உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Wednesday, April 04, 2012

வேர்டில் சிறந்த வழிகளில் கையாள வேண்டுமா!


வேர்ட் தொகுப்பில் அடிக்கடி நாம் பயன்படுத்தக் கூடிய சில வசதிகள் குறித்த முழுமையான உதவித் தகவல்களை இங்கு காணலாம்.
1. பைண்ட் அண்ட் ரீபிளேஸ்: Find and Replace என்பது வேர்ட் தொகுப்பில் சில சொற்களை மொத்தமாக எடிட் செய்வது மட்டுமின்றி, ஒரு டாகுமெண்ட்டில் இவற்றின் பயன்பாடு குறித்து அறிந்து கொள்வதற்கும் உதவு கிறது. சொற்கள் மட்டுமின்றி 
பார்மட்டிங், ஸ்பெஷல் கேரக்டர்கள், ஏன் காலியான ஸ்பேஸ் அடையாளங்கள் ஆகியவற்றை எடிட் செய்திடவும் உதவுகிறது. இந்த Find and Replace டயலாக் பாக்ஸ் வேண்டு மென்றால் மெனு செல்லாமல் கீ போர்டி லேயே அதற்கான ஷார்ட் கட் உள்ளது. Ctrl+H அழுத்தினால் இந்த வசதி கிடைக்கும்.
ஸ்பேஸ் கேரக்டரை இதில் எப்படி எடிட் செய்திட முடியும் என்று எண்ணுகிறீர்களா? அதற்கான சந்தர்ப்பம் எப்போது உருவாகும் என்ற கேள்வி எழுகிறதா? சில வேளைகளில் இதனையும் எடிட் செய்திட வேண்டியதிருக்கும். எடுத்துக்காட்டாக ஒருவர் ஒரு வாக்கியம் முற்றுப் பெற்றவுடன் அடுத்த வாக்கியம் முன் இரு ஸ்பேஸ் விட்டு தொடங்குவார். இது பழைய காலத்தில் டைப் ரைட்டர் வகை பார்மட்டிங். இப்போது ஒரு சிலர் இந்த பார்மட் வழியைக் கடைப்பிடித்தாலும் பலர் ஒரு ஸ்பேஸ் விட்டால் போதும் என்று எண்ணுகிறார்கள். அவர்கள் இந்த Find and Replace விண்டோ மூலம் Find What கட்டத்தில் இரு ஸ்பேஸ் இடைவெளியைனை முதலில் ஏற்படுத்தி பின் Replace With கட்டத்தில் ஒரு ஸ்பேஸ் இடைவெளியை ஏற்படுத்தி அமைக்கலாம்.
தேவையற்ற பாரா இடைவெளிகள், டேப் இடைவெளிகள், நீங்களாக அமைத்த லைன் இடைவெளிகள் ஆகிய ஸ்பெஷல் கேரக்டர்களை எப்படி நீக்குவது? இவற்றிற் கான வசதிகள் இந்த விண்டோவில் உள்ளது பலருக்கும் தெரியாது. Find and Replace டயலாக் பாக்ஸில் More என்பதில் கிளிக் செய்திடுங்கள். இந்த கட்டம் விரியும் போது Special என்பதில் கிளிக் செய்யவும். இங்கு எந்த ஸ்பெஷல் கேரக்டர் எடிட் செய்யப்பட வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது இந்த கேரக்டர் இருக்கும் இடத்தில் வேறு எதனையும் அமைக்கப் போவதில்லை. எனவே Replace With என்பதைக் கிளிக் செய்து அங்கு Delete என்பதில் கிளிக் செய்திடவும். அதன் பின் Find Next என்பதில் கிளிக் செய்து அடுத்த எடிட்டிங் வேலையைத் தொடரலாம். இப்படி ஒவ்வொன்றாக தேர்ந்தெடுத்து எடிட் செய்து தேவையற்ற ஸ்பெஷல் கேரக்டர்களை நீக்கலாம்.
