைப்பதிவின் குறிப்பிட்ட பகுதிகளை/பக்கங்களை தேடலில் சேர்க்க வேண்டாம் என்று நினைத்தால் இதில் அமைத்துக் கொள்ளலாம்.

b)Custom Robots Header Tags: - இது மேற்கண்ட வசதியின் அடுத்த பகுதி. இதன் மூலம் முகப்புப்பக்கங்கள், பதிவுகள், தேடல் பக்கம் போன்றவற்றில் Index செய்ய அனுமதிக்கலாமா வேண்டாமா எனக் குறிப்பிடலாம்.

4. Image Alt Tags:

ஒளிப்படங்களை பிளாக்கில் பயன்படுத்தி விட்டு அதற்குப் பொருத்தமான தலைப்பையும் பதிலீட்டுச்சொற்களையும் (Alternative text) Alt tag இல் கொடுக்க வேண்டும். அப்போது தான் கூகிள் அந்த ஒளிப்படத்தின் கருத்தினை தரவேற்றிக் கொள்ள முடியும். இது Edit Html சென்று மாற்றுவதாக இருந்தது. இப்போது படத்தினை அப்லோடு செய்து அதன் மேல் கிளிக் செய்து Properties தேர்வு செய்தால் Title மற்றும் Alt சொற்களை மாற்றுவதற்கான பெட்டி ஒன்று தோன்றும்.

5.Nofollow in Links section:

அடுத்தவர் பதிவுக்கு அல்லது உங்கள் மற்றொரு பதிவுக்கு லிங்க் கொடுக்கும் போது Add "rel=Nofollow" Attribute என்று தோன்றும். Nofollow என்பது அந்த சுட்டியை கூகிள் Index செய்யத் தேவையில்லை என்பதாக குறிப்பிடுவதாகும். மற்றவரின் பிளாக் பதிவின் லின்க்கை நாம் இணைக்கும் போது Backlink கள் மூலமாக மற்றவரின் பிளாக்கிற்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கும். நமது பதிவுக்கு லின்க் கொடுக்கும் போது Nofollow என்பதில் டிக் செய்ய வேண்டாம்.
THANKS TO

 http://ponmalars.blogspot.com/2012/03/seo.html
Related Posts Plugin for WordPress, Blogger...