உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Tuesday, April 17, 2012

கரைந்து போகும் மின்சாரம்

கரைந்து போகும் மின்சாரம்

நாடு முழுவதும், 21 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறை ஏற்படும் நிலையை மத்திய அரசு உண்டாக்கியுள்ளது.
நிலக்கரித்துறையை கையில் வைத்துள்ள தமிழக காங்கிரசை சேர்ந்த பெண் அமைச்சர் ஜெயந்தி நடராஜன் அமைச்சக செயல்பாடுகள்தான் இந்நிலைக்கு காரணம்.அது மட்டுமல்ல பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியாவை ஒழிக்க வேண்டும் நிலக்கரித்துறையை முற்றிலும் தனியார்[அம்பானி]வசம் ஒப்படைக்க வேண்டும் என்ற நோக்கில் காங்கிரசு செயல்படுவதின் விளைவை நம் மக்கள்தான் இருட்டில் காண[?]வேண்டியுள்ளது.

நாட்டில் உள்ள அனல் மின் நிலையங்களில், 25 மின் நிலையங்களில் இன்னும் நான்கு நாட்களுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே கையிருப்பு உள்ளது. அதேபோல், மற்ற 30 மின் நிலையங்களில் ஏழு நாட்களுக்கு தேவையான நிலக்கரி மட்டும் உள்ளது. டில்லி ராஜ்காட் மின் நிலையம், அரியானா மகாத்மா காந்தி மின் நிலையம், உத்திர பிரதேசம் தாத்ரி மின் நிலையம், மகாராஷ்டிராவின் பார்லி மின்நிலையம் போன்றவற்றில், இன்னும் இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு மட்டும்தான் நிலக்கரி இருப்புஉள்ளதாக, மத்திய மின் ஆணையம் தெரிவித்துள்ளது.


மின்துறையின் முன்னாள் செயலர் அனில் ரஸ்தான் ""இரண்டு நாட்களுக்கு மட்டுமே, நிலக்கரி கையிருப்பு என்பது, மோசமான ஒன்று. குறைந்தபட்சம் 10 நாட்களுக்கு தேவையான நிலக்கரியை மின் நிலையங்கள் கொண்டிருக்க வேண்டும். நாட்டில் உள்ள, 80 சதவீத அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரி சப்ளை செய்யும் கோல் இந்தியா நிறுவனத்திடமே, 142 மில்லியன் டன் நிலக்கரி பற்றாக்குறை உள்ளது. நிலக்கரியை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கு தேவையான போக்குவரத்து வசதி இல்லாததே அதற்கு காரணம். '' என்றார்.

ஆனாலும், இந்த முயற்சி எந்த அளவுக்கு பலன் தரும் என, தெரியவில்லை. மின் நிலையங்களுக்கு நிலக்கரி சப்ளை இல்லையெனில், மின்சார உற்பத்தி குறைந்து, மக்கள் அதிக மின்வெட்டால் அவதிப்பட நேரிடும் என்பதில், எந்த விதமான சந்தேகமும் இல்லை. மின் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் இயக்குனர் அசோக் குரானா "28 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய மின் நிறுவனங்கள் எல்லாம் தற்போது பாதிஅளவு மட்டுமே மின்  உற்பத்தி செய்கின்றன. மின் உற்பத்தி நிலையங்களில், மின்சார உற்பத்தி, நிலக்கரி சப்ளை மற்றும் மின்சார வினியோகம் போன்றவற்றில் ஒழுங்கற்றநிலை காணப்படுகிறது. பற்றாக்குறையை சரிக்கட்ட நிலக்கரியை உடனடியாக இறக்குமதி செய்வது என்பதும், நடக்கிற காரியம் அல்லது அதற்கு மிக அதிகமாக செலவாகும். உள்நாட்டில் வாங்கப்படும் நிலக்கரியை விட, நான்கு மடங்கு விலை அதிகமாக வெளிநாட்டிலிருந்து நிலக்கரியை இறக்குமதி செய்ய வேண்டும்,'' என்றார்.

இருக்கிற வளமான நிலக்கரி படுகைகளை எல்லாம் அம்பானி கூட்டத்துக்கு மன்மோகன் தாரை வார்த்துக்கொடுத்து விட்டார்.
இனி நிலக்கரிக்கு அம்பானி வைத்ததுதான் விலை.அவரிடம் அதிக விலைக்கு அதுவும் நாம் கொடுத்த சுரங்கத்தில் இருந்தே வாங்க வேண்டிய கட்டாயம்.அல்லது அதிக செலவில் வெளி நாடுகளில் இருந்து நிலக்கரியை இறக்குமதி செய்ய வேண்டும்.
Related Posts Plugin for WordPress, Blogger...