2. பாண்ட் கேஸ் மாற்ற: ஒரு சொல்லின் எழுத்துக்கள் பெரிய எழுத்து, சிறிய எழுத்து, முதல் எழுத்து மட்டும் பெரியதாக என வேர்டில் மாற்றலாம். மாற்ற வேண்டிய சொல்லைத் தேர்ந்தெடுத்து ஷிப்ட்+எப்3 அழுத்தினால் இந்த மாற்றங்கள் அடுத்தடுத்து வரும். தேவையானது வந்தவுடன் கீகளிலிருந்து விரல்களை எடுத்துவிடலாம்.
3. வேகமாக பார்மட் செய்திட: வேர்ட் டாகுமெண்ட்டில் ஏதேனும் ஒரு சொல்லினை பார்மட் செய்திட (போல்ட், இடாலிக், அடிக்கோடு) அதனைத் தேர்ந்தெடுத்துப் பின் மெனு பாரில் உள்ள சார்ந்த ஐகானைக் கிளிக் செய்கிறோம். இந்த சிரமம் தேவையில்லை. எந்த சொல்லை பார்மட் செய்திட வேண்டுமோ அதில் கர்சரைக் கொண்டு சென்று நிறுத்திவிட்டுப் பின் தேவையான ஐகானைக் கிளிக் செய்தால் போதும். இதனால் ஷிப்ட் அழுத்தி கர்சரை நகர்த்தி சொல்லைத் தேர்ந்தெடுக்கும் வேலையும் நேரமும் மிச்சமாகிறது.
4. டெக்ஸ்ட் தேர்ந்தெடுக்க இன்னொரு வழி: டாகுமெண்ட்டில் சில நேரங்களில் வரிகள் ஓரமாக ஏதேனும் தேவைப்படாத குறீயீடுகள் அமைந்திருக்கும். அல்லது டாகுமெண்ட்டில் நீளவாக்கில் தேவையற்ற டேட்டாக்கள் அமைக்கப்பட்டிருக்கும். இதனை நீக்க இவற்றை ஒவ்வொன்றாகச் சென்று டெலீட் பட்டனை அழுத்த வேண்டியதில்லை. ஆல்ட் கீயை அழுத்தியவாறு நெட்டு வாக்கில் இந்த கேரக்டர்களைத் தேர்ந்தெடுத்து பின் வழக்கமாக தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட்டில் என்ன என்ன செய்கிறோமோ அனைத்தையும் மேற்கொள்ளலாம்.
5. சொற்களின் எண்ணிக்கை: வேர்ட் டாகு மென்ட் ஒன்றில் எத்தனை சொற்களை நீங்கள் அமைத்திருக்கிறீர்கள் என்று தெரிய வேண்டுமா? தொடர்ந்து அவ்வப்போது இதனை செக் செய்திட வேண்டுமா? இதற்கு View | Toolbars என்று சென்று அதில் Word Count என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இந்த டூல்பாரை அப்படியே மவுஸால் அழுத்திப் பிடித்து ஏற்கனவே இருக்கும் டூல்பாரின் வலது பக்கத்திற்குக் கொண்டு சென்று உங்கள் திரையின் மேலாக விட்டுவிடவும். வேர்ட் கவுண்ட் டூல் பார் அங்கேயே இருக்கும். எத்தனை சொற்களை நீங்கள் பயன்படுத்தி இருக்கிறீர்கள் என்று காட்டும் விண்டோவினையும் நீங்கள் உங்களுக்குத் தேவையான அளவிற்கு மாற்றலாம். இதற்கு Tools | Customize | Toolbars என்று சென்று கிடைக்கும் விண்டோவை மாற்றி அமைத்துக் கொள்ளலாம். கஸ்டமைஸ் டயலாக் பாக்ஸில் இருக்கும்போது அளவை மாற்றும் பணியை மேற்கொள்ளலாம். இனி எப்போது சொற்களின் எண்ணிக்கை தெரிய வேண்டும் என்றாலும் டூல்பாரில் உள்ள Recount பட்டனில் கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில் தெரிந்து கொள்ளலாம்.
Related Posts Plugin for WordPress, Blogger...